???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 திமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் கைது! 0 முதல்வர் தவறு செய்யவில்லை எனில் எதற்கு பதற வேண்டும்? தினகரன் கேள்வி 0 ஆடிட்டர் குருமூர்த்தி சொல்வது கேலியாக உள்ளது: தம்பிதுரை 0 எதிர்க்கட்சிகளின் பொதுக்கூட்டம் பாஜகவுக்கான சாவுமணி: மம்தா பானர்ஜி 0 கர்நாடகாவில் இன்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் 0 வசூலில் கடந்த ஆண்டை ஓரங்கட்டிய டாஸ்மாக்! 0 விழா இன்றி திறக்கப்பட்டது எம்ஜிஆர் நூற்றாண்டு நினைவு வளைவு 0 தண்டனையை ரத்து செய்யக்கோரி பாலகிருஷ்ணா ரெட்டி உச்ச நீதிமன்றத்தில் மனு 0 சிபிஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா உள்பட 4 பேர் நீக்கம் 0 தமிழும் சித்தர்களும்-23 மருத்துவர் சிவக்குமார் பெருமாள் எழுதும் தொடர்! 0 காணும் பொங்கல்: மெரினாவில் பலத்த பாதுகாப்பு! 0 சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற அருண் ஜெட்லி: நலம்பெற வாழ்த்து கூறிய ராகுல் காந்தி 0 ட்விட்டரில் “பேட்ட”, “விஸ்வாசம்” வசூல் சர்ச்சை! 0 அலங்காநல்லூரில் தொடங்கியது ஜல்லிக்கட்டு போட்டி! 0 கர்நாடகத்தில் ஆட்சியமைக்க பாஜக முயற்சி: துணை முதல்வர் காட்டம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஊழல் வழக்கு: கிறிஸ்டியன் மைக்கேல் நீதிமன்றத்தில் ஆஜர்

Posted : புதன்கிழமை,   டிசம்பர்   05 , 2018  21:43:43 IST

அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் பேரத்திற்கு இடைத்தரகராக செயல்பட்ட கிறிஸ்டியன் மைக்கேலை துபாய் அரசு இந்தியாவுக்கு நாடு கடத்தியுள்ளது. செவ்வாயன்று நள்ளிரவு டெல்லி வந்த அவரிடம் சிபிஐ தலைமையகத்தில் வைத்து நள்ளிரவு முழுவதும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதைத்தொடர்ந்து புதன்கிழமை காலை அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
 
இந்தியாவில் முக்கிய தலைவர்கள் பயணிப்பதற்காக 3,600 கோடி ரூபாய் மதிப்பில் 12 ஹெலிகாப்டர்கள் வாங்க அகஸ்டா வெஸ்ட்லேண்ட் என்ற இத்தாலி நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்த நிறுவனத்தில் ஊழல் நடைபெற்றதாக புகார் எழுந்ததை அடுத்து கடந்த 2014-ம் ஆண்டு ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது.
 
கிறிஸ்டியன் மைக்கேல் 54, தனி விமானம் மூலம் அழைத்துவரப்பட்டார். இதுகுறித்து, கிறிஸ்டியனின் வழக்கறிஞர் ரோஸ்மேரி பேட்ரிசி கூறும்போது, இன்டர் போல் அறிவிப்பின் அடிப்படையில் கடந்த ஆண்டு ஐக்கிய அரபு எமிரேட்ஸில் கைது செய்யப்பட்ட மைக்கேல் பிணையில் வெளிவந்தார்.
 
தேசிய பாதுகாப்பு ஆலோசகரான அஜித் தோவாலின், வழிகாட்டுதலின் கீழ் மைக்கேல் ஒப்படைக்கப்பட்டதாக சிபிஐ தெரிவித்துள்ளது.
 
மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது, குடியரசுத் தலைவர், பிரதமர், முன்னாள் பிரதமர் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் மற்றும் விஐபிக்கள் பயணிப்பதற்காக 12 சொகுசு ஹெலிகாப்டர்கள் வாங்க அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது.
 
இதைத்தொடர்ந்து, அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனம் ஊழலில் ஈடுபட்டதாக புகார் எழுந்ததை அடுத்து கடந்த 2014-ம் ஆண்டு ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...