???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் 0 வரும் 21ம் தேதி திமுக தோழமை கட்சிகள் கூட்டம் 0 வங்கி திவால் சட்டத் திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது 0 பள்ளிகள் திறப்புக்கு பின் சுழற்சி முறையிலான வகுப்புகள் கிடையாது: அமைச்சர் செங்கோட்டையன் 0 மொபைல்போன் வாங்க சாக்கடை அகற்றிய மாணவன்: லேப்டாப் வழங்கியது திமுக 0 பிரதமர் மோடியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பலூன்கள் தீப்பிடித்து விபத்து 0 கூகுள் ப்ளேஸ்டோரில் மீண்டும் Paytm ஆப் 0 2021ஆம் ஆண்டு துவக்கத்தில் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரும்: ஹர்ஷவர்தன் 0 விவசாயிகளை பாதிக்கும் மசோதாவை எதிர்த்து மத்திய அமைச்சர் ராஜினாமா 0 நிலம் கையகப்படுத்த உரிமையாளர்களிடம் இனி ஆலோசிக்கவேண்டாம்: புதிய சட்ட திருத்தம் 0 சமூகநீதிக்காக போராடியவர் பெரியார்; வாழ்த்து கூறுவதில் தயக்கம் இல்லை - பாஜக 0 அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிக்கும் மசோதா நிறைவேறியது 0 தமிழக அரசு ஒருபோதும் பின்வாங்காது ‘இருமொழி கொள்கையே நீடிக்கும்’: முதலமைச்சர் 0 பாபர் மசூதி இடிப்பு வழக்கு: செப்.30 தீர்ப்பு! 0 மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு கொரோனா உறுதி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

சபரிமலை ஐயப்பன் கோவிலில் நவம்பர் 16 முதல் பக்தர்களுக்கு அனுமதி

Posted : செவ்வாய்க்கிழமை,   ஆகஸ்ட்   11 , 2020  23:06:18 IST

சபரிமலை ஐயப்பன் கோவிலில் நவம்பர் 15-ம் தேதி மகர விளக்கு பூஜை நடைபெற உள்ள நிலையில் கேரள தேவசம் துறை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தலைமையில் காணொலி காட்சி மூலம் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில் கொரோனாவை கருத்தில் கொண்டு பக்தர்களை அனுமதிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதன்படி மகர விளக்கு பூஜைக்காக நவம்பர் 16ம் தேதி முதல் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கோவிலுக்கு வரும் பக்தர்கள் கொரோனா பாதிப்பு இல்லை என்ற சான்றிதழை கட்டாயம் கொண்டு வர வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை குறிப்பிட்ட எண்ணிக்கையில் போதிய இடைவெளியுடனே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...