???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 வண்ணாரப்பேட்டையில் 5-வது நாளாக தொடரும் போராட்டம்! 0 வண்ணாரப் பேட்டை போராட்டக்களத்தில் திருமணம்! 0 சுவாமி அக்னிவேஷ் CAA-வுக்கு புதிய வடிவில் எதிர்ப்பு! 0 மத்திய அரசுக்கு ரூ.10,000 கோடி நிலுவையை செலுத்திய ஏர்டெல்! 0 டி.என்.பி.எஸ்.சி முறைகேட்டில் தி.மு.கவினர்: ஜெயக்குமார் குற்றச்சாட்டு 0 மதமாற்றத்தைத் தடுத்தவர்கள் பற்றி அவதூறு வீடியோ: பெண் கைது! 0 போலீஸ் பணிக்கு கூலி வேலை செய்வதே மேல்: வைரலாகும் பதிவு! 0 CAA-க்கு எதிராக ஒத்துழைமை இயக்கம்: தி.மு.க. தீர்மானம் 0 மோகன் பகவத்தின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த பாலிவுட் நடிகை! 0 டாடாவின் காதல் தோல்வி! 0 நட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி: 31- இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர் 0 காவலர்கள் தாக்குதல் நடத்தும் வீடியோவை நாங்கள் வெளியிடவில்லை: ஜாமியா பல்கலைக்கழகம் 0 CAA-விலிருந்து மத்திய அரசு பின்வாங்காது: பிரதமர் திட்டவட்டம் 0 தயாநிதிமாறன் மீது ஜெயக்குமார் அவதூறு வழக்கு தொடர அனுமதி! 0 கொரோனா வைரஸ்: பலி எண்ணிக்கை 1600-ஆக உயர்வு!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

’ஜெட்லியின் மறைவு..பேரிழப்பு’: பிரதமர் உள்பட அரசியல் தலைவர்கள் இரங்கல்

Posted : சனிக்கிழமை,   ஆகஸ்ட்   24 , 2019  04:49:57 IST

முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லியின் மறைவுக்கு பிரதமர், குடியரசுத் தலைவர், துணை குடியரசுத்தலைவர், தமிழக முதல்வர், தமிழிசை, திமுக தலைவர் ஸ்டாலின், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

 

ராம்நாத் கோவிந்த்: வலிமையுடனும், துணிவுடனும் நீண்ட காலமாக உடல்நலக்குறைவால் போராடிய ஜெட்லியின் மறைவு வேதனை அளிக்கிறது. திறமையான வழிக்கறிஞர், புகழ்மிக்க அமைச்சர். நாட்டை கட்டமைப்பதில் அவரின் பங்கு அளவிட முடியாதது.

 

வெங்கையா நாயுடு: ஜெட்லியின் மறைவு, தேசத்திற்கும், தனிப்பட்ட முறையில் எனக்கும் ஏற்பட்டுள்ள பேரிழப்பு. எனது சோகத்தை சொல்ல வார்த்தைகள் இல்லை. அவர் திறமையானவர், சிறந்த நிர்வாகி.

 

மோடி: அருண் ஜெட்லி பெரிய அரசியல்வாதி. உயர்ந்த அறிவாற்றல் மிக்க சட்ட வல்லுநர். வெளிப்படையான தலைவரை இந்தியா இழந்துள்ளது. அவரது மறைவு மிகவும் வருத்தம் அளிக்கிறது. அவரது மனைவி சங்கீதா மற்றும் மகன் ரோஹன் ஆகியோரிடம் தொலைப்பேசியில் பேசி, எனது இரங்கலை தெரிவித்துள்ளேன். அவரது ஆத்மா சாந்தியடையட்டும்.

 

இவ்வாறு கூறியுள்ளனர்

 

 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...