???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 கமலின் அரசியல் சுற்றுப்பயணம் விவரம் வெளியீடு! 0 அதிமுக குழுக்கள் இணைய உதவிய மோடி: அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் 0 நல்லக்கண்ணுவை சந்தித்தார் நடிகர் கமல்ஹாசன்! 0 ரோபோக்களைக் கொண்டு அரசு பள்ளிகளில் பாடம்! 0 இரு அணிகளை இணைத்தது பிரதமர்தான்: ஓ. பன்னீர்செல்வம் பேச்சு 0 ஐ.டி.ஊழியர் லாவண்யா தாக்கப்பட்ட வழக்கில் மூவர் கைது 0 தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டத்தில் இணைய கர்நாடகா மறுப்பு 0 மு.க.அழகிரிக்கு போலீஸ் பாதுகாப்பு வாபஸ் 0 கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் கைது 0 குஜராத்: மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளித்த தலித் விவசாயி மரணம் 0 காவிரி விவகாரம்: கர்நாடகாவில் ரஜினி உருவ பொம்மை எரிப்பு 0 11400 கோடி மோசடி விவகாரம்: பஞ்சாப் நேஷனல் வங்கி அதிகாரிகள் கைது 0 கனடா பிரதமர் இன்று இந்தியா வருகை 0 காவிரி வழக்கில் உச்சநீதிமன்றத் தீர்ப்பு ஏமாற்றமளிக்கிறது: சீமான் 0 டேங்கர் லாரி வேலைநிறுத்தம் வாபஸ்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

தமிழ் பாடல்கள் பாடியதற்காக ஏ.ஆர். ரஹ்மானுக்கு எதிர்ப்பு!

Posted : சனிக்கிழமை,   ஜுலை   15 , 2017  03:22:58 IST

லண்டனில் நடைப்பெற்ற இசை நிகழ்ச்சியில் தமிழ் பாடல்களை பாடியதற்காக ஏ.ஆர். ரஹ்மானுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவருடைய இந்தி ரசிகர்கள் ட்விட்டரில் பதிவு செய்துவருகின்றனர். 
 
ஏ.ஆர். ரஹ்மான் பங்குபெறும் பிரமாண்ட இசை நிகழ்ச்சி ஒன்று இங்கிலாந்தின லண்டன் நகரில் ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கு லண்டனில் உள்ள பல இந்தியர்களும் வந்திருந்தனர். இந்தியில் உருவான “ஸ்லம்டாக் மில்லியனர்”படத்தில் இசை அமைத்தற்காக அவருக்கு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது. மேலும் அவர் இந்தி மற்றும் பல பிற மொழி படங்களிலும் இசை அமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில் லண்டனில் கடந்த 8ம்தேதி “நேற்று இன்று நாளை” என்ற தலைப்பில் இசை நிகழ்ச்சி நடைப்பெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏ.ஆர். ரஹ்மான் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் பாடப்பட்ட 28 பாடல்களில் 12 பாடல்கள் தமிழ் திரைப்பட பாடல்களும் 16 பாடல்கள் இந்திபாடல்களும் பாடியுள்ளார். ஆனால் வட இந்திய ரசிகர்களோ ஏ.ஆர். ரஹ்மான் தமிழ் திரைப்பட பாடல்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துவிட்டு இந்தி பாடல்களை தவிர்த்துவிட்டதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர்.  மேலும் ஏ.ஆர். ரஹ்மான் வேண்டுமென்றே இந்தி பாடல்களை தவிர்த்ததாகவும் தமிழ் பாடல்கள் எதுவும் எங்களுக்கு புரியவில்லை எனக் கூறியும் நுழைவுச்சீட்டிற்கான பணத்தை திரும்ப அளிக்க வேண்டும் என கூறியும் போராட்டத்தில் குதித்துள்ளனர். 
 
மேலும் ஏ.ஆர். ரஹ்மானின் வட இந்திய ரசிகர்கள் ட்விட்டரில் ஏ.ஆர். ரகுமானுக்கு எதிராக கருத்துக்களை பகிர்ந்துவருகின்றனர். மேலும் ஹிந்தி பாடல்களின் மூலம் தான் ஏ.ஆர். ரஹ்மான் சர்வதேச அளவில் புகழ்பெற்றதாகவும் தெரிவித்துள்ளனர்.
 
இதற்கு ஏ.ஆர். ரஹ்மானின் தமிழ் ரசிகர்கள், ஏ.ஆர். ரஹ்மான் சென்னையில் பிறந்தவர் என்றும், அவர் தமிழ் பாடல்களின் மூலமே இசை வாழ்வை தொடங்கினார் என்றும், உண்மையாக இசையை ரசிப்பவர்கள் மொழியை குறித்து கவலைப்பட மாட்டார்கள் என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் வட இந்தியர்களின் கருத்து, தமிழகத்தின் மீது இந்தியை திணிக்க முயலும் அவர்களின் மனநிலையையே வெளிப்படுத்துவதாகவும் கூறி ஏ.ஆர். ரஹ்மானுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துவருகின்றனர். 
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...