???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 மழைநீர் வடிகால் திட்டம்: அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்ய சென்னை மாநகராட்சிக்கு உத்தரவு 0 தேனி, நீலகிரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு 0 கர்நாடகாவில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு! 0 உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் தமிழ் உள்ளிட்ட 9 மாநில மொழிகளில் வெளியானது! 0 கமல்ஹாசனுக்கு நன்றி தெரிவித்த நடிகர் சூர்யா! 0 குல்புஷன் ஜாதவுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனைக்குத் தடை 0 கும்பகோணத்தில் மாட்டுக்கறி விழாவுக்கு அழைப்பு விடுத்தவர் கைது! 0 சசிகலா விரைவில் சிறையிலிருந்து வெளியே வருவார்: டி.டி.வி.தினகரன் 0 மும்பை தாக்குதலுக்கு காரணமான தீவிரவாதி ஹபிஸ் சயித் பாகிஸ்தானில் கைது! 0 வேலூர் மக்களவை தொகுதி தேர்தல்: வேட்புமனு தாக்கல் செய்ய இன்று இறுதிநாள்! 0 தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : 11-ம் கட்ட விசாரணையை தொடங்கியது ஒருநபர் ஆணையம் 0 குல்பூஷண் ஜாதவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு 0 வட தமிழகத்தில் பரவலாக கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் 0 தபால்துறை தேர்வு ரத்து செய்யப்பட்டிருப்பது ஆறுதல் அளிக்கிறது: ஸ்டாலின் 0 நீட் மசோதாவை 2017-ம் ஆண்டிலேயே திருப்பி அனுப்பிவிட்டோம்: நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

அயோத்தி வழக்கு: இடைக்கால அறிக்கை தாக்கல் செய்ய சமரசக் குழுவுக்கு உத்தரவு

Posted : வியாழக்கிழமை,   ஜுலை   11 , 2019  22:29:55 IST

அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பாக சுமுக தீர்வு காண்பதற்காக நீதிபதி கலிபுல்லா தலைமையில் 3 பேர் கொண்ட மத்தியஸ்தர் குழுவை நியமனம் செய்த உச்சநீதிமன்றம், ஆகஸ்ட் 15-ம் தேதிக்குள் தீர்வு காணும் படி அவகாசம் அளித்திருந்தது.

இந்நிலையில், மத்தியஸ்தர் குழுவிடம் ஒப்படைக்கப்பட்ட பிறகும் அயோத்தி வழக்கில் எந்த ஒரு முன்னேற்றமும் ஏற்படவில்லை என்றும் இவ்வழக்கை அவசர வழக்காக ஏற்று விசாரிக்க வேண்டும் என்றும் கோரி கோபால் சிங் மற்றும் இந்து அமைப்புகள் மனு தாக்கல் செய்தன.

அதில், சமரசக் குழு சரியாக செயல்படவில்லை என்றும் அயோத்தி வழக்கை விரைந்து விசாரித்து முடிக்க வேண்டுமென்றும் வலியுறுத்தப்பட்டது.

இந்த வழக்கை வியாழன் அன்று விசாரித்த அரசியல் சாசன அமர்வு, அயோத்தி வழக்கின் இடைக்கால அறிக்கையை வருகிற 18-ம் தேதி தாக்கல் செய்யுமாறு சமரசக் குழுவுக்கு உத்தரவிட்டு விசாரணையை 25-ம் தேதிக்கு ஒத்திவைத்தது. தீர்வு காண முடியவில்லை என மத்தியஸ்தர் குழு கூறினால் 25-ம் தேதி முதல் வழக்கை மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு செய்துள்ளது.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...