அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ஆட்சி செய்பவர்கள் ஏன் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லை? காங். எம்.பி கேள்வி 0 சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு அரசுப்பணியில் முன்னுரிமை: அமைச்சர் தகவல் 0 தடுப்பூசி போட்டுக் கொண்ட 2783 பேருக்கும் எந்த பாதிப்பும் இல்லை : அமைச்சர் விஜயபாஸ்கர் 0 “கொரோனா தடுப்பூசியை நானும் போட்டுக்கொள்வேன்” - முதலமைச்சர் பழனிசாமி “கொரோனா 0 கொரோனா தடுப்பூசி திட்டத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி 0 தமிழகத்தில் 166 மையங்களில் கொரோனா தடுப்பூசி 0 மத்திய அரசு - விவசாயிகள் இடையேயான பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வி 0 பொங்கல்: உச்சம் தொட்ட டாஸ்மாக் மது விற்பனை! 0 அயோத்தியில் ராமர் கோயில் கட்ட குடியரசுத் தலைவர் ரூ.5 லட்சம் நன்கொடை 0 கமலுக்கு மீண்டும் டார்ச் லைட்! 0 த.மா.கா. நிர்வாகி ஞானதேசிகன் காலமானார்! 0 அனைவரும் திருக்குறளைப் படியுங்கள்: பிரதமர் மோடி பரிந்துரை 0 விவசாயிகள் மத்திய அரசுடன் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை 0 திமுகவை எதிர்க்க சசிகலாவையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்! குருமூர்த்தி பரபரப்பு பேச்சு! 0 ஜல்லிக்கட்டு கண்டு ரசித்த ராகுல்காந்தி!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

பயணிகள் வாகனங்களின் விற்பனை ஒன்பதாவது மாதமாக தொடர்ந்து சரிவு!

Posted : செவ்வாய்க்கிழமை,   ஆகஸ்ட்   13 , 2019  19:03:03 IST

இந்திய வாகனங்கள் உற்பத்தியாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கடந்த 2018ம் ஆண்டு ஜூலை மாதத்தில் விற்ற வாகனங்களின் விற்பனையை விட இந்த ஆண்டு ஜூலை மாதம் வாகனங்களின் விற்பனை 30.8% அளவிற்கு குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, கடந்த ஆண்டு இதே மாதத்தில் 2,90,931 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டிருந்த நிலையில், இந்த ஆண்டு அதன் விற்பனை 2,00,790 ஆக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு கார் விற்பனையைப் பொறுத்த வரையில், 35.95 சதவீதம் குறைவடைந்துள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் 1,91,979 கார்கள் விற்பனை செய்யப்பட்டிருந்த நிலையில் இந்த ஆண்டு 1,22,956 கார்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளது.

மோட்டார் சைக்கிள்களைப் பொறுத்த வரையில் 18.88 சதவீதம் அளவிற்கு விற்பனை சரிவடைந்துள்ளது. கடந்த ஆண்டு இதே ஜூலை மாதத்தில் 11,51,324 இருச்சக்கர வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டிருந்த நிலையில் இந்த ஆண்டு 9,33,996 ஆக குறைவடைந்திருப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக இருச்சக்கர வாகன விற்பனையில் 16.82 சதவீதம் அளவிற்கு விற்பனை சரிவடைந்துள்ளது. கடந்த ஆண்டு 18,17,406 இருச்சக்கர வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டிருந்த நிலையில், இந்த ஆண்டு 15,11,692 மட்டும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

மோட்டார் வாகன வகைகளின் விற்பனை 18.71 சதவீதம் குறைந்துள்ளது. கடந்த ஆண்டு 22,45,223 வாகனங்கள் விற்பனையாகியிருந்த நிலையில் இந்த ஆண்டு 18,25,148 வாகனங்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளது.

ஜூலை மாதத்தைப் பொறுத்த வரை கார்கள், மோட்டார் சைக்கிள்கள், வணிக வாகனங்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. மாருதி சுசுகி, டாடா என அனைத்து நிறுவனங்களின் தயாரிப்புகளும் சரிவை சந்தித்துள்ளன.click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...