???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 மத்திய வேளாண் சட்டத்திற்கு எதிராக ராஜஸ்தானிலும் மசோதா 0 கமலுடன் நடித்த காட்சிகளை நீக்கியதால் அழுதேன் : நவாசுதீன் சித்திக் 0 ’தீபாவளிக்கு 25,000 டன் வெங்காயம் இறக்குமதி’ – பியூஷ் கோயல் 0 ’தமிழ் இன உரிமைகளை காத்திட உறுதி கொள்வோம்’ – வைகோ 0 ’டாஸ் ஜெயித்திருந்தால் பவுலிங் எடுத்திருப்போம்’ – கே.எல்.ராகுல் 0 சகாயம் ஐ.ஏ.எஸ் விருப்ப ஓய்வு! 0 அதிமுக ஆட்சியின் வேதனைகளை மக்களிடம் எடுத்துச் சொல்லுங்கள்: மு.க.ஸ்டாலின் கடிதம் 0 இன்றுடன் முடிகிறது நான்காம் கட்ட ஊரடங்கு 0 35 அரசு அலுவலகங்களில் கணக்கில் காட்டாத ரூ.4.12 கோடி பறிமுதல் 0 25 ஆயிரம் டன் வெங்காயம் தீபாவளிக்குள் வந்து சேரும்: மத்திய அமைச்சர் 0 எம்.ஜி.ஆருக்கு பின் கட்சி ஆரம்பித்த நடிகர்கள் யாரும் நிலைத்து நிற்கவில்லை: கடம்பூர் ராஜூ 0 தமிழகத்தில் நவம்பர் 18ம் தேதிக்கு முன் மருத்துவக் கலந்தாய்வு 0 சி.எஸ்.கே ரசிகர்களின் வேதனை! 0 ஆளுநர் தாமதத்தால் 7.5% உள்ஒதுக்கீட்டுக்கு அரசாணை: முதலமைச்சர் பழனிசாமி 0 மகர விளக்கு பூஜைக்காக வரும் நவம்பர் 15ல் சபரிமலை திறப்பு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

திறப்புவிழாவுக்கு தயாரான உலகின் மிகநீண்ட சுரங்கப்பாதை

Posted : வெள்ளிக்கிழமை,   செப்டம்பர்   18 , 2020  08:17:54 IST


Andhimazhai Image

உலகின் மிக நீண்ட சுரங்கப்பாதையாக உருவாகியிருக்கும் ‘அடல் சுரங்கப்பாதை’ திறப்பு விழாவுக்கு தயாராகியிருக்கிறது. இமய மலையில் மணாலி அருகே உள்ள ரோதங் கணவாயில் உருவாகியிருக்கும் இந்த சுரங்கப்பாதை கடல்மட்டத்தில் இருந்து 10,000 அடி உயரத்தில் அமைந்திருக்கிறது.

 

முதன்முதலில் கடந்த 2002-ஆம் ஆண்டில் அப்போதயை பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் அறிவித்த இந்த சுரங்கப்பாதை திட்டத்திற்கு கடந்த 2010-இல் அடிக்கல் நாட்டப்பட்டது. சரியாக 10 ஆண்டுகள் கடந்து பயன்பாட்டிற்கு தயாராகியிருக்கும் இதன் மதிப்பீடு 3,200 கோடி ரூபாய். சரியாக 9.02 கிமீ தூரம் நீளும் அடல் சுரங்கப்பாதை, இமாச்சல பிரதேசத்தின் மணாலி - லடாக் இடையேயான முந்தைய 46 கிமீ பயண தூரத்தை குறைத்திருக்கிறது.

 

மின்சாரம், தொழில்நுட்ப கட்டமைப்புகள் சீராக  இயங்குவதாக கூறியுள்ள அடல் சுரங்கப்பாதை திட்டத்தின் தலைமை பொறியாளர் கே.பி. புருஷோத்மன், பொறியியல் துறையின் அசாத்திய உருவாக்கமாக இருக்கும் இந்த சுரங்கப்பாதை, ஏற்கெனவே 10,000 அடி உயரத்தில் அமைக்கப்பட்டிருக்கும் மிக நீண்ட சுரங்கம் என்கிற சாதனையை படைத்துவிட்டது என்கிறார். தற்போது சுரங்கப்பாதையின் சோதனை ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.

 

சுரங்கப்பாதையில் அமைக்கப்பட்டுள்ள விளக்குகள், காற்றோட்ட அமைப்புகள், தீயணைப்பு உபகரணங்கள், தானியங்கி தொழிட்பங்கள் உள்ளிட்டவை குறித்து பொறியாளர்கள் ஆய்வு நடத்தி வருகிறார்கள். சுரங்கப்பாதையின் ஒவ்வொரு 60 மீட்டர் இடைவெளியிலும் தீயணைப்பு கருவிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு 500 மீட்டர் இடைவெளியிலும் அவசரகால வெளியே செல்லும் வழி உள்ளது. காற்றின் தரத்தை கண்காணிக்கும் கருவி, தொலைப்பேசி ஆகியவையும் தேவையான அளவில் கட்டமைக்கப்பட்டிருக்கின்றன. சிசிடிவி கேமரா அடங்கிய தானியங்கி விபத்து கண்காணிப்பு கருவி இந்த சுரங்கப்பாதையின் மற்றொரு சிறப்பம்சம்.

 

உலகின் மற்ற நாடுகளில் இருக்கும் சுரங்கப்பாதைகளில் மொபைல் சிக்னல்கூட போதிய அளவில் கிடைக்காத நிலை இருக்கிறது. ஆனால் அடல் சுரங்கப்பாதையில் பி.எஸ்.என்.எல் 4ஜி இண்டெர்நெட் மற்றும் சிக்னல் துல்லியமாக கிடைக்கும் வசதி செய்யப்பட்டிருக்கிறது. ஒருநாளுக்கு 3,000 கார்கள், 1,500 கனரக வாகனங்களின் போக்குவரத்துக்கு உதவுமென கணக்கிடப்பட்டிருக்கும் இந்த சுரங்கப்பாதையில் அதிகபட்சமாக 80கிமீ வேகத்தில் பயணிக்கலாம். லடாக் எல்லையில் சீனாவுடன் பதற்றமான சூழல் இருக்கும் நிலையில், அடல் சுரங்கப்பாதையை பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைக்கவுள்ளார்.

 


 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...