செய்தி உங்கள் நண்பருக்கு அனுப்பப்பட்டது
செய்தி உங்கள் நண்பருக்கு அனுப்ப முடியவில்லை. சிரிது நேரம் கழித்து முயற்சிக்கவும்..
நண்பருக்கு மின்னஞ்சல் செய்

காற்புள்ளிகளால் பிரித்து, செல்லுபடியாகும் மின்னஞ்சல் முகவரிகளை உள்ளிடவும்
அதிகபட்ச வரம்பான 200 எழுத்துக்குறியை மீறியது

செய்தியை உள்ளிடவும்
மக்களின் பிரச்சனைகளை எழுப்பியதற்கு மன்னிப்பா? முடியவே முடியாது - ராகுல் காந்தி
நாடாளுமன்றத்தில் மக்களின் பிரச்சினைகளை எழுப்பியதற்கு மன்னிப்பு கோர வேண்டுமா? என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
மன்னிக்கவும், உங்கள் மின்னஞ்சலை எங்களால் அனுப்ப முடியவில்லை. சிறிது நேரம் காத்திருந்து, மீண்டும் முயற்சிக்கவும்.
மக்களின் பிரச்சனைகளை எழுப்பியதற்கு மன்னிப்பா? முடியவே முடியாது - ராகுல் காந்தி
Posted : செவ்வாய்க்கிழமை, நவம்பர் 30 , 2021 17:23:26 IST
நாடாளுமன்றத்தில் மக்களின் பிரச்சினைகளை எழுப்பியதற்கு மன்னிப்பு கோர வேண்டுமா? என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
நேற்று தொடங்கிய குளிர்கால கூட்டத்தொடரில் இருந்து எதிர்க்கட்சிகளைச் சோ்ந்த 12 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்படுவதாக மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நேற்று அறிவித்தார்
காங்கிரஸ் எம்.பி.க்கள் 6 பேரும், திரிணமூல், சிவசேனை கட்சிகளைச் சோ்ந்த தலா இரு எம்.பி.க்களும், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சோ்ந்த தலா ஒரு எம்.பி.யும் கூட்டத்தொடரின் எஞ்சிய அமர்வுகளில் கலந்துகொள்ளக் கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தின் இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. ஆனால், இடைநீக்க உத்தரவை ரத்து செய்ய முடியாது என்று மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்தார்.
எனினும், இந்த விவகாரத்தில் இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி.க்கள் மன்னிப்பு கோரினால் பரிசீலனை செய்யப்படும் என்று நாடாளுமன்ற விவகாரங்களுக்கான துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறினார்.
இதையடுத்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்து, 'நாடாளுமன்றத்தில் மக்களின் பிரச்சினைகளை எழுப்பியதற்கு மன்னிப்பா? முடியவே முடியாது' என்று பதிவிட்டுள்ளார்.
|