???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 உச்சநீதிமன்றத்துக்கு இரவில் வழக்கறிஞர்கள் அனுப்பிய கடிதம்! 0 இந்தியா-சீனா எல்லைப் பிரச்சனையில் சமரசம் செய்ய தயார்: அமெரிக்க அதிபர் 0 தமிழகத்தில் புதிதாக 675 மருத்துவர்கள் 3 மாத ஒப்பந்த அடிப்படையில் நியமனம் 0 அயனாவரம் சிறுமி வன்கொடுமை: கைதி சிறையில் தற்கொலை 0 சென்னையில் கொரோனா தொற்று ஏற்பட்டோரின் எண்ணிக்கை 12 ஆயிரத்தை கடந்தது! 0 தமிழகத்தில் ரூ.15 ஆயிரம் கோடி முதலீடு: 17 நிறுவனங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம் 0 2020-21-ம் ஆண்டுக்கான புதிய பட்ஜெட்டை தாக்கல் செய்ய வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல் 0 சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தலைமை செவிலியர் உயிரிழப்பு 0 கொரோனா இன்று: தமிழகம் 853; சென்னை 558! 0 ஜெ. வீட்டை தமிழக முதல்வர் இல்லமாக பயன்படுத்தலாம்!- நீதிமன்றம் 0 தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 17 ஆயிரத்து 728 ஆனது! 0 அரசுக்கு தெரிவிக்காமல் ரயில்களை அனுப்பக்கூடாது: பினராயி விஜயன் 0 ஊரடங்கு தோல்வியடைந்துவிட்டது என்பதை ஒப்புக்கொள்ளுங்கள்: ராகுல் காந்தி 0 புலம்பெயர் தொழிலாளர்கள் நிலை குறித்து உச்சநீதிமன்றம் வேதனை 0 11 நாட்கள் மது விற்பனை வருமானம் ரூ. 1062 கோடி!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

அவர் தான் கலைஞர்!

Posted : செவ்வாய்க்கிழமை,   ஆகஸ்ட்   07 , 2018  06:50:14 IST


Andhimazhai Image
அரை நூற்றாண்டு காலம் ஒருவரே ஒரு கட்சியின் தலைவராக இருக்கிறார். இது சாதனையா? வேதனையா? தன்  வேதனைகளை சகித்துக்கொண்டு சமூகத்திற்கு சுகங்களைத் தந்த ஒரு சரித்திர சாதனையாளனின் சாகசம்.. இவரை விட்டால்  உங்களுக்கு வேறு எவரும் இல்லையா? என்று கேட்கிறார்கள்.  வேறு எவருக்கும் கிட்டாத பேறு , வேறு எவருக்கும் கிடைக்காத வரம் தலைவர் கலைஞர். ஐம்பது ஆண்டுகளை அவர் உண்டு,உறங்கி கண்டு, களித்து, உடுத்தி மகிழ்ந்து நாள்களை நகர்த்தியவரல்ல கலைஞர். காலமெல்லாம் போராடி கழகத்தை வளர்த்தவர். கழகத்தின் வழியாக தமிழையும் தமிழகத்தையம்  வளர்த்தவர். 
 
ஐந்துமுறை முதல்வராகப் ஆட்சிக்கு கட்டிலில், எஞ்சிய ஆண்டுகளில் எதிர்க்கட்சித் தலைவராக போராட்டக் களத்தில் ,  இடையில் 10 சட்டமன்றத் தேர்தல்களை எதிர் கொண்டு அனைத்த்திலும்  வெற்றிகண்டதும் இந்த ஐம்பது ஆண்டுகளிலும் தமிழகத்தின் தலைப்புச் செய்தியாகவே நிகழ்ந்ததும் தலைவர் கலைஞர் அவர்களின் தனிப்பெரும் சாதனை
 
தந்தை பெரியாரிடம் இருந்து பிரிந்து வந்து ஒரு அரசியல்கட்சியை தொடங்கி பதினெட்டே ஆண்டுகளில் மாநில ஆட்சியைக் கைப்பற்றி சாதனை படைத்தவர் அண்ணா. அந்நியரிடம் அடிமைப்பட்டிருந்த இந்தியாவை அகிம்சை என்னும் புதிய பேராயுதத்தை கையாண்டு விடுதலை என்னும் பெரும் பரிசினைப் பெற்ற காங்கிரஸ் கட்சியில் , மகாத்மா காந்தி, ஜவகர்லால் நேரு, சர்தார் வல்லபாய் படேல், டாகடர் ராஜேந்திர பிரசாத், லால்பகதூர்  சாஸ்திரி, இந்திராகாந்தி, காமராசர், கக்கன், பக்தவச்சலம், சி.சுப்பிரமணியம் போன்ற ஆகப்பெரிய ஆளுமைகள்  ஆட்சி செலுத்திய காலத்தில், மக்கள் அவர்களையெல்லாம்  கடவுளர்களாக தேவதூதர்களாகக் கருதிய காலத்தில்,  அவர்களை எதிர்த்து அரசியல் செய்து  இரண்டு தேர்தல்களில் படிப்படியான வெற்றி கண்டு மூன்றாவது தேர்தலில் ஆட்சியைக் கைப்பற்றுவது என்பது சாதாரணமான ஒன்றல்ல. அதனை அறிஞர் அண்ணா சாதித்தார்.  1949 முதல் 1967 வரை காங்கிரஸ் எதிர்ப்பு என்ற திசையில் மட்டுமே  சென்று கொண்டிருந்தது  திமுக. . மாநிலத்தைத் தாண்டி அகில இந்திய அரசியலில் பெரும் பங்கினையோ பார்வையையோ  அதுவரை செலுத்தவில்லை. 
 
ஆனால் 1969இல் அண்ணா அவர்களின் மறைவுக்குப் பிறகு கலைஞர் திமுகழகத்தின் தலைவரான பிறகு ,  அகில இந்தியாவையும் திமுக பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தார். 1969 இந்திய குடியரசுத் தலைவர் தேர்தலில் காங்கிரஸ் கட்சியினவேட்பாளர் சஞ்சீவ ரெட்டியை தோற்கடிக்க பிரதமர் இந்திராகாந்தி அம்மையார் விவிகிரி அவர்களை நிறுத்தியபோது விவி கிரி அவர்களை ஆதரித்து வெற்றி பெற வைத்தவர் கலைஞர். அன்றைக்கு கலைஞர் இந்திராகாந்தி அம்மையாருக்கு ஆதரவு தரவில்லை என்றால் இந்திய அரசியல்வரலாறு  வேறு பாதையில் திரும்பிச் சென்றிருக்கும். 
 
இந்திய மக்கள்  வரிப்பணத்தில் கணிசமான பங்கு முன்னாள் சமஸ்தான மன்னர்களுக்கு மானியமாகச் சென்றுகொண்டிருந்தது. ஏழை எளியவர் நலத்  திட்டங்களுக்கு செலவிட முடியவில்லை. எனவே மன்னர் மானியத்தை நிறுத்துவதென அம்மையார் இந்திரா காந்தி முடிவெடுத்தார்.அதற்கு காங்கிரஸ் கட்சியிலிலேயே கடுமையான எதிர்ப்பு. மொரார்ஜி தேசாய் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். அப்போது இந்திரா காந்தி அம்மையாருக்கு  ஆதரவுக் கரம் நீட்டியவர்  கலைஞர்.
 
அது போலவே பெருமுதலாளிகளுக்கும், பணக்காரர்களுக்கு மட்டுமே பயனளித்து வந்த வங்கிகளை,ஏழைஎளிய  சாதாரண நடுத்தர மக்களுக்கு கடன் உதவி தர வங்கிகளை தேசியமயமாகவேண்டும் என்னும் முற்போக்கான திட்டத்திற்கு அம்மையார் இந்திராகாந்தி அவர்களுக்கு துணை நின்றவர் தலைவர் கலைஞர். இதற்கான நாடாளுமன்ற வாக்கெடுப்பில் ஒரு ஒட்டு வித்தியாசத்தில் இந்திராகாந்தி தோல்வியை தழுவி தேர்தலை சந்தித்த பொது 1971 ஆம் ஆண்டு தேர்தலில் இந்திரா அம்மையாருடன் கை கோர்த்தவர் கலைஞர்.தமிழ்நாட்டில் பெருமளவுக்கு ஆதரவில்லாத இந்திரா காங்கிரசுக்கு 10 நாடாளுமன்றத் தொகுதிகளை ஒதுக்கி, திமுக 25 இடங்களில் போட்டியிட்டு வென்று அவரது முற்போக்குத் திட்டங்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டியவர் கலைஞர். 
 
 
நாடு நலம்பெற திட்டங்கள் கொண்டுவந்தபோது இந்திரா அம்மையாரை ஆதரித்த கலைஞர் , அவர் ஜனநாயகத்தை கொலை செய்ய முயன்றபோது, நெருக்கடி நிலையை அறிவித்து மூத்த தலைவர்களை சிறையில் அடை த்தபோது  அதனை எதிர்த்து குரல் கொடுத்தவரும் கலைஞர் தான். "உறவுக்கு கை கொடுப்போம்! உரிமைக்கு குரல் கொடுப்போம் " என்று முழங்கினார்.
 றெவொகெ ஏமெர்கென்cய்! றெச்டொரெ Dஎமcரcய்!! றெலெஅசெ தெ ளெஅடெர்ச்!!!  
என்று இந்தியாவிலேயே எமர்ஜென்சியை எதிர்த்து தீர்மானம் போடுகிற வல்லமை மிகுந்தவராக கலைஞர் திகழ்ந்தார். அப்போது செய்தி தணிக்கை நடைமுறையில் இருந்தபோது
. "வெண்டைக்காய் உடலுக்கு நல்லது" 
. "விளக்கெண்ணெய் சூட்டைத் தணிக்கும் " 
என்று நையாண்டி செய்திகளை எட்டுக்கால தலைப்புச் செய்திகளாக வெளியிட்ட துணிச்சல் மிகுந்த போராளியாகவும் திகழ்ந்தார். தன பிறந்த நாள் செய்தியால் அண்ணா வின் பெயரை தவிர்க்கச் சொன்னபோது தனி மனிதராக களமிறங்கி அண்ணா சிலையருகில் போராடிய போர்க்குணம் மிக்க தலைவர் கலைஞர். 
 
விவிகிரி அவர்களை குடியரசுத் தலைவராக துணை நின்றது மட்டுமல்ல,முதல்  பிற்படுத்தப் பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த  கியானி ஜெயில் சிங் அவர்களையும்  தாழ்த்தப் பட்ட சமுதாயத்தைச் சார்நத  கே ஆர் நாராயணன் அவர்களையும், முதல் பெண் குடியரசுத் தலைவராக பிரதீபா பாட்டீல் அவர்களையும்  குடியரசுத்தலைவர்களாக தேர்வு செய்ய காரணமாக இருந்தவர் கலைஞர். 
 
 சமூக நீதிக்கு காவலர் விபி சிங் அவர்களையும், தேவகவுடா அவர்களையும், ஐ.கே. குஜ்ரால் அவர்களையும் பிரதமர்களாக தேர்வு செய்ய பெரும் காரணமாக இருந்தவர் கலைஞர். அதுமட்டுமல்ல 2004இல் சோனியாகாந்தி அம்மையார் அவர்களை  பிரதமராக்க முதல் குரல் கொடுத்து ஒரு வலுவான கூட்டணி அமைய வழிவகுத்தவர் கலைஞர். இத்தனை இருந்தும் தேவேகவுடாவுக்கு பின்  கலைஞரே  பிரதமராகவேண்டும் என்று பலரும் விரும்பிய நேரத்திலும் என் உயரம் எனக்குத் தெரியும் என்று கோரி அதனை மறுத்த பெருமைக்கும் சொந்தக்காரர் கலைஞர். 
 
1991தேர்தலில் மிகப்பெரிய தோல்வியை சந்தித்த பின் ,இரண்டே ஆண்டுகளில் 1993இல் 9 ஆளுமைமிக்க மாவட்டச் செயலாளர்களுடன் வைகோ பிரிந்து சென்றபின்னரும் 1996 தேர்தலில் மகத்தான வெற்றி கண்டது அவர் தலைமையின் சிகரம். தோல்வி கண்டு துவண்டுவிடாமல், பிளவு கண்டு பயந்துவிடாமல் கழகத்தை வெற்றி இலக்கை நோக்கி செலுத்திய மகத்தான ஆளுமை  அவர். 
 
இந்தியாவில் வேறு எந்த மாநிலத்தையும் விட தமிழகத்தை பல துறைகளிலும் முன்னேறிய மாநிலமாக்கியது அவரது தலைமையே. இந்தியாவில் முதன்முறையாக குடிசைமாற்று வாரியம் கண்டது, சைக்கிள் ரிக்சாவை ஒழித்தது, விவசாயிகளுக்கும், நெசவாளிகளுக்கும் இலவச மின்சாரம் தந்தது, விவசாயிகள் கடன் ரத்து, பெரியார்  நினைவு சமத்துவபுரம்  பெண்களுக்கு சொத்துரிமை,ஏழைப் பெண்களின் திருமண உதவி, சத்துணவில் வாரம் ஐந்து முட்டை, போன்ற எண்ணற்ற திட்டங்களால் தமிழகத்தை தலைநிமிரச் செய்த தலைவர் அவர். தமிழரின் நூறாண்டுகாலக் கோரிக்கையான தமிழுக்கு செம்மொழித் தாக்குதிக்கான  அங்கீகாரத்தை பெற்றுத்  தந்ததும் அவரே..  இந்தியாவிலேயே முதன்முதலாக தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த வரதராசன் அவர்களை முதல் உயர்நீதிமன்ற நீதிபதியாக்கி அதன் வாயிலாக முதல்தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த உச்சநீதிமன்ற நீதிபதி என்னும் பெருமையும் பெற்றுத் தந்தவரும்  கலைஞர் தான். சென்னையில் டைடல் தொழில்நுட்ப பூங்காவையும், அண்ணா நூற்றாண்டு நூலகத்தையும், குமரிமுனையில் வள்ளுவருக்கு வானுயர சிலையும் அமைத்தவர் கலைஞரே. 
 
கல்வித்துறையில், பள்ளிகளில்  சமசீர்கல்வியை நடைமுறைப்படுத்தியதும், மாவட்டத்திற்கொரு மருத்துவக் கல்லூரி அமைய உழைத்தவரும் கலைஞரே. கோவை வேளாண் பல்கலைக்கழகம், சென்னை யில் . விலங்கியல் பல்கலைக்கழகம். அம்பேத்கார் சட்டப்பல்கலைக்கழகம்,நெல்லையில்  மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம்,திருச்சியில்  பாரதிதாசனார் பல்கலைக்கழகம்,  சேலத்தில்  திருவள்ளுவர் பல்கலைக் கழகம் , தமிழ் இணைய பல்கலைக்கழகம்,  திருவாரூரில் மத்திய பல்கலைக்கழகம், என்று பல்வேறு பல்கலைக்கழகங்கள் அமைத்து சூத்திரத் தமிழர்கள் கல்விகற்று தலை நிமிரச் செய்தவரும்  கலைஞர்தான். 
 
ஆக, கலைஞர் தன் வாழ்நாளில் அரை நூற்றாண்டை கட்சிக்கு தலைமை தாங்கி தமிழகத்துக்கு ஒளி காட்டியவர். தமிழினத்துக்கு வழிகாட்டியவர். தமிழை செம்மொழியாக்கி தமிழுக்கு ஒளி கூட்டியவர்.தமிழ் நாடு, மொழி, இனம் மூன்றுக்கும் உயர்வு தந்த ஒப்பற்ற மாமனிதர் கலைஞர். 
 
 
பொள்ளாச்சி மா.உமாபதி ( ஆகஸ்ட் 2018 அந்திமழை இதழில் வெளியான கட்டுரை)


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...