செய்தி உங்கள் நண்பருக்கு அனுப்பப்பட்டது
செய்தி உங்கள் நண்பருக்கு அனுப்ப முடியவில்லை. சிரிது நேரம் கழித்து முயற்சிக்கவும்..
நண்பருக்கு மின்னஞ்சல் செய்

காற்புள்ளிகளால் பிரித்து, செல்லுபடியாகும் மின்னஞ்சல் முகவரிகளை உள்ளிடவும்
அதிகபட்ச வரம்பான 200 எழுத்துக்குறியை மீறியது

செய்தியை உள்ளிடவும்
திமுக எம்.பி திருச்சி சிவா வீடு மீது தாக்குதல்!
மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா வீட்டிற்கு அருகே எஸ்.பி.ஐ காலணி பகுதியில் இன்று காலை இறகு பந்து மைதானத்தை…
மன்னிக்கவும், உங்கள் மின்னஞ்சலை எங்களால் அனுப்ப முடியவில்லை. சிறிது நேரம் காத்திருந்து, மீண்டும் முயற்சிக்கவும்.
திமுக எம்.பி திருச்சி சிவா வீடு மீது தாக்குதல்!
Posted : புதன்கிழமை, மார்ச் 15 , 2023 13:01:23 IST
மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா வீட்டிற்கு அருகே எஸ்.பி.ஐ காலணி பகுதியில் இன்று காலை இறகு பந்து மைதானத்தை திறந்து வைப்பதற்காக அமைச்சர் கே.என்.நேரு வருகை தந்தார். அப்பொழுது எம்.பி சிவாவின் ஆதரவாளர்கள் அவரது பெயரை பெயர் பலகையில் போடவில்லை என கூறி நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேருவிற்கு எதிராக கருப்பு கொடியை காட்டினர்.
கருப்பு கோடி காட்டியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமைச்சர் கே.என்.நேருவின் ஆதரவாளர்கள் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் எம்.பி திருச்சி சிவாவின் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த கார் மற்றும் வீட்டின் கண்ணாடிகளை உடைத்தனர்.
இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து கருப்பு கொடிய காட்டியவர்கள் மற்றும் கண்ணாடியை உடைத்தவர்களை கண்டோன்மென்ட் போலீசார் கைது செய்து விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
|