???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 உலக அளவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 64 ஆயிரத்தை தாண்டியது! 0 மோடியின் வேண்டுகோளால் மின்சார கட்டமைப்பில் இன்று பாதிப்பு உண்டாகும்: ஜெய்ராம் ரமேஷ் 0 இந்தியாவில் 21 - 40 வயதுக்கு இடைப்பட்டவர்களே 42% கொரோனாவால் பாதிப்பு 0 இன்று முதல் மதியம் 1 வரை மட்டுமே கடைகள் திறந்திருக்க அனுமதி 0 துபாயில் இருந்து வந்த நபரால் 11 பேருக்கு கொரோனா 0 கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண் மருத்துவருக்கு ஆரோக்கியமான குழந்தை பிறந்தது! 0 தமிழகத்தில் கொரோனாவுக்கு 5 பேர் உயிரிழப்பு 0 விலங்கோடு மக்கள்… கால்நடை மருத்துவர் வே.ஞானப்பிரகாசம் எழுதும் பணி அனுபவத் தொடர்-5 0 விலங்கோடு மக்கள்… கால்நடை மருத்துவர் வே.ஞானப்பிரகாசம் எழுதும் பணி அனுபவத் தொடர்-4 0 பாசக்கார மனிதர்கள்! 0 இந்தியாவில் கொரோனா பாதிப்பு 2500-ஐ கடந்தது! 0 இரட்டை குழந்தைகளுக்கு கொரோனா- கோவிட் என பெயர் சூட்டிய பெற்றோர்! 0 ஊரடங்கு காலத்தில் பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை அதிகரிப்பு 0 டார்ச்லைட்டுக்கே பிரதமர் இப்போதுதான் வருகிறார்: கமல் 0 மூடநம்பிக்கையை வளர்க்கும் விதமாக பிரதமர் பேசுகிறார்: கார்த்தி சிதம்பரம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

இந்தியர்களை மீட்க சீனா செல்கிறது ராணுவ விமானம்

Posted : திங்கட்கிழமை,   பிப்ரவரி   24 , 2020  20:51:54 IST

வைரஸ் தாக்குதல் அதிகம் உள்ள வுகான் நகருக்கு கல்வி, வேலைவாய்ப்பு, தொழில் நிமித்தமாக இந்தியர்கள் பலர் சென்றிருந்தனர். அவர்களை மீட்கும் முயற்சியில் இறங்கிய மத்திய அரசு ஏர்-இந்தியா சிறப்பு விமானத்தை வுகான் நகருக்கு இரண்டு முறை அனுப்பி 600-க்கும் அதிகமான இந்தியர்களை டெல்லிக்கு அழைத்து வந்தது.

ஆனாலும், வுகான் நகரில் 100-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் வெளியேற முடியாமல் தவித்து வருகிறார்கள். அவர்களையும் மீட்டு கொண்டுவர சி௧7 குளோபல் மாஸ்டர் என்ற மிகப்பெரிய ராணுவ விமானத்தை அந்நாட்டின் வுகான் நகருக்கு மத்திய அரசு திட்டமிட்டிருந்தது.

அந்த விமானத்தில் சீனாவுக்கு நட்பு ரீதியாக மருந்து பொருட்கள், மருத்துவ உபகரணங்களை கொண்டு செல்லவும் கடந்த 20-ம் தேதி மத்திய அரசு முன்வந்தது.

ஆனால், ஜப்பான், உக்ரேன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளை சார்ந்த விமானங்கள் வுகான் நகருக்குள் நுழைய சீன அரசு அனுமதி அளித்தபோது இந்திய விமானம் அங்கு செல்ல சீன அரசு அனுமதி மறுத்துவிட்டது.   

இந்நிலையில், வுகான் நகரில் உள்ள இந்தியர்களை சொந்த நாட்டிற்கு அழைத்துசெல்ல நீண்ட இடைவெளிக்கு பின்னர் சீன அரசு நேற்று அனுமதி வழங்கியுள்ளது.

இதையடுத்து சீனாவுக்கு மருந்துபொருட்களை ஏற்றிக்கொண்டு இந்திய விமானப்படையின் மிகப்பெரிய ராணுவ விமானமான சி௧7 குளோபல் மாஸ்டர் விமானம் வுகான் நகருக்கு நாளை செல்கிறது. இந்த விமானத்தை பயன்படுத்திய வுகானில் சிக்கியுள்ள 100-க்கும்  இந்தியர்கள் வரும் 27-ம் தேதி நாடு திரும்புவார்கள் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...