???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 அண்ணன் - தங்கையாக ஜோதிகா, சசிகுமார்! 0 விருதுநகரில் அதிமுக நிர்வாகி வெட்டி கொலை! 0 தமிழக முதல்வரின் பதில் வேதனை அளிக்கிறது: திருமாவளவன் 0 செல்போன் கண்டுபிடித்தவரை மிதிக்க வேண்டும்: அமைச்சர் பாஸ்கரன் 0 ரூ.300 கோடி வசூல் செய்த பிகில்! 0 சிலைகளை மீட்க பிரதமர் மோடியே காரணம்: தமிழக அரசு 0 எட்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தொழில்துறை உற்பத்தி குறைந்தது! 0 பெண்ணியம், நாத்திகம் போன்றவை தீவிரவாத எண்ணங்கள்: சவுதி அரேபியா 0 மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி ! 0 பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க பிரேசில் செல்கிறார் பிரதமர் மோடி 0 இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் இந்தியா வருகை 0 ரஜினி அரசியல் கட்சி நடத்துகிறாரா? முதல்வர் பழனிசாமி 0 மூதாட்டியை தாக்கிய விவகாரம்: காவல் உதவி ஆய்வாளர் உட்பட 5 போலீசார் பணியிடை நீக்கம் 0 புல்புல் புயல்: 19 பேர் உயிரிழப்பு! 0 ஜேப்பியார் குழுமத்தில் வருமான வரி சோதனை!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

அயோத்தி தீர்ப்பு: தமிழகம் முழுவதும் உஷார் நிலை

Posted : வெள்ளிக்கிழமை,   நவம்பர்   08 , 2019  21:28:58 IST

அயோத்தி வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாக உள்ள நிலையில், சென்னையில் காலை முதல் 15 ஆயிரம் காவலர்கள் போலீசாரை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். விடுப்பில் உள்ள காவலர்கள் உடனே பணிக்குத் திரும்பவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் இரவு முழுவதும் சென்னையின் பல இடங்களில் வாகன தணிக்கையும் நடைபெற்றது. முக்கிய கோயில்கள், மசூதிகளுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரல், எழும்பூர் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் காலவர்கள் விடிய, விடிய சோதனையில் ஈடுபட்டனர். பலத்த சோதனைக்கு பின்பே பயணிகள் ரயில்களில் ஏற அனுமதிக்கப்பட்டனர்.

அதேபோல், கோவையில் நள்ளிரவு முதல் போலீசார் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். கோவையில் இருந்து வெளியூர் செல்லும் ரயில்களில் பயணிகளின் உடைமைகள் சோதனையிடப்பட்டன. கோனியம்மன் கோயில் உள்ளிட்ட முக்கிய வழிபாட்டுத் தலங்களில் காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கோவை நகருக்குள் வரும் வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. நேற்றிரவு 500 காவலர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட நிலையில் காலையில் பாதுகாப்பை மேலும் அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளனர்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...