???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இடியால் சேதமான தாஜ்மஹாலின் பிரதான கல்லறை 0 தியேட்டர்கள் திறக்க அனுமதி வேண்டும்: அரசுக்கு பாரதிராஜா கடிதம் 0 இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,82,143 ஆக உயர்வு! 0 'மத்திய அரசு ரூ.7,500, மாநில அரசு ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்' 0 காய்ச்சல், இருமல் இருந்தால் பஸ்சில் அனுமதி இல்லை: தமிழக அரசு 0 ஒரே நாளில் 1,149 பேருக்கு கொரோனா: 13 பேர் உயிரிழப்பு 0 இது மிகவும் கவனமாக இருக்க வேண்டிய நேரம்: பிரதமர் மோடி 0 சென்னையில் இருந்து வெளியே சென்றால் கட்டாய கொரோனா பரிசோதனை 0 தமிழகத்தில் ஒரே நாளில் 938 பேருக்கு கொரோனா தொற்று உறுதி 0 நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஜூன் 30-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு: உள்துறை அமைச்சகம் 0 இந்தியாவில் கொரோனா பாதிப்பு 173,763 ஆக உயர்வு 0 தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டியது! 0 சின்னத்திரை படப்பிடிப்புகளில் 60 பேர் வரை பணியாற்றலாம்: முதலமைச்சர் உத்தரவு 0 தீபாவும், தீபக்கும் ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள்: தீர்ப்பில் திருத்தம் செய்த உயர்நீதிமன்றம் 0 பொன்மகள் வந்தாள்- விமர்சனம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

'எக்ஸிட் போல்' முடிவுகள் நம்பகமானவையா?

Posted : திங்கட்கிழமை,   மே   20 , 2019  02:49:09 IST


Andhimazhai Image
2019 தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் (எக்சிட் போல்) அனைத்தும் மீண்டும்  பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிபெற்று ஆட்சி அமைக்குமென தெரிவித்துள்ளன. பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சி அமையும் என்றும் கடந்த தேர்தலைப் போல பாஜக தனிப்பெரும்பான்மை பெற இயலாது என்பது தெரியவருகிறது.
 
சரி இந்த எக்ஸிட் போல் முடிவுகளை எந்த அளவுக்கு நம்பலாம்?
 
இதற்குமுன் 2004 மற்றும் 2009 தேர்தல்களில், பாஜகவின் நிலையை தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் மிகைப்படுத்தியிருக்கின்றன. இதேபோல் 2014-ல் குறைத்து மதிப்பிட்டன.
 
2004-ல் தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டுமென்பது மக்களின் பொது எதிர்பார்ப்பாக இருந்தது என கருத்துக் கணிப்புகள் கூறின. தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 252 இடங்கள் கிடைக்குமென தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் சராசரியாகக் கூறின. ஆனால், இக்கூட்டணிக்கு 187 இடங்கள் தான் கிடைத்தன. காங்கிரஸ் ஆட்சி அமைத்தது.
 
2009-ல் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 187 இடங்களும், ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு 194 இடங்களும் கிடைக்குமென சராசரியாகக் கூறப்பட்டது. முடிவில் தே ஜகூட்டணி 159 இடங்களும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி   262 இடங்களும் பெற்றன.
 
2014 மக்களவை தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு சாதகமான சூழல் இருப்பதாக குறிப்பிட்டாலும், அது சுமார் 274 இடங்களை கைப்பற்றுமென கூறின. ஆனால், பாஜகவுக்கு மட்டுமே தனிப்பட்ட 282 இடங்களில் வெற்றி கிடைக்க, அக்கூட்டணி 336 இடங்களில் வென்றது. இதை எக்ஸிட் போல்கள் குறிப்பிட்டுச் சொல்லத் தவறின.
 
இந்தியாவில் மட்டுமின்றி பெரும்பாலான உலக நாடுகளிலும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு தோல்விகரமானதாகவே இருந்திருக்கிறது. இதற்கு, ஆஸ்திரேலியாவில் நடந்த தேர்தலை சமீபத்திய உதாரணமாக  கூறலாம். அமெரிக்க அதிபர் தேர்தலுக்கும் இந்த தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பின் தோல்வி பொருந்தும்.
 
மீண்டும் ஆட்சி பாஜக ஆட்சியே அமையும் என கூறப்படுவது இந்திய சந்தை பொருளாதாரம் தொடர்புடைய, வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு சாதகமாக இருக்கலாம். எனினும், 23-ஆம் தேதி தேர்தல் முடிவு வெளியாகும் வரை எதுவும் உறுதி இல்லை என்பதால் சந்தை பொருளாதாரக் கொள்கைகளில் மாற்றங்கள் நிகழலாம் என்பதில் முதலீட்டாளர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
 
இந்தியா போன்ற நாடுகளில் மக்கள் தங்கள் கருத்துக்களை வெளிப்படையாக பதிவு செய்வதிலும் இங்கு சிக்கல்கள் உள்ளன.
 
எனவே காத்திருப்போம்!... பொறுத்திருப்போம், 23 ஆம் தேதி வரும்!... ரும்!.. ம்..!

English Summary
Are the exit polls reliable?

click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...