???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 நைஜீரியாவில் 18 இந்தியர்கள் கடத்தல் 0 சசிகலா வீட்டை இடிக்க மாநகராட்சி அதிகாரிகள் நோட்டீசு! 0 பிரதமர் மோடியுடன் திமுக எம்.பி.க்கள் சந்திப்பு 0 ஜெயலலிதா நினைவிடத்தில் அதிமுகவினர் மரியாதை! 0 திமுகவில் இணைந்த பி.டி. அரச குமார்! 0 இன்று கர்நாடகா இடைத்தேர்தல் வாக்குப்பதிவு 0 106 நாட்கள் சிறைக்குப் பின் நாடாளுமன்றத்தில் ப.சிதம்பரம்! 0 விளைச்சல் குறைவே வெங்காய விலை உயர்வுக்கு காரணம்: நிர்மலா சீதாராமன் 0 ஆளுமை மிக்கவர் வைகோ: செல்லூர் ராஜு 0 ப. சிதம்பரத்துக்கு ஜாமீன் 0 தமிழகத்தில் நாளை பலத்த மழைக்கு வாய்ப்பு 0 கூகுள் 'ஆல்பபெட்' செயல் அதிகாரியாக சுந்தர் பிச்சை நியமனம்! 0 பொருளாதார சீர்திருத்தங்கள் தொடரும்: நிர்மலா சீதாராமன் 0 'குழந்தைகளின் ஆபாச படங்களைப் பார்ப்போர் சென்னையில்தான் அதிகம்' 0 உள்ளாட்சி அமைப்புகளில் மறைமுகத் தேர்தல்: வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

தமிழக மெட்ரோ நகரங்களில் 5 முறைக்கு மேல் ஏ.டி.எம் பயன்படுத்தினால் ரூ.20 கட்டணம்!

Posted : சனிக்கிழமை,   நவம்பர்   01 , 2014  01:26:33 IST

சென்னை உள்ளிட்ட 6 மெட்ரோ நகரங்களில் மாதத்துக்கு 5 முறைக்கு மேலாக ஏடிஎம் பயன்படுத்தினால் கட்டணம் வசூலிக்கும் நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருகிறது. அதன்படி, கணக்கு வைத்திருக்கும் வங்கியின் ஏடிஎம்மை மாதத்தில் 6வது முறை பயன்படுத்தும் போதிலிருந்து ஒவ்வொரு முறையும் 20 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது. பணம் எடுப்பது மட்டுமின்றி, கணக்கில் இருப்பை அறிவது, மினி ஸ்டேட்மென்ட் எடுப்பது ஆகிய நடவடிக்கைகளும் இந்த எண்ணிக்கையில் அடங்கும். ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறையின்படி நாட்டின் 6 பெரு நகரங்களில் மட்டும் இந்த நடைமுறை அமலுக்கு வருகிறது. சென்னை, டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு, ஹைதராபாத் ஆகிய நகரங்களில் வங்கி வாடிக்கையாளர்கள் பிற வங்கி ஏடிஎம்மை பயன்படுத்தும் அனுமதியும் 5ல் இருந்து 3 ஆக குறைக்கப்பட்டுள்ளது. எனினும், சென்னை தவிர,தமிழகத்தின் பிற பகுதிகளிலும், பூஜ்யம் இருப்பு வைக்க அனுமதியுள்ள சிறிய சேமிப்பு கணக்குகளிலும் தற்போதுள்ள நிலையே தொடரும் என்றும் ரிசர்வ் வங்கி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...