அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 என்னை அன்பால் மாற்றியவர் என் மனைவி: ரஜினி 0 பழனி முருகனுக்கு 16 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம்! 0 சாதனையாளர்களுக்கு விருது வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! 0 தேசியக் கொடியை ஏற்றினார் ஆளுநர் ஆர். என்.ரவி! 0 கொடியேற்றிய முதலமைச்சர்; விழாவை புறக்கணித்த முதல்வர்: தெலங்கானாவில் பரபரப்பு! 0 கொலிஜியத்தில் ஒன்றிய அரசின் பிரதிநிதிகள் வேண்டும்: சட்ட அமைச்சர் கடிதம் 0 “ஒன்று கூடுவோம் ஸ்டாலின்.. தமிழ்நாடு வாழ்க”: ட்வீட் செய்த கமல்ஹாசன்! 0 குட்கா, பான் மசாலா புகையிலை பொருட்களுக்கு நிரந்தர தடை விதிக்க முடியாது: நீதிமன்றம் உத்தரவு! 0 இருளர் பழங்குடி செயல்பாட்டாளர்களுக்கு பத்ம விருதுகள்! 0 ஜெயலலிதா பயன்படுத்திய பொருட்கள் ஏலம்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு! 0 நாஞ்சில் சம்பத் மருத்துவமனையில் அனுமதி 0 ஆளுநரின் தேநீர் விருந்து: ஒட்டுமொத்தமாக புறக்கணித்த திமுக கூட்டணி கட்சிகள் 0 தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு விவகாரம்: தீர்ப்பு தள்ளிவைப்பு 0 "வீட்டை முற்றுகையிடுவோம்": தாமரைக்கு எதிராக ஜல்லிக்கட்டு அமைப்பு 0 மருத்துவம் தொடர்பான சர்ச்சை கருத்துகள்: சித்த மருத்துவர் ஷர்மிகாவிடம் விசாரணை!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

அவதார் -2: திரைவிமர்சனம்!

Posted : வெள்ளிக்கிழமை,   டிசம்பர்   16 , 2022  19:32:50 IST


Andhimazhai Image

குடும்பத்தை காக்க நினைக்கும் நாயகன்; பழிவாங்க துடிக்கும் வில்லன். இவர்கள் ஓர் அழகான இடத்தில் மோதிக்கொண்டால் அதுவே அவதார் இரண்டாம் பாகத்தின் கதை.

அவதார் முதல் பாகத்தின் தொடர்ச்சியாக ஜேக் சல்லியும் நேத்ரியும் அவர்களின் குழந்தைகளுடன் பாண்டோராவில் வாழ்ந்துவர, அவர்களை கொல்வதற்காக கர்னல் மைல்ஸ் புது அவதாரம் எடுக்கிறார். அவரிடமிருந்து தன் குடும்பத்தை காப்பாற்ற பாண்டோராவிலிருந்து வெளியேறி, கடலைச் சார்ந்து வாழும் இனத்திடம் தஞ்சம் அடைகிறது ஜேக் சல்லி குடும்பம். ஆனால், அங்கேயும் மைல்ஸ் வந்துவிட, அவர்களை ஜேக் சல்லி குடும்பம் எப்படி எதிர்கொண்டது என்பதே படத்தின் மீதிக் கதை.

 2009ஆம் ஆண்டு வெளிவந்த அவதார் திரைப்படத்திற்கு கிடைத்த வரவேற்பால், அதனுடைய இரண்டாம் பாகத்திற்கு கூடுதல் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், இரண்டாம் பாகத்தின் திரைக்கதையில் புதுமை எதுவும் இல்லாமல் இருப்பது ஏமாற்றமே. வில்லனை துரத்தி அடிக்கும் நாயகனின் கதை என்று தெரிய வரும்போது சலிப்பே ஏற்படுகிறது. இருந்தாலும், படத்தின் ஒவ்வொரு காட்சியும் பிரம்மாண்டமாக இருக்கிறது. அதுவே படத்தை தாங்கிப் பிடிக்கிறது. இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் உழைப்பு அங்கு தான் தெரிகிறது.

 படத்தின் முக்கிய தூண்களான நாயகன் ஜேக் சல்லி, அவரது மனைவி நேத்ரி, வில்லன் மைல்ஸ் ஆகியோரின் கதாபாத்திர உருவாக்கம் படத்தின் பெரும் பலவீனம். துணை கதாபாத்திரங்களான லோக், கிரி, ஸ்பைடர் போன்ற பாத்திரங்களே மனதில் நிற்கின்றன. அதிலும் ஸ்பைடர் கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஜேக் சாம்பியன் நடிப்பில் தனித்து தெரிகிறார்.

சூழலுக்கும் உயிர்களுக்கும் இடையிலான உறவு, தெய்வீகத்தன்மை, இயற்கையை மேலானதாக கருதும் பண்பு போன்றவை படத்தின் தனித்தன்மை என்றாலும், ஆண் – பெண் என்ற பேதம் ஏலியன்களிடமும் இருப்பதை என்னவென்று சொல்வது?

 ‘பேய்க்கு வாக்கப்பட்டா புளியமரத்தில் ஏறித்தானே ஆகனும்’, ‘நாம எங்கு போனாலும் நம்ம குடும்பம் தான் கோட்டை’என்பது போன்ற வசனங்கள் கதைக்கு ஏற்ற வகையில் எழுதப்பட்டுள்ளது. அவை தமிழ் டப்பிங்கிற்கு ஏற்ற மாதிரியும் இருப்பது கூடுதல் சிறப்பு.

 
முதல் பாகத்தில் காட்டிலிருந்த மரம், செடி, கொடி, விலங்குகளைப் பார்த்து வியந்த ரசிகர்கள், இரண்டாம் பாகத்தில் கடலையும் அதிலுள்ள உயிரினங்களையும் பார்த்து நிச்சயம் வியப்பார்கள். ஏனெனில், படத்தின் தொழில்நுட்பம் அப்படி. இருப்பினும், அவதார் -2 என்ற பிரமாண்டம் உயிரற்ற ஜீவனாக இருப்பது துரதிர்ஷ்டம் ப்ரோ!



 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...