அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 கேப்டன் பதவியிலிருந்து விலகும் விராட் கோலி! 0 கோயில்களில் அன்னதானம் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! 0 ‘அரண்மனை 3’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! 0 ஸ்விக்கி, சோமேட்டோ நிறுவனங்களுக்கு ஜி.எஸ்.டி! 0 கே.சி.வீரமணிக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை 0 நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மனநல ஆலோசனை மையம்! 0 எல்லோர்க்கும் எல்லாம் என்ற திசை நோக்கி நடக்கட்டும் இந்த வையம் - முதல்வர் மு.க.ஸ்டாலின் 0 சுதாகரனின் ரூ.30 கோடி சொத்துகள் முடக்கம்! 0 ஊரக உள்ளாட்சி தேர்தல் : முதல் நாளில் 378 பேர் வேட்புமனு தாக்கல் 0 திருவண்ணாமலையில் கோலகலமாக நடைபெறும் டிடிவி தினகரன் மகள் திருமண விழா! 0 திமுக அரசு பழிவாங்குகிறது - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் 0 உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தனித்து போட்டி! 0 தமிழ் கைதிகளை மிரட்டிய அமைச்சர் ராஜினாமா! 0 ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு எப்போது?: அமைச்சர் விளக்கம் 0 நீட் ஒழிப்பு: அதிமுகவால் முடியாதது, திமுகவால் முடியுமா?
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

ஐ லவ் யூ- அராத்துவின் காதல் சிறப்பிதழ் கட்டுரை

Posted : வெள்ளிக்கிழமை,   பிப்ரவரி   14 , 2014  13:19:21 IST

ஐ லவ் யூ . இந்த ஆங்கில வாக்கியம் அறிமுகமான பின்புதான் 20-ம் நூற்றாண்டு தமிழர்கள் தங்கள் காதலை ‘வாயால்’ நேரிடையாக சொல்ல ஆரம்பித்திருப்பார்கள் என்றே தரவுகள் தெரிவிக்கின்றன. அதற்கு முன்னால் எல்லாம் ஜாடை மாடை , கண்களால் சிக்னல் கொடுப்பது என ஓட்டிக்கொண்டிருந்து, எப்போதேனும் மறைவிடத்தில் வாய்ப்பு கிடைத்தால் கட்டியணைத்து முத்தமிடுவது அல்லது மேட்டரையே முடித்து விடுவது என ஓடிக்கொண்டு இருந்தது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் மேட்டர் முடிவதற்கு முன் இருவரும் ஒரு வார்த்தை பேசியிருக்க மாட்டார்கள்.
 
ஐ லவ் யூ அறிமுகமானதும் உற்சாகமான நம் ஆட்கள், கொள்ளுத்தாத்தா எள்ளுத்தாத்தா முதற்கொண்டு தன் பரம்பரையில் எல்லோரும் சொல்ல முடியாமல் விட்ட காதலை எல்லாம்
சேர்த்து வைத்து சொல்ல ஆரம்பித்தனர். அதிலும் ஜெனடிக் பிராப்ளம் இருக்கும்தானே ? இதயம் முரளி போல விதிவிலக்காக சிலரும் ஐ லவ் யூவை வெளியே சொல்லாமல் செரித்தபடியே மரித்தும் போயினர்.
 
இந்தக் கட்டுரைக்காக திருமணமாகாத நான்கு பெண்களிடம், இதுவரை எத்தனை பேர் உங்களிடம் ஐ லவ் யூ சொல்லி இருப்பார்கள் என்று கேட்டேன். நான்கு பேர் சொன்ன பதிலும் ஒத்துப்போனது.150 முதல் 200 நபர்கள் வரை ஐ லவ் யூ சொல்லியிருக்கின்றனர். எந்த வயதில் உங்களிடம் ஐ லவ் யூ சொல்ல ஆரம்பிக்கின்றனர் என்ற கேள்விக்கு வந்த பதில்தான் செம காமடி. ஆறாவது படிக்கும் போதில் இருந்து என்று சிலரும், 8 வது படிக்கும் போதிலிருந்து சொல்ல ஆரம்பித்தனர் என்று சிலரும் கூறினர்.
 
இந்த லவ் யூ சொல்லும் கோஷ்டிகளில் இருப்பவர் அதே வயதொத்த ஆணா என்றால் இல்லை. ஆறாவது படிக்கும் பெண்ணுக்கு 10 வது படிக்கும் பையனோ 12 வது படிக்கும் பையனோ லவ் யூ சொல்கிறான். இதைக்கூட ஒரு வேடிக்கையாக எடுத்துக்கொள்ளலாம்.பெரிதாக (!) எதுவும் நடந்து விடாது. 25 வயது ஆண்களும் 8 வது படிக்கும் பெண்ணிடம் லவ் யூ 
சொல்கின்றனர்.இதுதான் பேடித்தனம்.இங்குதான் தவறுகள் நடக்க வாய்ப்புள்ளது. இவர்கள் திட்டம் போட்டு செயல்படுபவர்கள்.பெற்றோர்கள் இந்த ஏரியாவில்தான் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது.சமூக ஆர்வலர் ரோலை கழட்டி விட்டு இன்றைய 21-ம் நூற்றாண்டு 2014-ம் ஆண்டு காதலை ஊடுருவிப்பார்ப்போம்.
 
ஆறாம் வகுப்பு படிக்கும்போதில் இருந்தே 200 பேர் மூலம் லவ் யூ சொல்லக்கேட்ட பெண்ணுக்கு லவ் யூ என்ற வார்த்தைக்கு அர்த்தம் மறந்து போய் சுரணையே கெட்டுப்  போயிருக்குமே என்று கேட்டேன். அப்படியெல்லாம் இல்லை, உண்மையிலேயே மனதுக்கு பிடித்தவன் காதலுடன் லவ் யூ 
சொல்லும்போது அந்த “லவ் யூ “ இழந்த சுரணையை மீட்டெடுத்து , வெட்கத்தை சற்று நேரம் உட்சொருகி , ரத்தத்தில் “ஜிவ்” பவுடரை கலந்து , உடலின் பாகங்கள் உடலை விட்டு பிய்த்துக் கொண்டு செல்வதைப்போன்ற உணர்வையும் கொடுக்கத்தான் செய்கிறது என்றார்கள். இந்தக் காரணத்தாலேயே இன்னும் தன் மதிப்பை தன்னகத்தே கொண்டு வெற்றிகரமாக உலகை ஆண்டுகொண்டிருக்கிறது “லவ் யூ”.
 
பள்ளிக்காலத்திலிருந்து ஒரு பையன் பத்துப்-பதினைந்து பெண்களிடம் ஐ லவ் யூ 
சொல்லி நூல் விட்டுப் பார்த்து கல்லூரிக்கு வந்து செகண்ட் இன்னிங்க்ஸ் தொடங்குகிறான்.இந்த காலத்தில் வேறு வழியில்லாமல் லேசாக முதிர்ச்சி பெற்று , திருமணம் செய்து கொள்ள ஏற்றவளா என்ற பார்வையில் பெண்களை காதலிக்க ஒரு பக்கம் தேடிக் கொண்டு, சுற்றுவதற்கும் செக்ஸுக்கும் வேறு சில பெண்களை இன்னொரு பக்கம் தேட ஆரம்பிக்கிறான்.இரண்டிலும் தோல்வி கிட்டிய ஆண்மகன் பெண்களை வெறுக்க ஆரம்பித்து அவளை அசிங்கப்படுத்தும் வேலையில் இறங்குகிறான்.இந்த காலகட்டத்தில் பெண்களின் நிலைமை பரிதாபத்திற்குரியதாகி விடுகிறது. கண் முன்னே ஆயிரத்தெட்டு காதல் விண்ணப்பங்கள் , எதை ஏற்றுக்கொள்வது எதை நிராகரிப்பது என தெரியாமல் குழம்பி , எதையாவது ஏற்றுக்கொள்ளாவிட்டால் வேறு யாரிடமாவது ஓடிப்போய்விடுவார்கள் என பயந்து எவனிடமாவது தற்காலிகமாக மாட்டுகிறார்கள்.  பல பெண்களுக்கு செக்ஸுவல் ஹாரஸ்மெண்ட் என்ற கசப்பான அனுபவம் ஏற்பட்டு விடுகிறது.
கல்லூரிக்காலம் முடிந்து அலுவலகத்திலும் சமூக வலைத்தலங்களிலும் காதல் வேட்டை தொடர்கிறது. ஆண்கள் முந்தைய காலம் போல எல்லாம் எஃபர்ட் எடுத்து இப்போதெல்லாம் காதலிப்பதில்லை என்று ஒரு பெண் என்னிடம் அலுத்துக்கொண்டார். அதாவது , ஒரு பெண்ணை தினமும் ராணுவ ஒழுங்கோடு பின் தொடர்வது , குறிப்பிட்ட நேரத்தில் தினமும் ஏதேனும் ஒரு இடத்தில் அட்டண்டென்ஸ் போடுவது , மிக சிரமப்பட்டு அவளின் முகவரியை கண்டு பிடிப்பது , அவளின் தோழியை கஷ்டப்பட்டு அறிமுகப்படுத்திக்கொண்டு அவளின் மூலம் காதலியை அணுகுவது. ஏதேனும் ஒரு சாக்கை ஏற்படுத்திக்கொண்டு அதிரடியாய் காதலியின் வீட்டிற்குள் நுழைவது , இரவில் திருட்டுத் தனமாய் சென்று பிறந்த நாள் வாழ்த்து
சொல்வது. மொத்தத்தில் இப்போது பசங்க  சோம்பேறி ஆயிட்டாங்க, காதலிப்பதற்காக ஒரு அட்வென்ச்சரும் செய்வது இல்லை, என்று திட்டினார்.
முன்பெல்லாம் காதலனை பெண்கள் தேர்ந்தெடுத்தார்கள்.இப்போதெல்லாம் தேட வேண்டிய அவல நிலை உள்ளது. இதை முன்வைத்தே ஒரு பெண் மேல் பத்தியில்  சொன்னதைப்போல அலுத்துக்கொண்டார்.ஒரு பெண் காதலை ஒத்துக் கொள்ளும் வரையில் அந்தப்பெண்ணுக்கு தெரிந்த ஆணின் கேரக்டர் வேறு, காதலை ஒத்துக்-கொண்ட அடுத்த கணம் அவனிடம் இருந்து வெளிப்படும் அந்தப் புத்தம் புது கேரக்டரைப் பார்த்து மிரண்டு போகிறாள் பெண்.அந்தக்கணமே அவனை வெறுக்கத் தொடங்கி விடுகிறாள். ஆக பிரயத்தனப்பட்டு உருவான காதல் ஒரு நிமிடத்தில் செத்து விடுகிறது. காதல் என்ற கண்றாவி உறவுக்குள் வந்த அடுத்தக் கணம் காதலன் பம்பு செட்டு குழாயில் தண்ணீர் பீய்ச்சி அடிப்பதைப்போல அவளுக்கு ரூல்ஸ் போட ஆரம்பிக்கிறான். பழங்காலத்தை விட தற்போது ஏன் காதலன்கள் தங்கள் காதலியை சந்தேகப்பட்டு வறுத்து எடுக்கிறார்கள்? பழங்காலத்தில் ஆண்களுக்கு திருமணத்திற்கு முந்தைய பாலியல் சுகம் கிடைப்பது கொஞ்சம் அரிதாக இருந்தது. தற்போது ஒரு ஆண் தன் அதிகாரபூர்வமான (!) காதலியை அடைவதற்கு முன் ஏழெட்டுப் பெண்களின் அண்மையையும் அவர்களின் புனிதமான காதலையும் உணர்ந்து விட்டு வருவதால் , இவளும் அப்படி ஏழெட்டு ஆண்களின் உன்னதமான காதலை அனுபவித்து விட்டு வந்திருப்பாளோ? என்ற சந்தேகம் ஒரு காரணமாக இருக்கலாம். மேலும் தானுமே இந்த அதிகாரபூர்வமான காதலியைத்தாண்டி இன்னும் யாரேனும் கிடைப்பார்களா என நாக்கைத் தொங்கப்போட்டுக்கொண்டு அலைகிறோமே ! அப்படித்தானே இவளும் அலைவாள் என்ற படைப்பூக்க சந்தேக மன எழுச்சியே காரணமாக இருக்க முடியும்.
 
அவன் அவளுக்கு ரூல்ஸ் போட ஆரம்பிக்கிறான்.
1) ஃபேஸ்புக்கில் அளவா புழங்கு.
2) அவனுக்கெல்லாம் லைக் போடாதே .
3) இவனுக்கு ஏன் கமெண்ட் போட்ட ?
4) அவனுக்கு ஏன் போன் நம்பர் குடுத்த ?
5) அந்த ஃபிரன்ட்சையெல்லாம் கட் பண்ணு.
6) அவங்க வீட்டுக்கு போகாதே.
7) சிரிக்காதே !
8) லோ நெக் , ஸ்லீவ் லெஸ் போடாதே
9) அவங்க கூட டிரிங்க்ஸ் பண்ணாதே 
10) அந்த பர்த்டே பார்ட்டிக்கு அவசியம் போகணுமா ?
இன்னும் கற்பனைக்கே எட்டாத கட்டளைகளை பட்டியலிட்டால் லட்சத்தை தொடும்.
மொபைல் போன் மூலம் , இணையத்தின் மூலம் அவளை எப்போதும் கண்காணித்துக் கொண்டேயிருக்கிறான்.
 
ஹலோ 
சொல்லுடா
எங்க இருக்க ? (இந்த எங்கே இருக்க என்ற கேள்வியை கேட்காத காதலனே கிடையாது.)
வீட்லதான்.
வீட்லயா ? எதோ பஸ் போற சவுண்ட் கேட்குது ?
வீட்லதான் இருக்கேன்.
வீட்ல சிக்னல் இவ்ளோ தெளிவா கேட்காதே?
வராண்டாவில் இருக்கேன்.
சரி , உன் தம்பி கிட்ட போனை குடு , ஒண்ணு கேக்கணும்.
இந்த நாய் ஏன் தம்பி கிட்ட போனை குடுக்கச்
சொல்லுது என அவளுக்குத் தெரியாதா ? 
அவளும் வீட்டில் இல்லை என்பது வேறு விஷயம் . 
இந்த அளவு நம்பகத்தன்மையோடும் , புரிந்துணர்வோடும்தான் இனறைய காதல் ஓடிக்கொண்டு இருக்கிறது. அதன் விளைவுதான் நல்ல லாபத்தோடு ஓடிக்கொண்டிருக்கும் ஆன்லைன் மேட்ரிமோனி  சைட்கள். தற்போது காதலிக்காதவர்கள் யாரும் இல்லையென்ற நிலையில் ஏனய்யா இத்தனை மேட்ரி மோனி சைட்கள்?
 
காதலனே கணவன் அவதாரம் எடுத்து டார்ச்சர் செய்வதால், அந்த இமேஜினரி காதலன் இடத்தை பூர்த்தி செய்ய இவளுக்கு இன்னொரு ஜாலியான ஆண் தேவைப்படுகிறான். இவர்கள் ஒரு டீலுக்கு வருகிறார்கள். ஒருவரை ஒருவர் டார்ச்சர் செய்யக்கூடாது. இதுதான் முக்கியமான டீல், இதைத்தவிர ஜோடிகளுக்கு ஏற்றார்போல பலவிதமான டீல்கள் உண்டு. 
 
ஆணைப்போல ஒரு பெண்ணுக்கும் செக்ஸ் உணர்வு 18 வயதில் ஆரம்பித்து விடுகிறது. பல்வேறு சமுதாய சூழல்களால் திருமணம் தள்ளிப்போய்க்கொண்டு இருக்கும் நிலையில் , அவள் மனதளவில் செக்ஸ் உறவுக்கு எந்த குற்றவுணர்வும் இல்லாமல் தயாரானால் கூட அவள் திருமணம் செய்து கொள்ளப்போகும் காதலனுடன் அந்த உறவை தவிர்ப்பாள்.  
ஏனென்றால்?
 
திருமணம் முடிந்ததும், ஏதேனும் சண்டையின்போது கல்யாணத்துக்கும் முன்னாலேயே எங்கூட படுத்தவதானே நீ ? என்று அவன் கேட்டுவிடுவான் என்ற பயம்தான்...இல்லை இல்லை அவளின் உறுதியான நம்பிக்கைதான் காரணம். காதல் வாழ்க!
 
(அந்திமழை பிப்ரவரி 2014 காதல் சிறப்பிதழில் வெளியாகி இருக்கும் கட்டுரை)
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...