???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 திமுக - காங்கிரஸ் இடையே கருத்து வேறுபாடு இல்லை: கே.எஸ்.அழகிரி 0 நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கில் போடுவது தள்ளிவைப்பு! 0 உள்ளாட்சி தேர்தலில் அக்கிரமத்தை மீறி வெற்றி பெற்றுள்ளோம்: மு.க.ஸ்டாலின் 0 நடிகை ராஷ்மிகா வீட்டில் வருமான வரி சோதனை 0 பினராயி விஜயனுக்கு எதிராக கேரளா ஆளுநர் போர்க்கொடி! 0 பாஜக தலைவராகிறார் ஜே.பி.நட்டா! 0 விலங்கோடு மக்கள் அனையர்:கால்நடை மருத்துவர் வே.ஞானப்பிரகாசம் எழுதும் பணி அனுபவத் தொடர்-1 0 பிரியா பவானி சங்கருடன் காதலா? கொதித்தெழுந்த எஸ்.ஜே.சூர்யா 0 நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறுத்திவைக்க மறுப்பு! 0 370-வது பிரிவை நீக்கியது வரலாற்றுச் சிறப்புமிக்க நகர்வு: ராணுவ தளபதி 0 துரைமுருகனுக்கு காங்கிரஸ் தலைவர்கள் கேள்வி 0 காங்கிரஸ் விலகினால் கவலையில்லை: துரைமுருகன் அதிரடி 0 “இந்தியாவில் நடந்து கொண்டிருப்பது வருத்தம் அளிக்கிறது”: ‘மைக்ரோசாப்ட்’ CEO நாதெள்ளா கருத்து 0 இந்தியா - ஆஸ்திரேலியா போட்டியில் CAA எதிர்ப்பு போராட்டம் 0 ”நூஸ் என்கிற பாலில் பொய் என்கிற தண்ணீரை கலந்துவிடுகிறார்கள்”
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ஒரு வாழைப்பழம் 85 லட்சம்!

Posted : சனிக்கிழமை,   டிசம்பர்   07 , 2019  02:17:44 IST


Andhimazhai Image
ஒரு வாழைப்பழம், ஒரு டேப்... இவை மட்டுமே 85 லட்சத்துக்கு விலை போயிருக்கின்றன!. நாம் அன்றாடம் பயன்படுத்தும் சாதாரண பொருட்களை கொண்டு உருவாக்கப்படும் கலை பொருட்கள் சில நேரம் ஆச்சரியம் தரும் மதிப்பை பெற்றுவிடுவது இயல்புதான். அதற்காக இவ்வளவு அட்டகாசமா செய்வீர்கள்? என கேட்கவைக்கும் அளவுக்கு ஒரு பொருள் விற்பனையாகியுள்ளது.
 
மௌரிஸியோ கேட்டலன் எனும் இத்தாலிய கலைஞர் ஒரு கலை பொருளை உருவாக்கியுள்ளார். ‘காமெடியன்’ எனும் தலைப்பில் அவர் செய்த ஆர்ட் வொர்க் இந்திய மதிப்பில் சுமார் 85 லட்சத்துக்கும் அதிமாக விலைபோயிருக்கிறது. அப்படி அவர் என்ன செய்துவிட்டார் என்ற ஆச்சரியம் எழலாம்.
 
சுவற்றில் ஒரு வாழைப்பழத்தை வைத்து அதன் மீது டேப் ஒட்டி, இதுதான் நான் உருவாக்கிய கலை பொருள் என்று சொல்லிவிட்டார் அவர். இதுகுறித்து விளக்கம் அளிக்கும் கேட்டலன், “வாழைப்பழம் ஒரு உலகளாவிய வர்த்தகத்தின் சின்னம், நகைச்சுவைக்கான உன்னதமான சாதனம்” என கூறுகிறார்.
 
 
ஆர்ட் பேசல் மியாமி கண்காட்சியில் அவர் வைத்த இரண்டு வாழைப்பழங்கள் ஏற்கெனவே விற்றுவிட்டன. தொடர்ந்து மூன்றாவதாக உருவாக்கிய வாழைப்பழம் தான் கிட்டதட்ட 85 லட்சத்துக்கு விலைபோயிருக்கிறது.
 
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பலரும் சமூக வலைதளங்களில் கலாய்க்க தொடங்கிவிட்டனர். “இது ஒரு போலியான கலை பொருள்”, “நான் கூட கொஞ்சம் அழகாக வாழைப்பழத்தை வைத்து டேப் ஒட்டுவேன்”,  “இந்த அபூர்வ கலைபொருள் தீர்ந்துவிடவில்லை. என்னிடம் 20 வாழைப்பழங்கள் உள்ளன, சலுகை தொடங்குகிறது” என நெட்டீஸன்கள் பதிவிடுகிறார்கள். 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...