???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 அண்ணன் - தங்கையாக ஜோதிகா, சசிகுமார்! 0 விருதுநகரில் அதிமுக நிர்வாகி வெட்டி கொலை! 0 தமிழக முதல்வரின் பதில் வேதனை அளிக்கிறது: திருமாவளவன் 0 செல்போன் கண்டுபிடித்தவரை மிதிக்க வேண்டும்: அமைச்சர் பாஸ்கரன் 0 ரூ.300 கோடி வசூல் செய்த பிகில்! 0 சிலைகளை மீட்க பிரதமர் மோடியே காரணம்: தமிழக அரசு 0 எட்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தொழில்துறை உற்பத்தி குறைந்தது! 0 பெண்ணியம், நாத்திகம் போன்றவை தீவிரவாத எண்ணங்கள்: சவுதி அரேபியா 0 மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி ! 0 பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க பிரேசில் செல்கிறார் பிரதமர் மோடி 0 இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் இந்தியா வருகை 0 ரஜினி அரசியல் கட்சி நடத்துகிறாரா? முதல்வர் பழனிசாமி 0 மூதாட்டியை தாக்கிய விவகாரம்: காவல் உதவி ஆய்வாளர் உட்பட 5 போலீசார் பணியிடை நீக்கம் 0 புல்புல் புயல்: 19 பேர் உயிரிழப்பு! 0 ஜேப்பியார் குழுமத்தில் வருமான வரி சோதனை!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

அயோத்தி வழக்கில் இன்று தீர்ப்பு: நாடு முழுவதும் உச்சக்கட்ட பாதுகாப்பு

Posted : வெள்ளிக்கிழமை,   நவம்பர்   08 , 2019  21:19:38 IST

சர்ச்சைக்குரிய அயோத்தி நிலம் குறித்த வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில், நாடு முழுவதும் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நாடுமுழுவதும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சட்டம் ஒழுங்கை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும், பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்துமாறும் அனைத்து மாநில அரசுகளுக்கும் ஏற்கனவே உள்துறை அமைச்சகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

அயோத்தியை உள்ளடக்கிய பைசாபாத் மாவட்டத்தில் டிசம்பர் 10ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அயோத்தி மட்டுமின்றி பதற்றமான பகுதிகள் என கண்டறியப்பட்ட மாவட்டங்களிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வருகிறது.

அயோத்தியில் மட்டும் சுமார் 12ஆயிரம் காவலர்கள் பாதுகாப்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அயோத்தியின் அருகே உள்ள 8 கல்லூரிகள் தற்காலிக சிறைச்சாலைகளாக மாற்றப்பட்டுள்ளன. உத்தரபிரதேசத்தில் காவல்துறையினருக்கும், ரயில்வே பாதுகாப்பு படையினருக்கும் வழங்கப்பட்ட விடுமுறை ரத்து செய்யப்பட்டு உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என்றும், காவல்துறையினருக்கு நவம்பர் 30ஆம் தேதி வரை விடுமுறை கிடையாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...