???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 போராட்டம், கலவரங்களை கடந்து 18 படிகளில் ஏறினார் பெண் பக்தை 0 #MeToo எதிரொலி: மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா 0 சபரிமலையில் பெண் பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல்: பத்திரிக்கையாளர்கள் சங்கம் கண்டனம் 0 தண்ணீர் லாரி உரிமையாளர்கள் போராட்டம் வாபஸ் 0 மக்களவைத் தேர்தலை எதிர்கொள்வது குறித்து ஸ்டாலின் ஆலோசனை! 0 சபரிமலை கோயில் நடை இன்று திறப்பு! 0 கொலை வழக்கில் சாமியார் ராம்பாலுக்கு ஆயுள் தண்டனை விதிப்பு 0 இந்தியாவின் "ரா" உளவு அமைப்பு என்னை கொலை செய்ய சதி: இலங்கை அதிபர் குற்றச்சாட்டு 0 சபரிமலை செல்பவர்களுக்கு முழு பாதுகாப்பு அளிக்கப்படும்: பினராயி விஜயன் உறுதி 0 குட்கா வழக்கு: 3 பேரின் ஜாமின் மனுவை தள்ளுபடி 0 பகத்சிங் பிறந்த நாளை கொண்டாடியதற்காக கல்லூரி மாணவி சஸ்பெண்ட் 0 ஆன்லைன் பட்டாசு விற்பனைக்கு உயர் நீதிமன்றம் தடை 0 பிரதமரின் இதயத்தில் ஏழைகளுக்கு இடமில்லை: ராகுல் குற்றச்சாட்டு 0 அசாமில் போலி என்கவுண்டர்: ராணுவ மேஜர் ஜெனரலுக்கு ஆயுள் தண்டனை! 0 #MeToo புகார் கூறிய பெண் பத்திரிகையாளர் மீது எம்.ஜே. அக்பர் மானநஷ்ட வழக்கு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

​மாணவிகளை தவறாக திசை திருப்ப முயன்ற ஆசிரியை; வைரலாகும் ஆடியோ!

Posted : ஞாயிற்றுக்கிழமை,   ஏப்ரல்   15 , 2018  09:19:00 IST

அருப்புக்கோட்டை தனியார் கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியை ஒருவர், மதிப்பெண், பணம் என ஆசை வார்த்தை கூறி, மாணவிகளை தவறான பாதைக்கு திருப்ப முயன்றது தொடர்பான ஆடியோ வெளியாகியுள்ளது. 
 
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள, தனியார் கல்லூரி ஒன்றில் கணிதத்துறை பேராசிரியையாக பணிபுரிந்து வருபவர் நிர்மலாதேவி. இவர், தேர்வுத்தாள் திருத்தும் பணிக்காக காமராஜர் பல்கலைக்கழகத்திற்கு சென்று வருவது வழக்கம். 
 
அந்த பல்கலைக்கழகத்தில் உயர் பொறுப்பில் உள்ளவர்கள், கல்லூரி மாணவிகளை தவறான நோக்கத்திற்கு  பேசி அழைத்து வந்தால், 85 சதவீதத்திற்கு அதிகமான மதிப்பெண்களுடன் , பணமும் தருவதாக வாக்குறுதி அளித்துள்ளார். பேராசிரியை நிர்மலா தேவி 4 மாணவிகளிடம் ஆசைவார்த்தை கூறிய ஆடியோ, சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
இந்த சம்பவம் குறித்து மாணவிகள் அளித்த புகாரை அடுத்து, கல்லூரி நிர்வாகம் பேராசிரியை நிர்மலாவை தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்தனர். இந்நிலையில், மாணவிகளிடம் பேசியதை ஒப்புக்கொண்டுள்ள நிர்மலா, தான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுவிட்டதாக விளக்கம் அளித்துள்ளார்.  


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...