???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தயாரிப்பாளருக்கு இம்சை அரசனாக மாறிய நகைச்சுவை நடிகர்! 0 சசிகலா குடும்பம்தான் சோதனைக்கு காரணம்: தீபா குற்றச்சாட்டு 0 போயஸ் இல்லத்தில் ரெய்டு நடத்தியது மனவேதனை அளிக்கிறது: மைத்ரேயன் 0 போயஸ் இல்லத்திலிருந்து லேப்டாப், பென் டிரைவ், கடிதங்கள் பறிமுதல்: விவேக் தகவல் 0 ஜெயலலிதாவின் ஆன்மாவுக்கு செய்யும் துரோகம்: டிடிவி தினகரன் 0 போயஸ் இல்லத்தில் வருமானவரி சோதனை 0 சொகுசுக்கார் இறக்குமதி வழக்கு : நடராஜனுக்கு தண்டனையை உறுதி செய்தது நீதிமன்றம்! 0 திமுக தலைவர் கருணாநிதியைச் சந்தித்த அ.தி.மு.க ஆதரவு எம்.எல்.ஏக்கள்! 0 அறம் படத்தின் கதை என்னுடையதில்லை : கோபி நயினார் 0 தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு 0 நாச்சியார் படத்தில் ஜோதிகாவின் வசனம்: மாதர் சங்கம் எதிர்வினை 0 பேரறிவாளன் உள்ளிட்ட அனைவரையும் விடுவிக்கலாம்: தீர்ப்பு அளித்த நீதிபதி கே.டி.தாமஸ் 0 கருணாநிதியுடன் அதிமுக கூட்டணி கட்சி எல்ஏக்கள் சந்திப்பு 0 நாகை மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது 0 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு ஒத்திவைப்பு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

அறம்: தேசியப் பெருமிதங்களால் புறக்கணிக்கப்பட்டவர்களின் அரசியல்!

Posted : செவ்வாய்க்கிழமை,   நவம்பர்   14 , 2017  05:58:04 IST


Andhimazhai Image

பரதனின் மாளுட்டி என்கிற படம் மட்டுமல்ல, குகைகளில் சுரங்கங்களில் சிக்கிக் கொண்டவர்களை மீட்கும் படங்கள் உலகெங்கும் வந்திருக்கின்றன. அவைகளில் ஒரு சவால் இருக்கிறது. அதைப் போலவே அதை பார்க்கிற பார்வையாளர்களை இருக்கையின் விளிம்புக்கு நகர்த்தி பம்பர் வசூல் நிகழ்த்துகிற தந்திரமும் இருக்கிறது.  ஆனால் இன்றும் நமது தேசத்தில் ஆழ்துளைக் கிணறுகளில் குழந்தைகள் விழுவது ஒரு தொடர்கதை. இன்றும் பாதாள சாக்கடைகளின் அடைப்பை எடுக்க மனிதர்களைத் தான் இறக்கிக் கொண்டிருக்கிறோம். அன்றாடம் நாம் பேசுகிற தேசியப் பெருமிதங்களால் புறக்கணிக்கப்படுகிற ஒரு கூட்டத்தின் வலி மிகுந்த முகம் வெளியே தெரிய வருவதில்லை. வழக்கமான படங்கள் போலல்லாமல் மேற்சொன்ன கோபத்துடன் தொடங்கி முடிகிற இந்தப்  படம் தனது இலக்கை தொடுவதில் மிகப் பெரிய வெற்றியடைந்திருக்கிறது.

 

ஏவுகணை தளத்தின் அருகே அமைந்திருக்கின்ற கிராமமும் அதன் மக்களும் சரியாய் வந்த போதே அதன் கதை முறையாய் துவங்கி விட்டது. பிறகு அந்தக் குடும்பம். பிக்கல் பிடுங்கல்கள் இருந்தாலும் ஒருவரையொருவர் பற்றிக் கொள்வதில் அறிவும் நெகிழ்வு அவர்களுடைய வாழ்வை செலுத்துகிறது. இவைகளை திரைக்கதைக்கான மெடீரியல்களாய் செங்கல் அடுக்காமல் அதை எல்லாம் கலந்த வாழ்வாய் சொல்வதிலேயே நாம் அவர்களுடன் இணைந்து கொள்கிறோம். அது முடியாதவர்கள் புரிந்து கொள்கிறார்கள். இந்த அத்தியாயத்துக்கே இயக்குனரை பாராட்டலாம். 

 

மதிவதனி என்கிற கலெக்டர் கதாபாத்திரத்தின் அறிமுகமோ கதைக்கு வந்து சேரும் வழிமுறையோ எனக்கு உவக்கவில்லை. அந்தக் கதாபாத்திரம் கதையில் தொடர்வது உட்பட.  ஒரே சீரில் தட்டையாய் அமைந்து விட்டது. எல்லாவற்றையும் எல்லோரிடமும் கேட்டுக் கொண்டிருப்பதை மீறி அவர் யார் என்பது வீரியமாய் வெளிப்படவில்லை. இறுகி சமைந்து உட்கார்ந்துவிட்ட அமைப்பு துடிப்புடன் செயற்படுகிறவர்களை வெறுப்புடன் எதிர்கொள்ளுவது படத்தில் வந்திருந்தாலும் போதவில்லை. ஆயினும்  படத்தில் நயன்தாரா  தனது சமநிலையைப் பேணுகிறார். கதையில் யாராவது ஒரு ரட்ஷகன் வந்து மக்களைக் காப்பாற்ற முடியாது என்கிற நிலையில் படத்தில் மக்கள் தான் ஹீரோ என்கிற உறுதியில் அவரது கண்கள் கூட நம்பிக்கையளிக்கிறது. அரங்குகளில் மக்கள் மிகுந்த உற்சாகமடைகிறார்கள்.

 

நிகழ்ந்தவாறிருக்கும் படத்தில் அதன் பல்வேறு கோணங்களை சொல்வதற்காக மீடியா கருத்துக்களை இணைக்க நினைத்தது அவசியமான யுக்தி. ஆனால் சுற்றி வளைத்து தாமதம் செய்து- சொல்வதையும் தெளிவாய் சொல்லாமல் வீணடித்திருக்கிறார்கள். இதென்ன, கதாகாலட்ஷேபமா. நாலுவரி என்றாலும் நறுக்கென்று சொல்லத் தானே சினிமாவில் நேரமிருக்க முடியும்?  அதே நேரம் மைக்கும் காமிராவுமாக திரியும் மீடியா மக்களை வைத்தே பல கேள்விகளையும் கேட்டிருப்பது செம்மை. அதற்கு நல்ல ஒரு குடிகாரன் கூட உதவுகிறார்.

 

நடிகர்களாய் தெரியாத பலரும் படத்திற்கு வலு சேர்த்திருக்கிறார்கள். நடிகர்களாக அறியப்பட்டவர்களும் அப்படியே.

 

நூறு வகை திரைப்படங்கள் உண்டு. அவைகள் வர வேண்டும். மக்களின் திரைப்படத்தில் திரைமொழி வந்திருக்கிறதா என்று ஆராய்வது அப்படிப்பட்ட படங்களை மறுப்பதற்கு சமம். அப்படி மறுப்பவர்களை பொருட்படுத்தக்கூடாது. தனக்கு என்ன நோக்கமோ அதை சொல்வதற்கு சிறப்பான வழிகளைத் தேர்ந்தெடுத்திருக்கிறார் இயக்குனர். அதற்கு ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர், எடிட்டர் உட்பட்ட தொழில் நுட்பக்காரர்கள்  செவ்வனே ஒத்துழைத்திருக்கின்றனர். சிறிய கோணத்திலிருந்து, பிரம்மாண்டமான காட்சி வரை நீடித்தவாறு இருக்கிற துடிப்பு ஒரு பெரிய சாதனை. அந்த அசாதாரணமான வெற்றி குழுவினருக்கு சாத்தியமாகியிருக்கிறது.

 

நாமறிந்துவிட்ட பிரபலங்களைத்  தவிர்த்து பெயரறியாமல் பணி செய்தவாறு இருப்பவர்களுக்கு சினிமாவில் புறக்கணிப்பும் அவமானமும் எல்லாம் மிக சகஜம். நூறு திசையிலும் சுரண்டியவாறு வீங்கிக் கொண்டிருக்கிறது அது. பசியும் பட்டினியும் ஒரு பக்கத்தில் இருக்கும் போது தான் சபைக்கு வந்து விட்டவர்களுக்கு ஒளி வட்டம் பாய்ச்ச அது உயிரைக் கொடுத்துக் கொண்டிருக்கும். விஷச் சூழல்களில் இருந்து எப்படியோ ஒருவாறு தாண்டிக் குதித்து மேலெழுந்து வந்திருக்கிறார் கோபி நயினார்.

 

அவரைப் போன்றவர்களுக்கு சினிமாவில் மரியாதையான இருக்கை ஒரு உரிமையாகும்.

 

- மணி.எம். கே. மணி.click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...