செய்தி உங்கள் நண்பருக்கு அனுப்பப்பட்டது
செய்தி உங்கள் நண்பருக்கு அனுப்ப முடியவில்லை. சிரிது நேரம் கழித்து முயற்சிக்கவும்..
நண்பருக்கு மின்னஞ்சல் செய்

காற்புள்ளிகளால் பிரித்து, செல்லுபடியாகும் மின்னஞ்சல் முகவரிகளை உள்ளிடவும்
அதிகபட்ச வரம்பான 200 எழுத்துக்குறியை மீறியது

செய்தியை உள்ளிடவும்
ஆசியாவின் பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி மீண்டும் முதல் இடம்!
கொரோனா பரவல் காரணமாக உலகம் முழுவதும் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. …
மன்னிக்கவும், உங்கள் மின்னஞ்சலை எங்களால் அனுப்ப முடியவில்லை. சிறிது நேரம் காத்திருந்து, மீண்டும் முயற்சிக்கவும்.
ஆசியாவின் பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி மீண்டும் முதல் இடம்!
Posted : வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 24 , 2020 04:09:25 IST
கொரோனா பரவல் காரணமாக உலகம் முழுவதும் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவின் பல முன்னணி நிறுவனங்களின் பங்குகள் தொடர்ந்து சரிவைச் சந்தித்து வந்தன. பங்குச்சந்தையில் ரிலையன்ஸ் நிறுவனம் கண்ட சறுக்கலால் ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்திலிருந்து பின்னடைவைச் சந்தித்தார் முகேஷ் அம்பானி. கடந்த மாதத்தில், சீனாவின் அலிபாபா நிறுவன நிறுவனர் ஜாக் மா இந்தப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தார்.
இச்சமயம் ரிலையன்ஸுக்கு ஊக்கம் தரும் விதமாக ரூ.43,574 கோடியை ஜியோ நிறுவனத்தில் முதலீடு செய்து, அதன் 9.9% பங்குகளை வாங்கியது ஃபேஸ்புக் நிறுவனம். இந்த ஒப்பந்தம் பங்குச்சந்தையில் ரிலையன்ஸ் நிறுவனத்திற்குப் பெரும் ஏற்றத்தைக் கொடுத்தது. இதன் விளைவாக ஒருநாளில் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 49 பில்லியன் டாலர் வரை உயர்ந்துள்ளது. இதனையடுத்து ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி மீண்டும் முதல் இடத்தைப் பிடித்துள்ளார்.
|