???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தந்தை மகன் மரணம்: இன்ஸ்பெக்டர் உள்பட 3 பேருக்கு 15 நாள் நீதிமன்ற காவல் 0 இளம் வழக்கறிஞர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு ரூ.3 ஆயிரம் மாத உதவித் தொகை 0 உலகம் அழியப்போகல.. அழிச்சுக்கிட்டு இருக்கோம்: அறந்தாங்கி சிறுமியின் கொடூர சம்பவம் குறித்து ஹர்பஜன் 0 வன்கொடுமை செய்து படுகொலை: அறந்தாங்கி சிறுமி குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி 0 மேலும் 2 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா தொற்று! 0 கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி 4 பேர் பரிதாப மரணம்! 0 என்ஜினீயரிங் கல்லூரிகளில் வகுப்புகள் ஆகஸ்டு 16-ந்தேதி தொடங்கலாம்: ஏ.ஐ.சி.டி.இ. 0 தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1 லட்சத்தை நெருங்குகிறது! 0 பொதுத்தேர்வு குறித்து ஊடகங்களுக்குப் பேட்டியளித்த ஆசிரியர்கள் மீது பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை 0 இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6 லட்சத்தை கடந்தது! 0 அரசாங்கத்தை விமர்சிப்பதிலிருந்து தன்னை எதுவும் தடுக்காது: பிரியங்கா காந்தி 0 தொடரும் என்.எல்.சி விபத்து: பாய்லர் வெடித்து 8 பேர் உயிரிழப்பு 0 தமிழகத்தில் ஜூலை மாத ஞாயிற்றுக்கிழமைகளில் டாஸ்மாக் கடைகள் இயங்காது 0 சாத்தான்குளம் வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்பட நால்வர் கைது! 0 சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழப்பு: கொலைவழக்குப் பதிவு செய்த சி.பி.சி.ஐ.டி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

விஷவாயு தாக்கி துப்புரவுத்தொழிலாளி மரணம்!

Posted : செவ்வாய்க்கிழமை,   நவம்பர்   12 , 2019  05:17:04 IST


Andhimazhai Image
சென்னையில் உள்ள வணிக வளாகம் ஒன்றின் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும்போது விஷவாயு தாக்கி அருண்குமார் எனும் 25 வயது இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.
 
சென்னை ராயபேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூ வணிக வளாகத்தின் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய அருண்குமார், ரஞ்சித்குமார், யுவராஜ், அஜித், ஸ்ரீநாத் ஆகிய தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டனர்.  தண்டபாணி என்பவர்தான் இவர்களை இந்த பணிக்கு அனுப்பி வைத்தார். இதில் அருண்குமாரும் ரஞ்சித்குமாரும் சகோதரர்கள்.
 
மொத்தம் மூன்று கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்யும் பணி இவர்களுக்கு வழங்கப்பட்டது. ஆனால் இவர்களுக்கு எந்த பாதுகாப்பு உபகரணங்களும் வழங்கப்படவில்லை.
 
இதில் ரஞ்சித்குமார் ஏணி மூலம் மூன்றாவது தொட்டிக்குள் இறங்கியபோது விஷவாயு தாக்கி மயக்கமடைந்தார். அப்போது தம்பியை காப்பாற்ற அவரது அண்ணன் அருண்குமார் கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கினார். இதன்போது அருண்குமார் விஷவாயுதாக்கி உயிரிழந்தார்.
 
அவர்கள் இருவரையும் சக ஊழியர்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில், அருண்குமார் ஏற்கெனவே மரணமடைந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
 
தமிழகத்தில் மலக்குழி மரணங்கள் தொடர்கதையாகிவிட்டன. விஷவாயு தாக்கி உயிரிழப்பவர்களில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.
 
கடந்த 1993 முதல் இன்று வரை இந்தியாவில் கழிவுகளை அகற்றும் பணியின்போது 620 பேர் மரணமடைந்துள்ளனர். அதில் 144 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். குஜராத் மற்றும் உத்தரபிரதேச மாநிலங்கள் இப்பட்டியலில் தமிழகத்துக்கு அடுத்த இடங்களில் உள்ளன.
 
தொடர்ந்து அதிகரித்து வரும் துப்புரவுத் தொழிலாளர்களின் உயிரிழப்பை தடுத்து நிறுத்த, சமூக ஆர்வலர்கள் பல வழிமுறைகளை பரிந்துரை செய்துள்ளனர்.
 
அனைத்து தொழில் துறையிலும் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வந்தாலும், இன்னும் துப்புரவுத்தொழிலை மேற்கொள்ள இயந்திரங்கள் பயன்படுத்தப்படாத நிலை இருக்கிறது. துப்புரவுத் தொழிலில் மனிதர்களை ஈடுபடுத்தாமல் இயந்திரங்களை பயன்படுத்தப்பட வேண்டும் என்று சமூக செயல்பாட்டாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...