![]() |
வாராக் கடன்களை சமாளிக்க BAD BANK திட்டம் - ரிசர்வ் வங்கிPosted : ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 17 , 2021 08:12:23 IST
வங்கிகளின் வாராக் கடன்களை சமாளிப்பதற்காக, BAD BANK எனும் புதிய நடைமுறையை அமல்படுத்த ரிசர்வ் வங்கி தயாராக இருப்பதாக, அதன் ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார்.
பல்கிவாலா நினைவு சொற்பொழிவு நிகழ்ச்சியில் பேசிய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ், நிதித்துறையில் ஏற்பட்டுள்ள வாராக் கடன் பிரச்சனைகள் குறித்து நீண்ட கலந்தாலோசனை நடைபெற்று வருவதாக கூறினார்.
அதன்படி நாட்டில் உள்ள வங்கிகளின் சொத்துகளை மறுசீரமைப்பு செய்யும் வகையில், "வாராக் கடன்கள் ஒருங்கிணைப்பு வங்கி" எனும் நடைமுறையை செயலபடுத்த ஆலோசனை நடைபெறுவதாக தெரிவித்தார்.இதன்மூலம் அனைத்து வங்கிகள் மற்றும் நிதித்துறை நிறுவனங்களின் வாராக்கடன்களையும் ஒருங்கிணைத்து தள்ளுபடி விலையில் வாங்கி,அதனை பிற முதலீட்டாளர்களுக்கு நல்ல விலைக்கு விற்கும் முயற்சியில் ரிசர்வ் வங்கி இறங்கவிருப்பதாக குறிப்பிட்டார்.
வங்கிகள், நிதி நிறுவனங்களின் செயல்பாடுகளை உயர்த்துவது தொடர்பாக, வரும் வாரங்களில் ரிசர்வ் வங்கி புதிய அறிவிப்புகளை வெளியிடும் என்றும் சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்.
|
|