???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 உலக அளவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 64 ஆயிரத்தை தாண்டியது! 0 மோடியின் வேண்டுகோளால் மின்சார கட்டமைப்பில் இன்று பாதிப்பு உண்டாகும்: ஜெய்ராம் ரமேஷ் 0 இந்தியாவில் 21 - 40 வயதுக்கு இடைப்பட்டவர்களே 42% கொரோனாவால் பாதிப்பு 0 இன்று முதல் மதியம் 1 வரை மட்டுமே கடைகள் திறந்திருக்க அனுமதி 0 துபாயில் இருந்து வந்த நபரால் 11 பேருக்கு கொரோனா 0 கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண் மருத்துவருக்கு ஆரோக்கியமான குழந்தை பிறந்தது! 0 தமிழகத்தில் கொரோனாவுக்கு 5 பேர் உயிரிழப்பு 0 விலங்கோடு மக்கள்… கால்நடை மருத்துவர் வே.ஞானப்பிரகாசம் எழுதும் பணி அனுபவத் தொடர்-5 0 விலங்கோடு மக்கள்… கால்நடை மருத்துவர் வே.ஞானப்பிரகாசம் எழுதும் பணி அனுபவத் தொடர்-4 0 பாசக்கார மனிதர்கள்! 0 இந்தியாவில் கொரோனா பாதிப்பு 2500-ஐ கடந்தது! 0 இரட்டை குழந்தைகளுக்கு கொரோனா- கோவிட் என பெயர் சூட்டிய பெற்றோர்! 0 ஊரடங்கு காலத்தில் பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை அதிகரிப்பு 0 டார்ச்லைட்டுக்கே பிரதமர் இப்போதுதான் வருகிறார்: கமல் 0 மூடநம்பிக்கையை வளர்க்கும் விதமாக பிரதமர் பேசுகிறார்: கார்த்தி சிதம்பரம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

பாரம்: திரைப்பட விமர்சனம்

Posted : சனிக்கிழமை,   பிப்ரவரி   22 , 2020  01:48:31 IST


Andhimazhai Image
வயது முதிந்து நடமாட முடியாமல் இருப்பவர்களை அவர்களது உறவினர்களே கொலை செய்யும் கொடூரத்தை பேசுகிறது “பாரம்”. கடந்த ஆண்டு தமிழின் சிறந்த படத்துக்கான தேசிய விருது பெற்ற இப்படத்தை இயக்குநர் வெற்றிமாறன் வெளியிட்டிருக்கிறார். ப்ரியா கிருஷ்ணசாமி இயக்கியிருக்கிறார்.
 
நிறுவனம் ஒன்றில் பாதுகாவலராக பணிபுரியும் கருப்பசாமி, பெற்ற மகனுடனான மனக்கசப்பு காரணமாக, தனது தங்கை வீட்டில் இருக்கிறார். தங்கையும், அவரது மகன்களும் கருப்புசாமி மீது மிகுந்த பாசம் செலுத்துகிறார்கள். தங்கை மகன் வீரா மீது கருப்பசாமிக்கு கூடுதல் பிரியம். ஒருநாள் வேலை முடித்து வெளியே வரும் கருப்பசாமி மீது வாகனம் மோதியதில் அவரது இடுப்பு எலும்பு முறிந்துவிடுகிறது. அறுவை சிகிச்சை செய்தால்தான் அவரால் நடக்க முடியும் என்கிற நிலைமையில், கருப்பசாமியின் மகன் செந்திலுக்கு தகவல் சொல்கிறார்கள்.
 
தந்தை மீது அக்கறையின்றி நடந்துகொள்ளும் செந்தில் செலவுக்கும், வேலைபளுவுக்கும் பயந்து அறுவை சிகிச்சை செய்யாமல் வீட்டுக்கு அழைத்து செல்கிறார். இத்தகைய சூழலில் ஒருசில நாட்களில் தந்தை கருப்பசாமி தூங்கும்போதே இறந்துவிட்டதாக உறவினர்களிடம் தகவல் சொல்கிறார் அவர். கருப்பசாமி எப்படி கொல்லப்பட்டார், அவரை யார் கொன்றது என்பதில் படம் நீள்கிறது.
 
வெகுஜன சினிமா சட்டகத்தில் இல்லாமல் முழுவதுமாக யதார்த்த திரைமொழியில் இப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. படத்தில் இடம்பெற்றிருக்கும் அத்தனை பேரும் தொழில்முறை சாராத புதிய மனிதர்கள். நாடகத்துறை சார்ந்தவர்களையும், கிராமத்தின் நிஜமான மனிதர்களையும் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் இப்படத்தின் மிகப்பெரிய பலம் நடிகர்கள் தேர்வு மற்றும் நடிப்பு.
 
கருப்பசாமியாக நடித்திருக்கும் பேராசிரியர் ராஜூ, வீரா பாத்திரத்தில் சுகுமார் சண்முகம், மென்மொழியாக ஜெயலட்சுமி, முருகனாக சமணராஜா, செந்திலாக முத்துக்குமார், அவரது மனைவியாக நடித்திருக்கும் ஸ்டெல்லா என பெரும்பான்மையானவர்கள் நாடகத்துறையில் இயங்குபவர்கள். இவர்களது பங்களிப்புதான் படத்தை முழுமைப்படுத்தியிருக்கிறது.
 
குறிப்பாக கருப்பசாமி, செந்தில், மென்மொழி கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்கள் இயல்பான உடல்மொழியுடன்கூடிய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். நடிப்பு பயிற்சி இயக்குநர் சுகுமார் சண்முகம் இதற்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறார். இயல்பான மனிதர்களை காட்சிப்படுத்தும் திரைவடிவம், ஆர்ப்பாட்டமில்லாத திரைக்கதை, அதனை ஏற்று நடித்திருப்பவர்களின் அசாத்திய பங்களிப்பு ஆகியவற்றின் ஒருங்கிணைவு இதில் அழகாக நடந்திருக்கிறது. ஒளிப்பதிவு, கதை விவரனை போன்றவற்றில் சற்று கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம் என தோன்றியதைத் தவிர, அழுத்தமான உள்ளடக்கத்தை பேசும் யதார்த்த பாணி திரைப்படங்களின் வரிசையில் ”பாரம்” ஒரு அடையாளம்.
 
நம்மூரில் அரசல் புரசலாக இருக்கும் பழக்கம்தான் தலைக்கூத்தல் என்கிற முறையில் முதியவர்களை மேலே அனுப்பி வைப்பது. இந்த பழக்கத்தை அழுத்தமாகப் பேசுவதன் மூலம் சமூகத்தின் மனச்சாட்சியைக் கேள்விக்குள்ளாக்கி இருக்கிறார் இயக்குநர்.
 
-வசந்தன்


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...