???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 குடிநீர் தட்டுப்பாட்டுக்கு காரணமான அமைச்சர் வேலுமணி பதவி விலக வேண்டும்: ஸ்டாலின் 0 15 ஆண்டுகளுக்கு பிறகு ஜோடி சேர்ந்த மாதவன் - சிம்ரன் 0 பாகிஸ்தான் மீது இந்திய அணி நடத்திய மற்றொரு தாக்குதல்: கிரிக்கெட் வெற்றி குறித்து அமித்ஷா! 0 நாடு முழுவதும் மருத்துவர்கள் வேலைநிறுத்தம் 0 17-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடக்கம்! 0 வெப்ப அலை காரணமாக ஒரே நாளில் 29 உயிரிழப்பு 0 நீட், ஹைட்ரோ கார்பன் திட்டங்களை கைவிட வலியுறுத்துவோம்: டி. ஆர். பாலு 0 நீட் தேர்வு தோல்வியால் எடப்பாடியைச் சேர்ந்த மாணவர் தற்கொலை 0 தமிழக உரிமைகளை டெல்லியில் அடகு வைத்துவிட்டு திரும்பியுள்ளார் முதலமைச்சர்: ஸ்டாலின் குற்றச்சாட்டு 0 தமிழ்ச் சூழலின் அவலம் பற்றிய புலம்பலில் இருக்கும் இன்பம் அலாதியானது!- காலச்சுவடு கண்ணன் நேர்காணல்! 0 மீன்பிடி தடைகாலம் நிறைவடைந்து கடலுக்குள் சென்றனர் மீனவர்கள்! 0 ஒற்றுமையோடு செயல்பட்டால் ஸ்டாலின் முதல்வராவது உறுதி: ப.சிதம்பரம் 0 முத்தலாக் மசோதாவை மாநிலங்களவையில் எதிர்ப்போம்: நிதிஷ் குமார் 0 கொரியாவில் சர்வதேச பட விழாவில் திரையிட சூப்பர் டீலக்ஸ் தேர்வு! 0 மெட்ரோவில் இலவச பயணம் செய்ய அனுமதியளிக்கக் கூடாது: மோடிக்கு மெட்ரோ மேன் கடிதம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

அயனாவரம் சிறுமி வழக்கில் 16 பேர் மீதான குண்டர் தடுப்புச் சட்டம் ரத்து

Posted : சனிக்கிழமை,   ஜனவரி   12 , 2019  02:06:03 IST

சென்னை அயனாவரத்தைச் சேர்ந்த 11 வயது சிறுமியை, லிப் ஆப்ரேட்டர் உள்பட 17 பேர் தொடர்ந்து 6 மாத காலத்துக்கும் மேலாக பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுதொடர்பான வழக்கில் 17 பேர் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர்.
 
அவர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த 17 பேர் மீதும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
 
இதுதொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்திலுள்ள மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது. இந்த 17 பேரும், தங்கள் மீதான குண்டர் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்யவேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
 
பொதுவாக, கைது செய்யப்பட்டவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட குண்டர் தடுப்புச் சட்டம் குறித்து முடிவு எடுப்பதற்கு ஆலோசனைக் குழுவுக்கு அனுப்பப்படும்.
 
குண்டர் தடுப்புச் சட்டம் தொடரலா அல்லது ரத்து செய்யவேண்டுமா? என்று ஆலோசனைக் குழு ஒரு குறிப்பிட்டக் காலத்துக்குள் முடிவு எடுக்கவேண்டும். குறிப்பிட்டக் காலத்துக்குள் முடிவு எடுக்கவில்லையென்றால், தண்டனைக்குட்பட்டவர்கள் நீதிமன்றத்தை நாடுவார்கள்.
 
அந்த அடிப்படையில், 17 பேரும் குண்டர் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்யவேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். அதில், ஒருவர் மனுவைத் திரும்பப் பெற்றார்.
 
இன்று நீதிபதிகள் பி.டி.செல்வம், ராமதிலகம் அமர்வின் முன்பு விசாரணைக்கு வந்தது. ஆலோசனைக் குழு முடிவு எடுக்கத் தவறியதைக் காரணமாகக் குறிப்பிட்டு 16 பேர் மீதான குண்டர் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...