???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு கருப்புக் கொடி காட்டுவோம்:வைகோ 0 கின்னஸ் சாதனை படைத்த விராலிமலை ஜல்லிகட்டு! 0 கொல்கத்தா மாநாட்டில் ராகுலை முன்மொழியாதது ஏன்?: ஸ்டாலினுக்கு தமிழிசை கேள்வி 0 சபரிமலை போராட்டத்தில் எங்களால் வெற்றி பெறமுடியவில்லை: பாஜக ஒப்புதல் 0 எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணி தேசத்துக்கு எதிரானது: பிரதமர் மோடி 0 மீண்டும் முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் ரகசிய யாகம்: மு.க ஸ்டாலின் 0 கொலைகாரர்களுக்கு தி.மு.க. துணையாக உள்ளது: முதலமைச்சர் குற்றச்சாட்டு 0 சிறையில் சசிகலாவுக்கு சிறப்புச் சலுகை வழங்கப்பட்டது: உயர்மட்டக்குழு ஆய்வில் தகவல் 0 'பெரியார் குத்து' பாடலை வெளியிட்ட சிம்பு குழுவுக்கு பாராட்டு! 0 திமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் கைது! 0 முதல்வர் தவறு செய்யவில்லை எனில் எதற்கு பதற வேண்டும்? தினகரன் கேள்வி 0 ஆடிட்டர் குருமூர்த்தி சொல்வது கேலியாக உள்ளது: தம்பிதுரை 0 எதிர்க்கட்சிகளின் பொதுக்கூட்டம் பாஜகவுக்கான சாவுமணி: மம்தா பானர்ஜி 0 கர்நாடகாவில் இன்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் 0 வசூலில் கடந்த ஆண்டை ஓரங்கட்டிய டாஸ்மாக்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ஐ படத்தை நானே வெளியிடுவேன்!!

Posted : புதன்கிழமை,   ஆகஸ்ட்   06 , 2014  01:18:44 IST

 
    ஒரே நேரத்தில் பல படங்களைத் தயாரித்ததால் ஆஸ்கர்பிலிம்ஸ் நிறுவனத்தால் எந்தப்படத்தையும் திட்டமிட்டபடி எடுத்து வெளியிடமுடியவில்லை. அவர்களுடைய தவறான முடிவின் காரணமாக திருமணம்எனும்நிக்கா படம் மிகத்தாமதமாக வெளியாகி சரியாகப் போகவில்லை. அடுத்து அவர்கள் கையில் இருக்கும் பூலோகம் படத்தின் மீது அவர்களுக்கே நம்பிக்கையில்லையாம். இந்த நிலையில் நம்முடைய படமும் அப்படி ஆகிவிடக்கூடாது என்று போராடும் ,இயக்குநர் ஷங்கர், இந்தப்படத்தை ரிலையன்ஸ் அல்லது வேறொரு மும்பை நிறுவனத்திடம் கைமாற்றிக் கொடுத்துவிடுங்கள் அதுபற்றி அந்நிறுவனங்களிடம் நானே பேசுகிறேன் என்றெல்லாம் தயாரிப்பாளர் ஆஸ்கர்ரவியிடம் சொல்லியிருக்கிறார். முதலில் இருக்கிற சிக்கல்களுக்கு அப்படிப் படத்தைக் கைமாற்றிக்கொடுத்துவிட்டு நாலுகாசையும் பார்த்துக்கொண்டு நிம்மதியாகவும் இருக்கலாம் என்று நினைத்த ஆஸ்கர்ரவிச்சந்திரன் அதுபற்றி யோசித்துச் சொல்கிறேன் என்று சொன்னாராம். அதன்பின், நம் கைவசம் இருக்கும் ஒரே பெரியபடம் இதுதான், இந்தப்படம் நிச்சயமாகப் பெரிய வெற்றியைப் பெறக்கூடிய படமாக இருக்கும். அப்படிப்பட்ட படத்தை இப்போதைய சிக்கல்களிலிருந்து மீளவேண்டும் என்பதற்காக இன்னொருவரிடம் கொடுத்துவிட்டால் இதன்மூலம் கிடைக்கும் பெருமை கிடைக்காமல் போகும். அது மட்டுமின்றி இப்போது எவ்வளவு கசப்புடன் இருந்தாலும் படம் வெளியாகி வெற்றி என்றால் நிலைமை அப்படியே தலைகீழாக மாறும். படம் வெற்றி பெற்ற நேரத்தில் இயக்குநர் ஷங்கர் மற்றும் நாயகன் விக்ரம் ஆகிய இருவரில் யாரோ ஒருவருடைய சம்மதம் கிடைத்தாலும் அடுத்து ஒரு படத்தைத் தொடங்க வசதியாக இருக்கும், படத்தை இப்போதே கொடுத்துவிட்டால் அதற்கு வாய்ப்பே இல்லை என்று யோசித்த ஆஸ்கர்ரவி, இந்தப்படத்தை நானே வெளியிடுகிறேன் என்று சொல்லிவிட்டாராம். இதனால் ஷங்கர் வருத்தத்தில் இருப்பதாகச் சொல்கிறார்கள்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...