???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற நிபந்தனையற்ற ஆதரவு: ராகுல் காந்தி அறிவிப்பு 0 நீட் தேர்வு கருணை மதிப்பெண்கள் விவகாரம்: சி.பி.எஸ்.இ- உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு! 0 மாவட்டம்தோறும் ஐ.ஏ.எஸ்.அகாடமிகள் தொடங்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு 0 மேட்டூர் அணையில் இருந்து ஜூலை 19-ஆம் தேதி பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு: முதலமைச்சர் அறிவிப்பு 0 காவிரியில் வெள்ளப்பெருக்கு: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 90 அடியை நெருங்குகிறது 0 சித்தா, ஆயுர்வேத படிப்புகளுக்கு +2 மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை: தமிழக முதலமைச்சர் அறிவிப்பு 0 பிரதமர் மோடி பொதுக்கூட்டத்தில் தற்காலிக பந்தல் சரிந்து விழுந்து விபத்து 0 கேரளாவில் தொடரும் கனமழை: எட்டு மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு 0 எஸ்.பி.கே கட்டுமான நிறுவனத்துக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிரடி சோதனை 0 ரஜினி வேறு பிரபஞ்சத்தில் வாழ்ந்து வருகிறார்: மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் 0 8 வழிச்சாலை போன்ற திட்டங்கள் தேவை: ரஜினி பேட்டி 0 இன்றைய ஆட்சியாளர்களிடம் எளிமையுமில்லை; தூய்மையுமில்லை: ப.சி. பேச்சு 0 கொல்லைப்புறம் வழியாக வந்தவர் டிடிவி தினகரன்: எடப்பாடி பழனிசாமி தாக்கு! 0 உலகக் கோப்பையை வென்றது ஃபிரான்ஸ்! 0 ஒகேனக்கல்லில் அருவிகளை மூழ்கடிக்கும் வெள்ளம்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ஆருஷி கொலை வழக்கில் பெற்றோர் விடுதலை: சிபிஐ மேல் முறையீடு

Posted : வெள்ளிக்கிழமை,   அக்டோபர்   13 , 2017  00:36:17 IST

டெல்லி, நொய்டாவைச் சேர்ந்தவர் ராஜேஷ் தல்வார். இவரது மனைவி நூபுர் தல்வார். பல் மருத்துவர்களான இவர்களின் மகள் ஆருஷி தல்வார் கடந்த 2008-ம் ஆண்டு வீட்டில் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் இறந்துகிடந்தார். இந்த கொலையில் முதலில் வீட்டு வேலைக்காரர் ஹேம்ராஜ் மீது போலீசார் சந்தேகம் அடைந்தனர். ஆனால் அவரும் அதே வீட்டில் மர்மமான முறையில் கொல்லப்பட்டு கிடந்தார். இந்த இரட்டை கொலை சம்பவம் நாட்டையே உலுக்கியது. பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சிபிஐக்கு மாற்றப்பட்டது. விசாரணையின் முடிவில் ஆருஷியின் பெற்றோரான ராஜேஷ் தல்வார், நூபுல் தல்வார் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது. 
 
வழக்கை விசாரித்த காசியாபாத் சிபிஐ நீதிமன்றம், அவர்கள் இருவருக்கும் கடந்த 2013ம் ஆண்டு ஆயுள் தண்டனை விதித்தது. தண்டனையை எதிர்த்து இருவரும் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இவ்வழக்கின் அனைத்து தரப்பு சாட்சியங்களிடமும் விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது, பெற்றோர்தான் குற்றவாளி என்பதற்கு போதிய ஆதாரம் இல்லை என்று கூறி அவர்களை விடுதலை செய்தது. இந்த வழக்கில் ராஜேஷ் தல்வார் மற்றும் அவரது மனைவி விடுவிக்கப்பட்டதை எதிர்த்து, சிபிஐ, உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய முடிவு செய்துள்ளது. 
 
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...