அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 3 நிமிடத்தில் 900 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பிய சி.இ.ஓ! 0 பேரறிவாளன் விடுதலை: மத்திய அரசு இனியும் தாமதிக்க கூடாது - நீதிமன்றம் 0 காவல் துறை விசாரணையில் அதிகரிக்கும் இளைஞர்களின் மரணம்! 0 இங்கிலாந்தில் ஒமைக்ரான் வைரஸ் சமூக பரவலாக மாறிவிட்டது: அமைச்சர் தகவல் 0 தனக்கு தானே பிரசவம் பார்த்த பெண் மீது வழக்குப் பதிவு! 0 மத்திய அரசு என்ற ஒன்று இருக்கிறதா? - ஜோதிமணி எம்.பி! 0 இந்தியாவில் கொரோனா மூன்றாம் அலை பிப்ரவரி மாதம் தாக்கும்! 0 நாகலாந்தில் பொதுமக்கள் சுட்டுக் கொலை: மத்திய அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் 0 'பஞ்சாப் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி': அமரிந்தர் சிங் அறிவிப்பு 0 திமுக அரசை கண்டித்து டிசம்பர் 9ல் அதிமுக மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் 0 ரஷ்யாவின் சிறந்த நட்பு நாடாக இந்தியா நிகழ்கிறது - விளாதிமீர் புதின் 0 இந்தியா - ரஷ்யா இடையே 21ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன! 0 கொரோனா விதிமுறையை மீறிய கமல்ஹாசன்: விளக்கும் கேட்கும் தமிழக அரசு! 0 அம்பேத்கர் வழியில் உறுதியேற்போம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! 0 அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு 252 வேட்புமனுக்கள் தாக்கல்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

என்னிடம் ரூ.500 கோடி இல்லை; சில ஆடுகள்தான் இருக்கு: அண்ணாமலை

Posted : புதன்கிழமை,   அக்டோபர்   27 , 2021  10:45:38 IST

தமிழக பா.ஜ.க தலைவராக இருக்கும் அண்ணாமலை, தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக, 'முறைகேடு' புகாரை முன்வைத்தார். அதில், 'தற்போது நலிவடைந்துள்ள நிலையிலுள்ள ஒரு மின்நிலையத்தை, ஆளுங்கட்சிப் பிரமுகர் ஒருவர் வாங்கி, அதன் வாயிலாக, ரூ.5,000 கோடிக்கு மின்சாரம் விற்க, தமிழக மின்வாரியத்துடன் ஒப்பந்தம் செய்திருக்கிறார். ஆளுங்கட்சியைச் சேர்ந்த சில அமைச்சர்களும் லாபத்தை ஈட்டுவதற்காகத்தான் இந்த ஒப்பந்தம் நடக்கிறது.
 
எந்த நிறுவனம், எந்த அமைச்சர் என்ற பெயரை தற்போது வெளியிட விரும்பவில்லை. திரும்பவும் 2006 ௧1 பாதைக்குப் போக மாட்டார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. அப்படிப் போகும்போது, பா.ஜ.க-வுக்கு வேறு வழியில்லை, ஒப்பந்தப் பேச்சு குறித்து எங்களிடம் உள்ள ஆவணங்களை மக்கள் முன் வெளியிடுவோம்' என்று பேசியிருந்தார். இது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
 
அதனையடுத்து, ஆதாரம் இருந்தால் அண்ணாமலை வெளியிட வேண்டும் அல்லது மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி பேசியிருந்தார். அதனையடுத்து, மின்சார வாரியம் சார்பில் வழங்கப்பட்ட பண பட்டுவாடா விவரங்கள் கொண்ட எக்செல் சீட் ஒன்றை அண்ணாமலை ட்விட்டரில் பதிவிட்டார். இருவருக்கும் இடையே வார்த்தைப் போர் உச்சக்கட்டத்தை அடைந்தது.
 
மின்சாரத்துறையில் ஊழல் நடக்கிறது. மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பதவி விலக வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்திவந்தார். இந்தநிலையில், பி.ஜி.ஆர் நிறுவனத்துக்கு எதிராகவும் அண்ணாமலை பேசியிருந்தார். இந்தநிலையில், அண்ணாமலை 500 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்கவேண்டும் என்று பி.ஜி.ஆர் நிறுவனம் அவதூறு வழக்குத் தொடர்ந்துள்ளது.
 
இதுதொடர்பாக அண்ணாமலைக்கு அனுப்பப்பட்ட வக்கீல் நோட்டீஸில், ‘பி.ஜி.ஆர் நிறுவன இயக்குநர் ரமேஷ் குமார் குறித்து ட்விட்டரில் அவதூறாக பதிவிட்டு அவரது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதால் 500 கோடி ரூபாய் நஷ்ட ஈடாக வழங்கவேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை ட்விட்டரில் பதிவிட்டுள்ள அண்ணாமலை, ‘சார், 500 கோடி ரூபாய்க்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கின்றீர்கள். நான் ஒரு சாதாரண விவசாயி. என்னிடம் இருப்பது சில ஆடுகள் மட்டும்தான். தி.மு.க அமைச்சர்களைப் போல ஊழல் செய்து கொடுப்பதற்கு எதுவுமில்லை. நம்முடைய நீதிமன்றங்களின் மீது நம்பிக்கை இருக்கிறது. சந்திப்போம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...