???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 அக்கா என்னும் அம்மாவுக்கு வீரவணக்கம்!- தொல்.திருமாவளவன் 0 தமிழகம்: புதிதாக 5,175 பேருக்கு தொற்று; 112 பேர் உயிரிழப்பு 0 குஜராத் மருத்துவமனையில் தீவிபத்து: 8 பேர் பலி 0 அதிமுக பெற்ற சம்பளத்தை எஸ்.வி.சேகர் திருப்பித்தர தயாரா?: அமைச்சர் ஜெயக்குமார் 0 எம்.எல்.ஏ-க்கள் கருணாஸ், பவுன் ராஜூக்கு கொரோனா 0 கொரோனா அறிகுறி இருந்தால் ஆரம்பத்திலேயே மருத்துவமனை செல்லவேண்டும்: அமைச்சர் விஜயபாஸ்கர் 0 அயோத்தி ராமர்கோயிலுக்கு அடிக்கல் நாட்டினார் மோடி! 0 திருமாவளன் சகோதரி கொரோனாவால் மரணம் 0 கு.க.செல்வம் திமுகவில் இருந்து தற்காலிக நீக்கம்! 0 நாடக இயக்குநர் அல்காசி மரணம்! 0 5,8-ஆம் வகுப்புக்கு பொதுத்தேர்வு இல்லை: அமைச்சர் செங்கோட்டையன் 0 தமிழகத்தில் ஒரே நாளில் 109 பேர் கொரோனாவுக்கு உயிரிழப்பு 0 தமிழகத்தில் 16 மாவட்டங்களில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு 0 வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக பீலா ராஜேஷ் மீது புகார் 0 ஆளுநர் மாளிகை சுதந்திர தின வரவேற்பு நிகழ்ச்சி ரத்து
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

அயோத்தி தீர்ப்பு: வழக்கறிஞர் பராசரன் வீட்டில் குவிந்து ஆட்டம் போட்ட குரங்குகள்!

Posted : திங்கட்கிழமை,   டிசம்பர்   02 , 2019  04:56:32 IST


Andhimazhai Image
அயோத்தியில் இந்து - இஸ்லாமியர் பிரிவினை ஏற்ப காரணம் மதசார்பற்ற கட்சிகளும், இடதுசாரிகளும்தான் என்று மூத்த வழக்கறிஞர் கே.பராசரனுக்கு நடத்தப்பட்ட பாராட்டு விழாவில் துக்ளக் ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி அதிரடியாகக் கூறியுள்ளார்.
 
 
அயோத்தி வழக்கில் ராம் லாலா தரப்புக்கு ஆதரவாக வாதிட்ட மூத்த வழக்கறிஞர் கே.பராசரனுக்கு தஞ்சாவூர் சாஸ்திரா பல்கலைக்கழகம் சார்பில் சென்னை தியாகராய நகர் வாணி மகாலில் கடந்த சனிக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் கர்நாடக உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி என்.குமார், மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன், மெட்ராஸ் பார் அசோசியேஷன் தலைவர் ஏ.ஆர்.எல்.சுந்தரசேன், துக்ளக் வார இதழ் ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி, சாஸ்திரா பல்கலைக்கழக துணைவேந்தர் எஸ்.வைத்தியசுப்பிரமணியன் ஆகியோர் கலந்துகொண்டு கே.பராசரனை பாராட்டி பேசினர்.
 
 
பராசரனின் மகள் அவருக்காக கவிதை வாசித்தார். ஒரு தந்தையாக மட்டுமல்லாமல் நாட்டிற்காக பராசரன் செய்த செயல்களை அழகிய கவிதையில் அவர் விவரித்தார். துக்ளக் வார இதழ் ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி ’’இந்தியன் எக்ஸ் பிரஸ் கட்டடம் இடிக்கப்பட வேண்டும் என்று எண்பதுகளில் இந்திய அரசு வாதிட்டது. அந்த வழக்கில் நான் பராசரன் அவர்களுக்கு எதிரான வழக்கறிஞர் தரப்பில் உதவிகள் செய்துகொண்டிருந்தேன்.  அவர் அரசு தரப்பு வழக்கறிஞராக இருந்தாலும் கூட நீதிக்கு கட்டுப்பட்டவராக இருந்தார். அந்த பண்புதான் நான் அவரிடத்தில் பார்த்து வியந்த ஒன்று. இந்த வழக்குக்கு எதிரான கருத்தை அப்போதைய பிரதமரிடமே தைரியமாக சொன்னவர்.
 
 
இந்த வழக்கில் வாதிட தான் விரும்பவில்லை என்று நீதிபதிகளிடம் கூறினார் பராசரன். தன் சொலிசிடர் ஜெனரல் பதவியை விட்டு விலகவும் அவர் தயாராக இருந்தார். அயோத்தி வழக்கு தீர்ப்பு வந்தபோது எங்கள் வீட்டில் விழா நடத்தினோம். அந்த தீர்ப்பு ஆனந்த கண்ணீரை வரவழைத்தது. எனது மனைவி  பாராசரன் அவர்கள் காலில் விழுந்து வணங்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். அந்த ஆசை  அவரை இங்கு கண்டதும் நிறைவேறியது. அவருக்கு சாஷ்டாங்க நம்ஸ்காரம் செய்து வணக்கம் செலுத்தினார் அவர்.  இது ஒட்டுமொத்த இந்திய மக்களின் ஆசை.
 
 
1983 ஆம் ஆண்டு நான் அயோத்திக்கு சென்றபோது கண்ட காட்சியால் மூன்று நாட்கள் என்னால் தூங்க முடியவில்லை. என்னால் சீரணிக்க முடியாது காட்சி அது. சோம்நாத்தில் கோவில் கட்டியபோது இந்து - முஸ்லீம் பிரிவினை ஏற்படவில்லை. ஆனால் அயோத்தியில் இந்து - முஸ்லீம் பிரிவினை ஏற்ப மதசார்பற்ற கட்சிகளும், இடதுசாரிகளும்தான் காரணம். 1990ஆம் ஆண்டில் பிரதமராக இருந்த  சந்திரசேகரிடம் இஸ்லாமியர்கள் கோவில் இருந்ததற்கான சான்றை கேட்டபோது அவர் ‘ அயோத்தி விஷயத்தில் சான்றுகள் வெளிப்படையாக தெரிகிறது. நீங்கள் இதுபோன்ற கேள்விகளை கேட்பதைவிட்டு விட்டு நிலத்தை ராமர் கோவில் கட்ட கொடுத்துவிடுங்கள்’ என்றார்.
 
 
அயோத்தியில் இஸ்லாமியர்கள் மசூதியை கட்ட வேண்டும் என்று விரும்பவில்லை. மதசார்பற்ற வரலாற்றறிஞர்கள் இஸ்லாமியர்களை பகடைக்காய்களாகத் தூண்டி விட்டுள்ளனர். இந்த வழக்கு ஒரு அரசியல் வெடிகுண்டு போல் உச்சநீதிமன்றத்திற்கு சென்றது. அயோத்தி தீர்ப்பு யார் மனதையும் காயப்படுத்தவில்லை என்பதை என்னால் உறுதியாக சொல்ல முடியும்,” என்றார்.
 
 
தொடர்ந்து பேசிய மூத்த வழக்கறிஞர் பராசரன் ‘ இந்த வழக்கின் தீர்ப்பை பெற்று தந்தது நான் இல்லை கடவுள் ராமர்தான். இந்த தீர்ப்பு வழங்கப்படுவதற்கு முந்தைய நாளில் நான் வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது நண்பர் கேட்டார் ‘ தீர்ப்பு எப்படி வரும் ?’ என்று. நான் ‘தீர்ப்பு எப்படி வரும் என்பது எனக்கு தெரியாது ஆனால் இறைவன் ராமர் தனது பக்தர்களை வெறும் கையோடு அனுப்பமாட்டார்’ என்று பதிலளித்தேன். நானா அந்த பதிலை கூறினேன் என்று இப்போது தோன்றுகிறது. நீங்கள் நம்பினால் நம்புங்கள்.. தீர்ப்பு வந்த அடுத்த நாள் மாலையில் நான் தங்கியிருந்த இடத்திற்கு சுமார் 40 குரங்குகள் வந்தன.
 
 
அந்த குரங்குகள் ஆரவாரத்துடன் காணப்பட்டன. வீட்டருகே இருந்த  மரத்தின் கிளைகளை எல்லாம் உடைத்துப் போட்டுவிட்டன. மசூதியை எங்கு வேண்டுமானாலும் கட்டலாம்.  ஆனால் ராமர் பிறந்த இடத்தை மாற்ற இயலுமா? 165 ஆண்டுகால ராமரின் காத்திருப்பு தற்போது நிறைவடைந்தது. ராமாயணத்தில் 14 ஆண்டுகள் ராமர் பர்ணசாலையில் வாழ்ந்தார். இங்கோ 28 ஆண்டுகள் அவர் பர்ணசாலையில் இருக்கவேண்டியதாக இருந்தது’ என்று கூறினார். தன் பேச்சின் போது பராசரன் பல சமஸ்கிருந்த ஸ்லோகங்களை சரளமாக உச்சரித்தார். ‘ ஒரு தாயின் வயிற்றில் பிறந்தோம். தம்முள் சண்டை செய்தாலும் சகோதரர்கள்” என்ற பாரதியின் வரிகளையும் கூறினார்.
 
 
“ நீதிமன்றம் சர்ச்சைக்குரிய அந்த இடம் பகவான் ராமருக்குச் சொந்தமானது என்று கூறியுள்ளது. இந்த வழக்கு தொடரப்பட்டு 69 ஆண்டுகள் ஆகின்றன. அரசியல் சாசனத்தின் பிரிவு 142-ன் கீழ் உச்சநீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியது. 1+4+2 கூட்டுத்தொகை ஏழு. ராமர் ஏழாவது அவதாரம்!” என்று அவர் கூறியபோது  கைத்தட்டல் எழுந்தது.
 
 
92 வயதாகும் இந்த ’பகவான் ராமரின்’ வழக்கறிஞரின் பேச்சில் ஏகத்துக்கும் நகைச்சுவையும்  பக்தியும் இந்த நிகழ்வில் வெளிப்பட்டதைப் பார்க்க முடிந்தது. 
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...