???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இடியால் சேதமான தாஜ்மஹாலின் பிரதான கல்லறை 0 தியேட்டர்கள் திறக்க அனுமதி வேண்டும்: அரசுக்கு பாரதிராஜா கடிதம் 0 இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,82,143 ஆக உயர்வு! 0 'மத்திய அரசு ரூ.7,500, மாநில அரசு ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்' 0 காய்ச்சல், இருமல் இருந்தால் பஸ்சில் அனுமதி இல்லை: தமிழக அரசு 0 ஒரே நாளில் 1,149 பேருக்கு கொரோனா: 13 பேர் உயிரிழப்பு 0 இது மிகவும் கவனமாக இருக்க வேண்டிய நேரம்: பிரதமர் மோடி 0 சென்னையில் இருந்து வெளியே சென்றால் கட்டாய கொரோனா பரிசோதனை 0 தமிழகத்தில் ஒரே நாளில் 938 பேருக்கு கொரோனா தொற்று உறுதி 0 நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஜூன் 30-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு: உள்துறை அமைச்சகம் 0 இந்தியாவில் கொரோனா பாதிப்பு 173,763 ஆக உயர்வு 0 தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டியது! 0 சின்னத்திரை படப்பிடிப்புகளில் 60 பேர் வரை பணியாற்றலாம்: முதலமைச்சர் உத்தரவு 0 தீபாவும், தீபக்கும் ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள்: தீர்ப்பில் திருத்தம் செய்த உயர்நீதிமன்றம் 0 பொன்மகள் வந்தாள்- விமர்சனம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

வடமாநில பெண்ணுக்கு சாலையோரத்தில் பிரசவம் பார்த்த எழுத்தாளர்! கோவையில் உருக்கம்!

Posted : சனிக்கிழமை,   ஏப்ரல்   18 , 2020  01:04:07 IST


Andhimazhai Image

கோவை சிங்காநல்லூர் காமராஜர் சாலை அருகே உள்ள துளசி லே அவுட்  பகுதியில்  ஏராளமான ஒடிசா  மாநிலத்தவர் வசித்து வருகின்றனர். ரயில்வே கேட் அருகே கூடாரம் அமைத்து வசித்து வரும் இவர்கள் இங்கு கிடைக்கும் பணிகளை செய்து வருகின்றனர். இங்கு இருக்கும் 26 வயது பெண்ணிற்கு வியாழக்கிழமை பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து அந்த பெண்ணை வடமாநில இளைஞர்கள்  தூக்கி வரும்போது அந்த பெண்ணிற்கு பிரசவ வலி அதிகரித்து துடித்துள்ளார். அங்கு உள்ள இந்திய  கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் முன்பாக அந்த பெண்ணை உட்கார வைத்துவிட்டு, கம்யூனிஸ்ட் கட்சியினர் உதவியுடன்  ஆம்புலன்சுக்கு போன் செய்துள்ளார்.

மேலும்  இப்பகுதியில் ஆட்டோ ஓட்டி வரும் எழுத்தாளர் ஆட்டோ சந்திரனுக்கும்  தகவல்  சொல்லப்பட்டுள்ளது. எழுத்தாளர் ஆட்டோ சந்திரன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தனது ஆட்டோவில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முற்பட்டநிலையில் வடமாநில  பெண்ணுக்கு  சாலை ஒரத்திலேயே பிரசவம்  ஆனது.

அந்த பகுதியில் இருந்த பெண்கள் கொரோனா அச்சம் காரணமாக வடமாநில பெண்ணின் பக்கத்தில் வரவே இல்லை. இந்நிலையில், எழுத்தாளர் ஆட்டோ சந்திரன் அந்த பெண்ணிற்கு பிரசவம் பார்த்தார். சுகப்பிரசவமாக ஆண் குழந்தை பிறந்த நிலையில் அந்த குழந்தையை கையில் தாங்கி பிடித்தபடி ஆட்டோ சந்திரன் இருந்தார்.

அப்போது 108  ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்து சேர்ந்தனர். ஆட்டோ சந்திரன்  உதவியுடன் தொப்புள் கொடியை அகற்றிய 108 ஆம்புலன்ஸ் மருத்துவ பணியாளர்கள் தாய், சேய்  இருவரையும் கோவை அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர்.

அந்த பெண் ஒதிஷா மாநிலத்தில் இருந்து வந்த தொழிலாளி ஆவார். இந்த காட்சிகளை சம்பவ இடத்தில் இருந்த நபர் செல்போனில் பதிவு செய்து சமூக வலைதளங்களில்  பதிவிட்ட  நிலையில் இந்த வீடியோ தற்போது வைரலாகி  வருகின்றது. எழுத்தாளர் ஆட்டோ சந்திரன் எழுதிய" லாக்கப்" நாவலை , விசாரணை என்ற பெயரில் திரைப்படமாக இயக்குனர் வெற்றிமாறன் எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...