அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தமிழகத்தில் 25ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு! 0 இந்துத்துவா பற்றி சர்ச்சை பதிவு; கன்னட நடிகர் சேத்தன் குமார் கைது 0 விவசாயிகளுக்கு தலா ரூ.5 லட்சம் பரிசு! 0 ரேஷன் கடைகளில் இனி கம்பு, கேழ்வரகு: வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு 0 பட்ஜெட் உதயசூரியனைப் போன்று ஒளியூட்டக்கூடியதே தவிர மின்மினிப்பூச்சி அல்ல: முதல்வர் ஸ்டாலின் 0 குடும்பத்தலைவிக்கு ரூ.1000 அல்ல; ரூ.29,000 வழங்கவேண்டும்: அண்ணாமலை 0 தகுதிவாய்ந்த குடும்பத் தலைவிகளா? எடப்பாடி பழனிசாமி விமர்சனம் 0 தமிழ்நாட்டு வரும் வருமானம் செலவு: முழு விவரம் 0 மகளிர் உரிமைத் தொகை, காலை உணவு விரிவாக்கத் திட்டம்: பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் என்னென்ன? 0 பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிவருகிறார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 0 லண்டன் இந்திய தூதரகத்தில் காலிஸ்தான் கொடி ஏற்றம்! 0 தலைமறைவாக இருந்த கன்னியாகுமரி பாதிரியார் பெனடிக் ஆன்டோ கைது 0 ரஜினிகாந்த் மகள் வீட்டில் பல லட்சம் மதிப்பிலான நகைகள் கொள்ளை 0 அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் முடிவை வெளியிடக்கூடாது: உயர்நீதிமன்றம் 0 ராகுல்காந்தி வீட்டில் குவிந்த டெல்லி போலீஸ்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

பபூன்: திரைவிமர்சனம்!

Posted : சனிக்கிழமை,   செப்டம்பர்   24 , 2022  12:33:23 IST


Andhimazhai Image

நாம் விரும்புவது மாதிரியெல்லாம் வாழ்க்கை அமைந்துவிடாது என்பதை ஒருவரின் வாழ்க்கை நிகழ்வுகளை வைத்து சொல்ல முற்படும் திரைப்படமே பபூன்.


நாயகன் வைபவ் (குமரன்) கூத்தில் பபூன் வேஷம் போடக் கூடியவர். அவருடைய ஆருயிர் நண்பர் ஆந்தகுடி இளையராஜாவும் (முத்தையா) கூத்து ஆடக்கூடியவர். வாழ்க்கையில் எப்படியாவது உயர்ந்த இடத்திற்கு வர வேண்டும் என நினைக்கும் நாயகன் பரம்பரை பரம்பரையாக செய்து வந்த கூத்து தொழிலை விட்டுவிட்டு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். அதற்கு பணம் தேவைப்படுவதால்  ஓட்டுநராக வேலைக்குச் சேர்கிறார் நண்பருடன் சேர்ந்து.


முதல் நாளிலேயே இவர்கள் ஓட்டும் வண்டியில் உப்புக்குப் பதிலாக போதைப் பொருளை வைத்து அனுப்புகிறார்கள். இதை அறியாமல் வண்டியை ஓட்டி வரும் குமரனும் முத்தையாவும் காவல் துறையிடம் சிக்குகின்றனர். இதற்குப் பின்னர் இருவரின் வாழ்க்கையும் என்ன ஆனது? போதைப்பொருள் கடத்தும் கும்பல் யார்? அதற்குப் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பதை சொல்வதே படத்தின் மீதிக்கதை.


படத்தின் தொடக்கத்திலேயே தமிழக கடற்கரை பற்றி சொல்லப்படும் தகவல்கள், நசிந்து வரும் கூத்துக் கலைஞர்களின் வாழ்க்கை போன்றவை படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துவிடுகிறது. இந்த எதிர்பார்ப்பை படம் முழுக்க கொண்டு செல்ல முற்பட்டிருக்கிறார் அறிமுக இயக்குநர் அசோக் வீரப்பன்.


அதேபோல் சமகால அரசியல், ஈழ அகதிகளின் அவல நிலை, காவல் துறையின் எதேச்சதிகாரம், கடற்கரையையொட்டி நடக்கும் போதைப்பொருள் கடத்தால் என பல்வேறு விஷயங்களை இயக்குநர் பேச முற்பட்டிருந்தாலும், அதில் சில போதாமைகள் இருப்பதை உணர முடிகிறது. திரைக்கதையில் இயக்குநர் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம்.


நாயகனாக வரும் வைபவ் நடிப்பில் எந்த வித்தியாசமும் தெரியவில்லை. வழக்கமான நடிப்பு. இதற்கு நேர் எதிரானது ஆந்தக்குடி இளையராஜாவின் நடிப்பு. தனது லாவகமான நடிப்பால் அவரே கவனம் பெறுகிறார். ஈழ அகதியாக வரும் அனகா ஈழத்தமிழில் சரியாக பேசி நடித்திருக்கிறார்.  ஜோ.ஜோ.ஜார்ஜ், ஜெயபாலன், ஆடுகளம் நரேன் ஆகியோரும் குறைணாத அளவிற்கு நடித்துள்ளனர்.


சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசையும் பாடலும் படத்திற்கு பெரும் பலம் எனலாம். சந்தோஷ் நாராயணனும் ஆந்தக்குடி இளையராஜாவும் சேர்ந்து பாடியுள்ள “மடிச்சு வச்ச வெத்தல” பாடல் தாளம் போட வைக்கிறது. தூத்துக்குடி, நாகப்பட்டினம் போன்ற கடற்கரை பகுதியை இவ்வளவு அழகாக யாரும் ஒளிப்பதிவு செய்யவில்லை என்று சொல்லும் அளவிற்கு ஒளிப்பதிவாளர் தினேஷ் புருஷோத்தமனின் உழைப்பு மெச்ச வைக்கிறது.
 

 “தண்டிக்கனும்னா மட்டும் உங்க சட்டத்துல இவ்வளவு செக்‌ஷன தேடுறீங்களே. எங்களுக்கு என்னென்ன உரிமை இருக்குன்னு உங்க சட்டம் சொல்லுதுன்னு தெரியுமா?”, “துரோகத்தால பல சாம்ராஜ்யங்களே அழிச்சிருக்கு. நாமெல்லாம் எம்மாத்திரம்?”, “பேப்பர்ல வர போட்டோவை காலையில பாத்தா மதியம் மறந்துருவாங்கல்ல”, “சினிமால நடிச்சாதான் அரசியல்ல பெரிய ஆளா வரமுடியும்” என்பது போன்ற வசனங்கள் இயக்குநரின் உழைப்பைக் காட்டுகிறது.
 

போதைப் பொருள் கடத்தல் என்றாலே சர்வதேச பின்புலம், சாகச நாயகன், 2கே கிட்ஸ் போன்ற உளறல்கள் இல்லாமல் நடப்பதை யதார்த்தமாகப் பேசியதால் பபூன் அவசியம் பார்க்க வேண்டிய திரைப்படம்.



 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...