???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 குஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்ட பில்கிஸ் பானோவுக்கு ரூ. 50 லட்சம் இழப்பீடு! 0 4 தொகுதி இடைத்தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு! 0 இலங்கை குண்டு வெடிப்பில் 45 குழந்தைகள் இறந்துள்ளனர்: யூனிசெஃப் 0 கோமதி மாரிமுத்துக்கு முதலமைச்சர் வாழ்த்து 0 சாதி மத மோதல்களை உருவாக்கும் விதமாக சமூக வளைதளங்களில் பதிவிட்டால் குண்டர் சட்டம்! 0 மோடி மீதான விமர்சனம்: ராகுல் காந்திக்கு உச்சநீதிமன்றம் மீண்டும் நோட்டீஸ் 0 சிவகார்த்திகேயன் வாக்களிக்க அனுமதித்த அதிகாரி மீது நடவடிக்கை 0 வங்கக் கடலில் புயல் உருவாக வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் 0 பொன்பரப்பி கலவரம் குறித்து பாமக விளக்கம்! 0 அமித்ஷா போட்டியிடும் தொகுதியில் வாக்களித்தார் மோடி 0 மக்களவை தேர்தல்: 3-ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது 0 ஜெயலலிதா நினைவிடம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த மனு தள்ளுபடி 0 காங்கிரஸ் சார்பில் குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் தேர்தலில் போட்டி! 0 தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு! 0 இந்தியக் கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிப்பு!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

பா.ஜ.கவிடம் கேட்க வேண்டிய அவசியம் இல்லை: செல்லூர் ராஜூவுக்கு அற்புதம்மாள் பதில்

Posted : ஞாயிற்றுக்கிழமை,   பிப்ரவரி   10 , 2019  22:27:56 IST

எழுவர் விடுதலைக்கான மக்கள் சந்திப்பு இயக்கத்தின் சார்பில் பேரறிவாளனின் தாயார் ஒவ்வொரு மாவட்டமாக ஊர்வலமாக சென்றுவருகிறார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘இது கலந்துரையாடல் கூட்டம் தான். பொதுக்குழு அல்லது மாநாடு கிடையாது. இது பெரும்பான்மை காட்டும் நேரம் கிடையாது.
 
ஒவ்வொரு ஊராக சென்று அனைவருடன் கலந்து பேசி கடைசியில் ஆளுநர் கையொப்பம் இடவில்லை என்றால் அப்பொழுது அனைவரும் ஒன்று சேர வாய்ப்பு உள்ளது. நான் தமிழக அரசு கட்டுப்பாட்டில் வாழக்கூடிய ஒரு குடிமகள். என் மகனும் அப்படித்தான். எழுவர் விடுதலையை தமிழக அரசுதான் பெற்றுத்தரவேண்டும்.
 
நான் பா.ஜ.கவை அணுகவேண்டிய அவசியம் கிடையாது. ஏனென்றால் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்து விட்டது. நீதிமன்றத் தீர்ப்பையே ஏன் ஆளுநர் மதிக்கவில்லை என்று தான் இந்த மக்கள் சந்திப்பு கலந்துரையாடல். இதில் அ.தி.மு.க மெத்தனமாக இருக்கிறதா? சுறுசுறுப்பாக இருக்கிறதா? என்பது எனக்கு தேவையில்லாத பிரச்சனை.
 
இந்த வழக்கு தொடர்ந்ததில் எனக்கு வெறும் வாய்தா மட்டுமே நடந்து கொண்டிருக்கிறது. கொஞ்சம் நாட்களுக்கு முன்னால் கூட வழக்கு நிலுவையில் உள்ளது என்று இழுத்தடித்தார்கள். எழுவர் விடுதலையில் அனைவரும் அக்கறையுடன் இருக்கிறார்கள் என்பது தெரியவந்துள்ளது. உங்கள் மகனை உங்களிடம் ஒப்படைப்பேன் என்று மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாக்குறுதி அளித்து உள்ளார்கள்.
 
இது அனைவருக்கும் தெரியும். அதை புரிந்தவர்கள், இப்பொழுது அரசியலில் இருக்கிறார்கள். ஜெயலலிதாவின் வாக்குறுதியை நிறைவேற்றி தான் ஆகவேண்டும். எழுவர் விடுதலை எங்களுடைய கொள்கை முடிவு என்று அனைவரும் சொல்கிறார்கள். அந்த கொள்கை முடிவை நிறைவேற்றுவார்களா? அல்லது பாதியில் விட்டு செல்கிறார்களா? என்பதை செய்தியாளர்கள் நீங்கதான் கேட்க வேண்டும். செல்லூர் ராஜு கடந்த சில நாட்களுக்கு முன்பாக அந்த எழுவரின் விடுதலை நாங்கள் போட்ட பிச்சை என்று கூறியதற்கு முதலில் நானே சற்று ஆத்திரப்பட்டேன்.
 
ஆனால் மக்களாகிய நாம் போட்ட வாக்கு பிச்சையை கொண்டு தான் அமைச்சரவையில் உள்ளார். அவர் உள்ளிட்ட அமைச்சர்கள் ஏழு பேர் விடுதலைக்கு தீர்மானம் போட்டு கையெழுத்திட்டு ஆளுநரிடம் கொடுத்தார்கள்’என அற்புதம்மாள் தெரிவித்தார்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...