???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 பழனிசாமி நீக்கத்திற்கும் பாஜகவிற்கும் தொடர்பு இல்லை: அமைச்சர் ஜெயகுமார் 0 பண்ருட்டி ராமச்சந்திரன்,செங்கோட்டையன், ஜெயக்குமாருக்கு புதிய பதவி! 0 சேதுமுத்திரத் திட்டத்திற்காக ராமர் பாலத்தை அகற்றமுடியாது: மத்திய அரசு 0 டிடிவி தினகரன் அணியில் இருந்து நாஞ்சில் சம்பத் திடீர் விலகல்! 0 சந்திரபாபு நாயுடு செய்ததை போல தமிழக முதல்வரால் செய்ய முடியுமா?: அ. ராசா கேள்வி 0 20 பைரஸி இணையதளங்கள் முடக்கம்: தயாரிப்பாளர் சங்கம் நடவடிக்கை 0 அதிமுகவிலிருந்து கே.சி.பழனிச்சாமி நீக்கம் 0 பெண் பத்திரிக்கையாளர் அவமதிப்பு: மன்னிப்பு கேட்டார் அமைச்சர் விஜயபாஸ்கர் 0 சென்ற ஆண்டின் நகலாக இந்த ஆண்டு பட்ஜெட்: கமல் கருத்து 0 மா.அரங்கநாதன் இலக்கிய விருது! 0 தினகரன் அறிமுகப்படுத்திய கொடிக்கு எதிராக மனு தாக்கல் 0 குரங்கணி தீ விபத்து: பலி எண்ணிக்கை 16ஆக உயர்வு 0 பஞ்சாப் ஆம் ஆத்மி தலைவர் ராஜினாமா! 0 ஜிஎஸ்டியால் தமிழகத்துக்கு வருவாய் அதிகரிப்பு: நிதி நிலை அறிக்கை 0 சேது சமுத்திர திட்டத்திற்காக ராமர் பாலத்தை அகற்ற முடியாது - மத்திய அரசு!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

பக்கிங்காம் தடுப்பணையில் பராமரிப்பு இல்லை: உவர் நிலமாக மாறிய விவசாய நிலங்கள்

Posted : சனிக்கிழமை,   ஜுலை   22 , 2017  01:57:07 IST


Andhimazhai Image

மரக்காணம் பக்கிங்காம் கால்வாய் அருகில் கந்தாடு, வட அகரம், வண்டிப்பாளையம், தேவிக்குளம், ஆத்திக்குப்பம், காளியாங்குப்பம், செய்யாங்குப்பம், ஊரணி உள்பட 20க்கும் மேற்பட்ட விவசாய கிராமங்கள் உள்ளது. இங்கு சுமார் 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நெல், மணிலா, தர்பூசணி, தென்னை, கேழ்வரகு, கரும்பு போன்ற பயிர்கள் நடவு செய்யப்படுகிறது. இப்பகுதியில் சிறப்பாக நடைபெற்று வந்த விவசாயம் தற்போது நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததால், விளை நிலம் உவர் நிலமாக மாறுதல் போன்ற காரணங்களால் விவசாய தொழில் நலிவடைந்து வருவதாக விவசாயிகள் கூறுகின்றனர்.

 

இங்குள்ள பக்கிங்காம் கால்வாயில் கந்தாடு ஊராட்சிக்குட்பட்ட முதலியார்பேட்டைக்கும், மரக்காணம் பேரூராட்சிக்குட்பட்ட காக்காப்பள்ளம் கிராமத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் சுமார் 150 ஆண்டுக்கு முன் ஆங்கிலேயர் காலத்தில் 50க்கும் மேற்பட்ட கதவுகளுடன் தடுப்பணை கட்டப்பட்டது. இப்பகுதியில் ஒவ்வொரு மாதமும் அமாவாசை மற்றும் பவுர்ணமி நேரங்களில் கடல் நீரானது முகத்துவாரம் வழியாக பக்கிங்காம் கால்வாய்க்கு செல்கிறது. இந்த உப்பு நீரானது விளை நிலங்களில் கலக்காமல் இங்குள்ள தடுப்பணை தடுத்து நிறுத்தி வந்தது. பருவ மழைக்காலத்தில் பெய்யும் மழை நீரானது வீணாக கடலில் கலக்காமல் தடுப்பணையின் தெற்கு பகுதியில் தேங்கி நிற்கும். மழை நீரால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து விடும். இந்த நீரையே பல கிராம விவசாயிகள் தொட்டி ஏற்றம் மூலம் விவசாயத்திற்கு பயன்படுத்தி வந்தனர்.

 

இதுபோல் பல மாதங்கள் வரை ஏரி போல் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தேங்கி நிற்கும் நீரில் மீன், நண்டு, இறால் அதிகளவில் வளர்ந்து இருக்கும். இதை பொதுமக்கள் பிடித்து  வாழ்க்கை நடத்தி உள்ளனர். பல ஆயிரம் ஏக்கரில் விவசாயமும் சிறப்பாக நடந்து விவசாயிகளின் வாழ்க்கையும் உயர்ந்துள்ளது.

வரலாற்று சிறப்புமிக்க தடுப்பணையை கடந்த 35 ஆண்டுக்கும் மேலாக தமிழக அரசுகள் சரியான முறையில் பராமரிக்கவில்லை. இதனால் தடுப்பணை முற்றிலும் சேதமடைந்து விட்டது. இதன் காரணமாக கடல் நீர் விவசாய நிலப்பகுதிக்கு சென்று விட்டது. பருவ மழைக்காலத்தில் பெய்யும் மழை நீரானது தேக்கி வைக்க முடியாமல் கடலில் சென்று வீணாகக் கலந்து விடுகிறது.

 

இதுபோன்ற காரணங்களால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்டு விளை நிலங்களும் உவர் நிலங்களாக மாறி விவசாய தொழில் முற்றிலும் அழியும் நிலையில் உள்ளதாக விவசாயிகள் வேதனையுடன் கூறுகின்றனர். இந்தத் தடுப்பணை பொதுமக்களின் போக்குவரத்துக்கும் பயன்பட்டுள்ளது.

 

எனவே இப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி மரக்காணம் பக்கிங்காம் கால்வாயில் சேதமடைந்துள்ள தடுப்பணையை சரிசெய்ய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...