???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு கருப்புக் கொடி காட்டுவோம்:வைகோ 0 கின்னஸ் சாதனை படைத்த விராலிமலை ஜல்லிகட்டு! 0 கொல்கத்தா மாநாட்டில் ராகுலை முன்மொழியாதது ஏன்?: ஸ்டாலினுக்கு தமிழிசை கேள்வி 0 சபரிமலை போராட்டத்தில் எங்களால் வெற்றி பெறமுடியவில்லை: பாஜக ஒப்புதல் 0 எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணி தேசத்துக்கு எதிரானது: பிரதமர் மோடி 0 மீண்டும் முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் ரகசிய யாகம்: மு.க ஸ்டாலின் 0 கொலைகாரர்களுக்கு தி.மு.க. துணையாக உள்ளது: முதலமைச்சர் குற்றச்சாட்டு 0 சிறையில் சசிகலாவுக்கு சிறப்புச் சலுகை வழங்கப்பட்டது: உயர்மட்டக்குழு ஆய்வில் தகவல் 0 'பெரியார் குத்து' பாடலை வெளியிட்ட சிம்பு குழுவுக்கு பாராட்டு! 0 திமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் கைது! 0 முதல்வர் தவறு செய்யவில்லை எனில் எதற்கு பதற வேண்டும்? தினகரன் கேள்வி 0 ஆடிட்டர் குருமூர்த்தி சொல்வது கேலியாக உள்ளது: தம்பிதுரை 0 எதிர்க்கட்சிகளின் பொதுக்கூட்டம் பாஜகவுக்கான சாவுமணி: மம்தா பானர்ஜி 0 கர்நாடகாவில் இன்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் 0 வசூலில் கடந்த ஆண்டை ஓரங்கட்டிய டாஸ்மாக்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ஜெயலலிதா சகிச்சையின் போது உணவு செலவு மட்டும் ரூ.1.17 கோடி: அப்பல்லோ தகவல்

Posted : செவ்வாய்க்கிழமை,   டிசம்பர்   18 , 2018  23:43:40 IST

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. 75 நாட்கள் தீவிர சிகிச்சை அளித்தும், மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
 
இதைத் தொடர்ந்து, ஜெயலலிதாவின் மரணத்தில் எழுந்த சந்தேகங்கள் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. ஜெயலலிதாவின் உறவினர்கள், உதவியாளர்கள், பாதுகாவலர்கள், டிரைவர்கள், அப்பல்லோ மருத்துவர்கள், அரசு மருத்துவர்கள் என அனைத்து தரப்பினரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டு வருகிறது.
 
இந்நிலையில், ஜெயலலிதாவுக்கு 75 நாட்கள் அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பான அறிக்கையை அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம், விசாரணை ஆணையத்தில் தாக்கல் செய்துள்ளது.
 
அதில், 75 நாட்கள் அப்பல்லோவில் தங்கியிருந்த ஜெயலலிதாவுக்கு உணவு அளிக்க ரூ.1.17 கோடி செலவாகியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சரியாக சொல்ல வேண்டும் என்றால், ஜெயலலிதாவுக்கு 75 நாட்கள் உணவு வழங்கியதற்கு ஆன செலவு ரூ.1 கோடியே 17 லட்சத்து 4 ஆயிரத்து 925 ரூபாய் ஆகும்.
 
மேலும், ஜெயலலிதாவுக்கு ஏற்பட்ட பல்வேறு உடல்நலப் பிரச்னைகளுக்கு அப்பல்லோ மருத்துவமனை அளித்த சிகிச்சைக்கு அதாவது மருத்துவச் செலவு ரூ.6.85 கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்து வந்த லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலேவுக்கு ரூ.92.7 லட்சமும், அறை வாடகைக்கு ரூ.24.19 லட்சமும், பிசியோதெரபி சிசிச்சைக்காக சிங்கப்பூர் மருத்துவமனைக்கு ரூ.1.29 கோடியும் செலவிடப்பட்டதாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
மருத்துவமனைக்கான மொத்த செலவுத் தொகையில் இதுவரை ரூ.6.41 கோடி காசோலையாக வழங்கப்பட்டுள்ளது. இன்னும் ரூ.44.56 லட்சம் பாக்கித் தொகை வழங்க வேண்டும் என்றும் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...