???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 சபரிமலைக்குச் செல்ல முன்பதிவு செய்துள்ள அனைத்து பெண்களையும் சட்டப்படி அனுமதிக்க வேண்டும்: கி.வீரமணி 0 இலங்கை அதிபர் தேர்தல்: கோத்தபய ராஜபக்சே மீண்டும் முன்னிலை 0 சபரிமலைக்கு வந்த 10 பெண்களை திருப்பி அனுப்பியது போலீசு! 0 அரசு தலித் மக்களை திட்டமிட்டு அகற்றுகிறது: பா.ரஞ்சித் 0 பேராசிரியர் சுதர்சன் பத்மநாபன் ஐஐடி வளாகத்தை விட்டு வெளியேற தடை! 0 முரசொலி நில விவகாரம்: உதயநிதிக்கு தேசிய பட்டியலினத்தவர் ஆணையம் நோட்டீஸ் 0 இலங்கை அதிபர் தேர்தல்: ஆளும் கட்சி வேட்பாளர் சஜித் பிரேமதாசா முன்னிலை 0 இலங்கை தேர்தல் : வாக்களிப்பு நிறைவு! 0 15 தொகுதிகளிலும் பா.ஜ.க.வை தோற்கடிப்பதே எங்கள் குறிக்கோள்: குமாரசாமி 0 இலங்கை அதிபர் தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது 0 மாணவி ஃபாத்திமாவின் மரணம் தற்கொலை அல்ல: மு.க. ஸ்டாலின் 0 சங்கத்தமிழன் திரைப்படம் வெளியாகாத பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காது: விஜய் சேதுபதி 0 5 ஆண்டுகள் முழுமையாக நீடிக்கும் கூட்டணி அரசை அமைப்போம்: சரத் பவார் 0 உள்ளாட்சித் தேர்தல் எந்த நேரத்தில் வந்தாலும் சந்திக்கத் தயார்: மு.க.ஸ்டாலின் 0 விரைவில் ஒரே நாடு; ஒரே ஊதிய நாள் திட்டம்: மத்திய அமைச்சர்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

அண்ணா பிறந்த நாளையொட்டி அ.தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டம்!

Posted : செவ்வாய்க்கிழமை,   செப்டம்பர்   10 , 2019  23:31:39 IST

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

"வருகிற 15-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை 3 நாட்கள் பேரறிஞர் அண்ணாவின் 111-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டங்கள் அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும், புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, கேரளா மற்றும் டெல்லி உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் நடைபெற உள்ளன.

பொதுக்கூட்டங்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ள இடங்கள், அவற்றில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுவோர் விவரங்கள் அடங்கிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆங்காங்கே நடைபெற உள்ள பொதுக் கூட்டங்களில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுவார்கள்.

மாவட்ட கழக செயலாளர்கள், தங்கள் மாவட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ள பொதுக்கூட்ட நிகழ்ச்சிகளை கட்சியின் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகளுடன் இணைந்து சிறப்பு பேச்சாளர்கள் மற்றும் கலைக் குழுவினருடன் தொடர்புகொண்டு சிறப்பாக நடத்த வேண்டும்.

தலைமை கழகத்தால் அறிவிக்கப்படாத மற்ற இடங்களிலும், புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மராட்டியம், கேரளா, டெல்லி மற்றும் அந்தமான் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும், 15-ந் தேதி அன்று ஆங்காங்கே அண்ணாவின் உருவ சிலைக்கு அல்லது படத்திற்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கி சிறப்பிக்க வேண்டும்" என கூறப்பட்டுள்ளது.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...