???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இந்தியாவுடன் இனி பேச்சுவார்த்தை இல்லை: இம்ரான் கான் 0 ப.சிதம்பரத்தை சிபிஐ கையாளும் விதம் மிகவும் வருத்தமளிக்கிறது: மம்தா பானர்ஜி 0 அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடும் சரிவு! 0 ஸ்டெர்லைட் ஆலையில் விஷவாயு தாக்கி 13 ஊழியர்கள் இறந்தது உண்மையா? ஆதாரம் அளிக்க நீதிமன்றம் உத்தரவு 0 ப.சிதம்பரத்திடம் இன்று இரவு முதல் சிபிஐ விசாரணை தொடங்குகிறது! 0 அன்னிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா விளக்கம் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு 0 நிலவின் முதல் படத்தை அனுப்பியது சந்திரயான் - 2 0 காஷ்மீர் பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்வது குறித்து டிரம்ப் மீண்டும் பேட்டி 0 காஷ்மீர் விவகாரத்தை திசை திருப்பவே ப. சிதம்பரம் கைது நடவடிக்கை: கார்த்தி சிதம்பரம் 0 ப.சிதம்பரத்தை வேட்டையாட துடிப்பது வெட்கக்கேடானது: பிரியங்கா காந்தி 0 நீதிக்கு தலைவணங்குவேன்; தலைமறைவாக மாட்டேன்: கைதாகும் முன் பேட்டியளித்த ப.சிதம்பரம் 0 ப.சிதம்பரத்துக்கு எதிராக அதிகார துஷ்பிரயோகம்: ராகுல் காந்தி, மு.க.ஸ்டாலின் கண்டனம் 0 காஷ்மீர் விவகாரம்: டெல்லியில் திமுக இன்று ஆர்ப்பாட்டம் 0 ப. சிதம்பரம் கைதை கண்டித்து தமிழகத்தில் இன்று ஆர்ப்பாட்டம் 0 10,000 ஊழியர்களை நீக்க பார்லே நிறுவனம் முடிவு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

பிரதமர் அலுவலகத்தில் சிபிஐ சோதனை நடத்த வேண்டும்: அரவிந்த் கெஜ்ரிவால்

Posted : ஞாயிற்றுக்கிழமை,   பிப்ரவரி   10 , 2019  22:42:52 IST

ரபேல் ஒப்பந்த விவகாரத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும், இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங் டெல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
 
இந்நிலையில், ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக பிரதமர் அலுவலகத்தில் சிபிஐ சோதனை நடத்த வேண்டும் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தியுள்ளார்.
 
இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ஒப்பந்தம் தொடர்பான ஆவணங்களை பறிமுதல் செய்து தொடர்புடையவர்களை கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
 
தன்னுடைய அலுவலகம், கொல்கத்தா காவல் ஆணையர் இல்லம் ஆகியவற்றில் நுழைந்ததைப் போன்று, சுதந்திரமான சிபிஐ அமைப்பு, பிரதமர் அலுவலகத்துக்குள் நுழைய வேண்டும் என்றும் அரவிந்த் கெஜ்ரிவால்  தெரிவித்துள்ளார்.
 
ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு வலியுறுத்தியுள்ளார்.
 
இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், ரபேல் ஒப்பந்தத்தில் 59 ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு நடந்திருப்பதாக வெளியாகியுள்ள செய்திகளை குறிப்பிட்டுள்ளார்.
 
இது இந்திய பாதுகாப்புத்துறையின் மிகப்பெரிய ஊழல் என்றும் அவர் விமர்சித்துள்ளார். இந்த விவகாரத்தில் பிரதமர் மவுனம் காப்பது. பாஜக அரசு மோசமான முடிவுகளையே மேற்கொண்டுள்ளது என்பதை உணர்த்துவதாகவும் அவர் கூறியுள்ளார்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...