?????? ?????? ?????????? ??????????????
?????? ?????? ?????????? ?????? ???????????. ?????? ????? ??????? ??????????????..
?????????? ?????????? ????

??????????????? ????????, ??????????????? ?????????? ????????? ??????????
???????? ??????? 200 ??????????????? ???????

???????? ??????????
பந்தை சேதப்படுத்தி சின்னாபின்னமான ஆஸி கிரிக்கெட் அணி
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தலைவர் ஸ்மித்,துணைத் தலைவர் வார்னர் இருவரும் பதவி விலகி உள்ளனர். தற்போது…
????????????, ?????? ?????????? ???????? ?????? ???????????. ?????? ????? ????????????, ???????? ??????????????.
பந்தை சேதப்படுத்தி சின்னாபின்னமான ஆஸி கிரிக்கெட் அணி
Posted : ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 25 , 2018 05:41:14 IST
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தலைவர் ஸ்மித்,துணைத் தலைவர் வார்னர் இருவரும் பதவி விலகி உள்ளனர். தற்போது கேப்டவுனில் நான்காவது நாளாக நடைபெற்றுவரும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்டில் இவர்கள் விக்கெட் கீப்பர் டிம் பைன் தலைமையில் விளையாடுவார்கள். காரணம்: ஸ்மித்தும் இன்னொரு ஆட்டக்காரருமான பேங்க்ராப்டும் மூன்றாவது நாள் பந்தை உப்புத்தாள் போன்ற ஒரு பொருளால் தேய்த்து ஸ்விங் ஆக வைக்க முயற்சி செய்ததுதான். பேங்க்ராப்ட் செய்த வேலை காமிராவில் பதிவாகிவிட்டது. இதை அடுத்து அன்று மாலையே இருவரும் தவறு செய்ததை ஒப்புக்கொண்டனர்.
“ பெரிய தவறு செய்துவிட்டேன். இது முக்கியமான ஆட்டம். ரிவர்ஸ் ஸ்விங் ஆனால் நன்றாக இருக்கும் என்று நினைத்தோம். ஆனால் இது பெரிய தவறு. எங்களுக்கு அவமான மாக இருக்கிறது. என் தலைமையில் நடந்த முதல் தவறு இது... மன்னித்துவிடுங்கள்..” என்று பத்திரிகையாளர்களிடம் கூறினார். ஸ்மித். ஆனால் கிரிக்கெட் உலகம் அதிர்ச்சி அடைந்துள்ளது. அணியின் முன்னணி வீரர்கள் கூடிப்பேசித்தான் இதைச் செய்தோம். எங்கள் பயிற்சியாளருக்கு இதில் தொடர்பு இல்லை என்கிறார் ஸ்மித்.
பிரச்னை பெரிதாகிவிட்டது. ஆஸ்திரேலிய பிரதமரே தவறு செய்தவர்களைத் தண்டிக்க வேண்டும் என்று குரல் எழுப்பி உள்ளார். எனவே தான் ஆட்டத்தின் இடையிலேயே தலைவர் பதவியில் இருந்து ஸ்மித் விலகி இருக்கிறார். அந்நாட்டைப்பொறுத்தவரை இது தேசிய அவமானம்!
எவ்வளவு மிகச்சிறந்த ஆட்டக்காரர் ஸ்மித்! வெல்ல வேண்டும் என்ற ஆசையில் இது கணவான்களின் விளையாட்டு என்பதை அவர் மறந்தது ஏன்?
|