அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 கிரிக்கெட்: இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமோ? 0 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு 0 ஸ்டாலின் துண்டு சீட்டு இல்லாமல் விவாதத்துக்கு வரத்தயாரா? ஜெயக்குமார் 0 பிரம்மாண்ட ட்ராக்டர் பேரணிக்கு தடை விதிக்க மறுப்பு! 0 புதுச்சேரியில் 30 தொகுதிகளிலும் வெற்றி பெறாவிட்டால் தற்கொலை செய்வேன்:ஜெகத்ரட்சகன் 0 இண்டர்நேஷனல் ஹிட் அடித்த 'மாஸ்டர்' 0 வேளாண் சட்டங்களுக்கு முன் பலதரப்பிலும் ஆலோசனை நடத்தியதா? அரசு பொய் சொல்கிறது: ப.சிதம்பரம் விமர்சனம் 0 காலில் அறுவை சிகிச்சை.. சில நாட்கள் ஓய்வு தேவை - கமல்ஹாசன் 0 தமிழகத்தில் வீடில்லாத ஏழைகளுக்கு இலவச வீடு - முதலமைச்சர் 0 வாராக் கடன்களை சமாளிக்க BAD BANK திட்டம் - ரிசர்வ் வங்கி 0 நார்வேயில் தடுப்பூசி போட்டுக்கொண்ட 23 பேர் உயிரிழப்பு 0 ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்குக: மு.க. ஸ்டாலின் 0 ஆட்சி செய்பவர்கள் ஏன் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லை? காங். எம்.பி கேள்வி 0 சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு அரசுப்பணியில் முன்னுரிமை: அமைச்சர் தகவல் 0 தடுப்பூசி போட்டுக் கொண்ட 2783 பேருக்கும் எந்த பாதிப்பும் இல்லை : அமைச்சர் விஜயபாஸ்கர்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

சிட்னி டெஸ்ட்: போராடி டிரா செய்த இந்திய அணி!

Posted : திங்கட்கிழமை,   ஜனவரி   11 , 2021  01:32:15 IST


Andhimazhai Image

காலையில் இந்தியா- ஆஸ்திரேலியா சிட்னி டெஸ்ட் ஆட்டத்தின் ஸ்கோரைப் பார்த்தவர்கள் ரிஷப் பந்தும் புஜாராவும் அவுட் ஆனதும் இந்தியா சுருண்டு விடும் என்று நினைத்திருப்பார்கள். ஆனால் ஹனுமா விஹாரியும் அஸ்வினும் வேறு திட்டம் வைத்திருந்தார்கள். இருவரும் சேர்ந்து சுமார் 40 ஓவர்களுக்கு மேல் போராடித் தாக்குப் பிடித்து ஆட்டத்தை டிரா செய்துவிட்டார்கள். சிட்னியில் இரண்டாவது இன்னிங்க்ஸில் 200 ரன்களுக்கு மேல் எடுக்க முடியாது என்று சொன்ன ரிக்கி பாண்டிங்கின் முகத்தில் கரி.

 

அதுவும் என்ன மாதிரி ஆட்டம். ஹனுமா விஹாரிக்கு தொடக்கத்திலேயே கால் தசையில் காயம் ஏற்பட்டு ஓடமுடியவில்லை. அவர் நொண்டிக்கொண்டே இருந்தார். ஓர் முனையில் அவர் தடுப்பாட்டம் மட்டுமே ஆடினார். ஓடவே இல்லை. அதற்கு ஏற்ப அஸ்வினும் இன்னொரு முனையில் நிலைத்து நின்றார். ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர்கள் அஸ்வினை வீழ்த்த, ஆளைக் குறிவைத்து போட்ட பந்துகளை எல்லாம் உடலில் வாங்கிக்கொண்டாலும் மனந்தளராமல் ஆடினார்.

 

1979-ல் 131 ஓவர்கள் ஆடி, இந்திய அணி நான்காவது இன்னிங்க்ஸில் டிரா செய்துள்ளது. அதற்குப் பிறகு டிரா செய்ய 131 ஓவர்கள் ஆடி இருப்பது இப்போதுதான் என்பதைக் கவனிக்கவேண்டும்.

 

முன்னதாக 97 ரன்களில் அவுட் ஆன ரிஷப் பந்த், 73 ரன்களில் அவுட் ஆன புஜாரா போன்றவர்களின் பங்களிப்பும் முக்கியமானது.

 

ஆனால் அஸ்வினுக்கும் விஹாரிக்கும் நிச்சயம் இது மறக்கவே முடியாத ஆட்டமாக மாறி இருக்கும். ஜடேஜா கட்டை விரலில் அடிபட்டு ஆட வர முடியாத நிலைவேறு. இந்த நிலையில் எல்லா வாய்ப்புகளும் இந்தியாவுக்கு எதிராக இருந்த நிலையில் இந்த டிரா செய்யப்பட்டுள்ளது.

 

அஸ்வின் பந்துவீச்சாளர் என்ற நிலையில் இருந்து மட்டை வீச்சிலும் சிறந்தவர் என்று பலமுறை நிரூபித்துள்ளார். இருப்பினும் இந்த ஆட்டம் அவருக்கு மிகுந்த நிறைவாக அமைந்திருக்கும். அவ்வப்போது காயமடைந்த விஹாரியிடம் பேசி அவரையும் ஊக்கப்படுத்தி, ஸ்டார்க், கம்மின்ஸ் என்ற வேகப்பந்து அரக்கன்களை சமாளித்து, கடைசி மூன்று மணி நேரம் முழுக்க அஸ்வின் ஷோ!



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...