அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 அதிமுக கூட்டணி: 23 தொகுதிகளில் போட்டியிடும் பாமக! 0 ட்விட்டரில் ட்ரெண்டாகும் வாடிவாசல் ஹேஸ்டேக்! 0 கோவில்களை பக்தர்களிடம் கொடுத்துவிடுங்கள்; சத்குருவிற்கு நடிகர் சந்தானம் ஆதரவு! 0 இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியிலிருந்து பும்ரா விடுவிப்பு! 0 பாஜகவால் என்னை நெருங்க முடியாது - ராகுல் காந்தி சவால்! 0 போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் வாபஸ்! 0 திமுக ஆட்சியில் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் - மு.க.ஸ்டாலின் 0 புதிய கட்சியைத் தொடங்கிய அர்ஜூன மூர்த்தி; வாழ்த்து தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த்! 0 பெட்ரோல், டீசலுக்கு லோன் கேட்டு இளைஞர்கள் நூதன போராட்டம்! 0 மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார் பழ.கருப்பையா! 0 கூட்டணி குறித்து கமல்ஹாசனுடன் பேச்சுவார்த்தை நடத்திய சரத்குமார்! 0 தொடரும் ஸ்டிரைக்: அவதிப்படும் பொதுமக்கள்! 0  தா.பாண்டியனின் உடல் நல்லடக்கம் 0 தி.மு.க பொதுக்குழு கூட்டம் ஒத்திவைப்பு 0 காமராஜருக்கும் பாரதிய ஜனதாவுக்கும் என்ன தொடர்பு? திருநாவுக்கரசர் கேள்வி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

ஆசிய - பசிபிக் பொருளாதார ஒப்பந்தம் : இந்தியா கையெழுத்திடவில்லை!

Posted : திங்கட்கிழமை,   நவம்பர்   16 , 2020  16:56:32 IST

ஒருங்கிணைந்த பிராந்திய ஆசிய - பசிபிக் பொருளாதார ஒப்பந்தத்தில் 15 நாடுகள் கையெழுத்திட்ட நிலையில், இந்தியா கையெழுத்திடவில்லை.
 
ஆசிய நாடுகள் கூட்டமைப்பின் வருடாந்திர உச்சி மாநாடு காணொளி வாயிலாக நடைபெற்றது. அப்போது பிராந்திய பொருளாதார ஒத்துழைப்புக்கான ஒப்பந்தத்தில் தென்கிழக்கு ஆசிய நாடுகள் கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள இந்தோனேஷியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, புருணே, வியட்நாம், லாவோஸ், மியன்மர், கம்போடியா ஆகிய 10 நாடுகளும், சீனா, ஜப்பான், தென்கொரியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய 5 நாடுகளும் கையெழுத்திட்டன.
 
ஆசிய - தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு இடையேயான தடையற்ற வர்த்தகத்தை ஊக்குவிக்க இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இந்த ஒப்பந்தத்தால் சில பொருட்களுக்கு வரி ரத்து செய்யப்படுகிறது. இதனால், உள்ளூர் சந்தைகளில் வெளியூர் பொருட்களின் வரத்து அதிகரிக்கும். எனவே, உள்ளூர் உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படுவார்கள். உள்ளூர் உற்பத்தியாளர்களை பாதுகாக்கும் பொருட்டு சில பொருட்களுக்கு விலக்கு அளிக்க வேண்டுமென இந்தியா  வலியுறுத்தியிருந்தது. சீனாவின் கை இதனால் மேலும் ஓங்கும் என்ற நிலையில்  இந்த ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடவில்லை.
 
 
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...