???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 திமுக - காங்கிரஸ் இடையே கருத்து வேறுபாடு இல்லை: கே.எஸ்.அழகிரி 0 நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கில் போடுவது தள்ளிவைப்பு! 0 உள்ளாட்சி தேர்தலில் அக்கிரமத்தை மீறி வெற்றி பெற்றுள்ளோம்: மு.க.ஸ்டாலின் 0 நடிகை ராஷ்மிகா வீட்டில் வருமான வரி சோதனை 0 பினராயி விஜயனுக்கு எதிராக கேரளா ஆளுநர் போர்க்கொடி! 0 பாஜக தலைவராகிறார் ஜே.பி.நட்டா! 0 விலங்கோடு மக்கள் அனையர்:கால்நடை மருத்துவர் வே.ஞானப்பிரகாசம் எழுதும் பணி அனுபவத் தொடர்-1 0 பிரியா பவானி சங்கருடன் காதலா? கொதித்தெழுந்த எஸ்.ஜே.சூர்யா 0 நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறுத்திவைக்க மறுப்பு! 0 370-வது பிரிவை நீக்கியது வரலாற்றுச் சிறப்புமிக்க நகர்வு: ராணுவ தளபதி 0 துரைமுருகனுக்கு காங்கிரஸ் தலைவர்கள் கேள்வி 0 காங்கிரஸ் விலகினால் கவலையில்லை: துரைமுருகன் அதிரடி 0 “இந்தியாவில் நடந்து கொண்டிருப்பது வருத்தம் அளிக்கிறது”: ‘மைக்ரோசாப்ட்’ CEO நாதெள்ளா கருத்து 0 இந்தியா - ஆஸ்திரேலியா போட்டியில் CAA எதிர்ப்பு போராட்டம் 0 ”நூஸ் என்கிற பாலில் பொய் என்கிற தண்ணீரை கலந்துவிடுகிறார்கள்”
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ராகுல் மட்டுமே மோடிக்கு மாற்று: அசோக் கெலாட்

Posted : புதன்கிழமை,   டிசம்பர்   11 , 2019  22:55:53 IST

காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், ராஜஸ்தான் மாநில முதலமைச்சருமான அசோக் கெலாட், பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது ராகுல் காந்தி குறித்தும், அவரது தேர்தல் செயல்பாடுகள் குறித்தும் பேசினார்.

இது தொடர்பாக கெலாட் கூறுகையில், ‘பிரதமர் மோடிக்கு மாற்று தலைமை இல்லை என கூறுவது தவறு. ராகுல் காந்திதான் அவருக்கு சரியான மாற்று. மோடி மற்றும் அமித்‌ஷாவை தைரியமாகவும், அச்சமின்றியும் எதிர்க்க ராகுல் காந்தியால் மட்டுமே முடியும். அதேநேரம் மோடியின் வித்தியாசமான அணுகுமுறையால் ராகுல் காந்தியால் மக்களுடன் இணைப்பை ஏற்படுத்த முடியவில்லை என்பது உண்மை’ என்று தெரிவித்தார்.

கடந்த 2017-ம் ஆண்டு குஜராத் சட்டசபை தேர்தலில் ராகுல் காந்தியின் கடின உழைப்பால் பா.ஜனதா தோற்கும் நிலை இருந்ததாக கூறிய கெலாட், ஆனால் மோடி குறித்து மணிசங்கர் அய்யர் கூறிய கருத்தை முன்வைத்து உணர்வுப்பூர்வமாக மோடி பிரசாரம் மேற்கொண்டதால்தான் பா.ஜனதா வெற்றி பெற்றதாகவும் அவர் தெரிவித்தார்.

நாடாளுமன்ற தேர்தலில் விவசாயிகள், இளைஞர்கள், வேலைவாய்ப்பு, பணவீக்கம் உள்ளிட்ட முக்கியமான பிரச்சினைகளை முன்வைத்து ராகுல் காந்தி பிரசாரம் மேற்கொண்டதாகவும், ஆனால் துல்லிய தாக்குதல், தேசியவாதம் போன்றவற்றால் மேற்படி பிரச்சினைகள் பின்னுக்குத் தள்ளப்பட்டதாகவும் கெலாட் கூறினார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...