???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 பிரசவத்தில் குழந்தையின் தலை துண்டான சம்பவம்: மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் 0 அமமுக 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு 0 தூத்துக்குடியில் தமிழிசை; சிவகங்கையில் எச்.ராஜா போட்டி! 0 வாரணாசியில் மோடி, காந்தி நகரில் அமித்ஷா: பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் 0 சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை: ஐந்து பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை 0 தலைமறைவாக இருந்த நிரவ் மோடி லண்டனில் கைது! 0 மக்களவைத் தேர்தலில் திருமாவளவன் வெற்றி பெற பா.ரஞ்சித் வாழ்த்து! 0 அதிமுக வேட்பாளர்கள் ஒரே நேரத்தில் வேட்புமனு தாக்கல்! 0 பொள்ளாச்சி பாலியல் வழக்கு: சிபிஐ-க்கு மாற்றுவதில் இழுபறி! 0 ₹2,000 சிறப்பு நிதி திட்டம் நிறுத்திவைப்பு: தமிழக அரசு தகவல் 0 அதிமுக எம்.எல்.ஏ கனகராஜ் மாரடைப்பால் மரணம் 0 சுயேட்சையாக போட்டியிடும் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.! 0 அ.ம.மு.க-விலிருந்து நீக்கப்பட்ட வி.பி.கலைராஜன் தி.மு.க-வில் இணைந்தார்! 0 திருவாரூரிலிருந்து தேர்தல் பரப்புரையை தொடங்கினார் ஸ்டாலின்! 0 பணக்காரர்கள் தான் காவலாளி வைத்துக்கொள்வார்கள்: பாஜகவை விமர்சித்த பிரியங்கா!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

"ஆளுநர் மௌனம் காப்பது ஏன்?": அற்புதம் அம்மாள் கண்ணீர்

Posted : செவ்வாய்க்கிழமை,   டிசம்பர்   18 , 2018  22:57:14 IST

ஏழு தமிழர்களின் விடுதலை குறித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும், அமைச்சரவை பரிந்துரைத்தும் 100 நாட்கள் ஆகின்ற நிலையில் ஆளுநர் மௌனம் காப்பது ஏன் என்று பேரறிவாளனின் தாய் அற்புதம் அம்மாள் கேள்வி எழுப்பியுள்ளார்.
 
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், சாந்தன், நளினி, முருகன் உள்ளிட்ட 7 பேர் கடந்த 27 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர்.
 
இந்நிலையில், விசாரணை அதிகாரிகளின் விளக்கத்தின் அடிப்படையில் தன்னை விடுவிக்க வேண்டுமென்று பேரறிவாளன் தொடர்ந்த வழக்கை  உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு விசாரித்தது. பேரறிவாளனை விடுதலை செய்வது குறித்து தமிழக அரசே முடிவுசெய்து கொள்ளலாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
 
விடுதலை தொடர்பாக ஆளுநருக்கு தமிழக அரசு பரிந்துரை செய்யலாம் என்றும், பரிந்துரையின் மீது முடிவெடுக்கும் முழு அதிகாரம் ஆளுநருக்கு உள்ளதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
 
இதனை அடுத்து, 7 பேரை விடுதலை செய்யும் பரிந்துரையை ஆளுநருக்கு அனுப்புவது குறித்து ஆலோசனை நடத்திய தமிழக அமைச்சரவை குற்றஞ்சாட்டப்பட்ட 7 பேரையும் விடுவிக்க முடிவெடுத்து அதை தமிழக ஆளுநருக்கு பரிந்துரை செய்து தீர்மானமாக நிறைவேற்றியது.
 
இது குறித்து பேரறிவாளனின் தாய் அற்புதம் அம்மாள் தீர்மானம் நிறைவேற்றி 100 நாட்கள் ஆகியும் இது குறித்து தமிழக ஆளுநர் எந்த பதிலும் இதுவரை ஏன் அளிக்கவில்லை. நிரபராதியின் தாய் மனதை மக்கள் புரிந்துகொண்டார்கள். ஆளுநர் மாளிகைக்கு புரிவது எப்போ?? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...