அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 50 ஆண்டுகளுக்கு முன்பு தொலைந்த பார்வதி தேவி சிலை கண்டுபிடிப்பு! 0 எஸ்.பி. வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கை விசாரிக்க தடையில்லை: உயர் நீதிமன்றம் 0 மூதாட்டி வீட்டு வாசலில் சிறுநீர் கழித்த ஏபிவிபியின் முன்னாள் தேசிய தலைவர் மீதான வழக்கு ரத்து 0 உயிரிழந்த ராணுவ வீரர் லட்சுமணன் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிதியுதவி! 0 பயங்கரவாத தாக்குதல்: தமிழக வீரர் உட்பட 3 பேர் வீர மரணம் 0 மிருகங்களால் கூட உண்ண முடியாத உணவு; கதறி அழுத போலீஸ்! 0 எட்டாவது முறை பீகார் முதலமைச்சராகப் பதவியேற்றார் நிதிஷ்குமார்! 0 பிளவுகளைக் கடந்து நிச்சயமாக அதிமுக ஒன்றிணையும் – சசிகலா 0 ஒன்றாகத் தேர்வு எழுதி, ஒன்றாகத் தேர்ச்சி பெற்று, அரசு வேலைக்கு செல்லும் தாய் – மகன்! 0 பிரியங்கா காந்திக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதி! 0 போதைப் பொருள் விற்பவர்கள் சொத்துகள் முடக்கப்படும் – முதலமைச்சர் 0 நிதிஷ் குமார் செய்தது நம்பிக்கை துரோகம்: பா.ஜ.க. 0 கள்ளக்குறிச்சி கலவர வழக்கில் கைதான 64 பேருக்கு நிபந்தனை ஜாமீன் 0 அரசியல் பேச ஆளுநர் மாளிகை கட்சி அலுவலகம் அல்ல: சிபிஐ(எம்) கண்டனம் 0 முல்லை பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது: மு.க.ஸ்டாலின் பதில்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

பேச்சலர்: திரைப்பட விமர்சனம்!

Posted : சனிக்கிழமை,   டிசம்பர்   04 , 2021  11:08:38 IST


Andhimazhai Image

பெங்களூரில் ஐடி நிறுவனத்தில் வேலை பார்க்கும் படத்தின் கதாநாயகன் டார்லிங்கும் (ஜி.வி.பிரகாஷ் குமார்) கதாநாயகி சுப்புவும் (திவ்யபாரதி) சந்தர்ப்ப சூழலால் லிவிங் டுகெதரில் வாழ நேர்கிறது. இது காதலாக மாற, இருவரும் உடலால் நெருக்கமாகின்றனர். இதில் திவ்யபாரதி கருவுறுகிறார். இந்த விஷயம் வெளியில் தெரிந்தால் பெயர் கெட்டுப்போகும் என நினைக்கும் கதாநாயகன் அந்த கருவைக் கலைக்க முனைகிறார். அதற்கு கதாநாயகி சம்மதித்தாரா? இல்லையா?. கடைசியில் இருவரும் சேர்ந்தார்களா? இல்லையா? என்பதே பேச்சலர் படத்தின் கதை.

 
படத்தின் டைட்டிலுக்கு ஏற்ப கூத்தும் கொண்டாட்டமுமாக படம் தொடங்குகிறது. அது போகப்போக குறைந்துவிடுகிறது. ஜி.வி.பிரகாஷின் தோற்றம் ரசிக்கும் விதத்தில் இருக்கிறது. ஆனால், அவர் பாத்திரத்தின் குணாதிசயத்தைச் சொல்வதில் இயக்குநர் சதீஷ் செல்வகுமார் இன்னும் மெனக்கெட்டிருக்கலாமோ என்று தோன்றுகிறது. அது சற்று குழப்பமானதாகவே நீடித்துவிடுகிறது.

 
கதாநாயகி திவ்யபாரதியின் பாத்திரம் சரியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் “நடுவிரலை”காட்டுவதற்கு வலுவாக கைகொடுத்திருக்கிறது. காதல் காட்சிகளிலும், எமோஷனல் காட்சிகளிலும் திவ்யபாரதி அசத்தியிருக்கிறார். அவருக்கு இது முதல் படம் என்றே தெரியவில்லை.

 
ஜி.வி.பிரகாஷின் நண்பர்களாக அருண், பகவதி பெருமாள் மற்றும் விஜய் முருகன் உண்டு. படத்தின் இடைவெளிக்குப் பிறகு வரும் முனீஸ்காந்த் மற்றும் நண்பர்களின் காமெடி படத்தை கலகலப்புடன் கொண்டு செல்கிறது. இயக்குநர் மிஷ்கின் கூட சில காட்சிகளில் வந்து செல்கிறார். நிறைய இடங்களில் லாஜிக் மிஸ். இடைவெளிக்கு முன்பும், பின்பும் சீரியல் போல் படம் நீண்டு சொல்கிறது. “பச்சிகளாம் அம்மா பறவைக்கெல்லாம்” என்ற பாடல் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையில் ரசிக்கும்படியாக உள்ளது. பின்னணி இசையில் அசத்தியிருக்கிறார் சித்துகுமார்.


சமகால பேச்சலர் வாழ்க்கை, காதல், காமம், கர்ப்பம் என படத்தின் கதை அடுத்தடுத்த கட்டத்திற்கு நகர்ந்தாலும் ஏதோ குறைவதுபோல் தோன்றுவதைத் தவிர்க்க முடியவில்லை! காதலில் எதிர்பாராதவிதமாக ஏற்படும் கருவுறுதலைக் குற்ற உணர்ச்சியுடனோ, கழிவிரக்கத்துடனோ இதுவரையிலான தமிழ்த் திரைப்படங்கள் பேசிவந்திருக்கின்றன. ஆனால், பேச்சலர் படத்தின் கிளைமாக்ஸ் அதற்கு முற்றிலும் மாறுபட்டது. அதனாலேயே இந்தப் படம் வரவேற்கலாம்!


தா.பிரகாஷ் 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...