???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 உலகக்கோப்பை கால்பந்து: கொலம்பியாவை வீழ்த்தி ஜப்பான் வரலாற்று சாதனை 0 உலகக்கோப்பை கால்பந்து: போலந்தை வென்றது செனகல் அணி! 0 உலகக்கோப்பை கால்பந்து: எகிப்தை வென்றது ரஷ்யா! 0 சீன பொருட்கள் மீது மீண்டும் கூடுதல் வரிவிதிப்பு: ட்ரம்ப் எச்சரிக்கை 0 10 ஆண்டுகளுக்குப் பின் தமிழில் நடிக்கிறார் கங்கனா ரணாவத்! 0 ஸ்டெர்லைட் ஆலையில் 200 டன் கந்தக அமிலம் அகற்றம்: ஆட்சியர் தகவல் 0 காஷ்மீரில் அமலுக்கு வந்தது ஆளுநர் ஆட்சி! 0 தீர்ப்பை அவதூறாக விமர்சித்தவர்கள் மீது நடவடிக்கை என்ன?: நீதிபதி கிருபாகரன் 0 வளர்ச்சியை எதிர்ப்போர் கண்டிப்பாக கைது செய்யப்பட வேண்டும்: தமிழிசை 0 தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு 0 எட்டு வழிச் சாலை திட்டத்துக்கு எதிர்ப்பு: மாணவி வளர்மதி கைது 0 நிர்மலா தேவி விவகாரம்: கருப்பசாமியின் ஜாமீன் மனு வாபஸ் 0 தினகரனுக்கும் எனக்கும் எந்த கருத்து வேறுபாடும் இல்லை: தங்க தமிழ்ச்செல்வன் 0 காஷ்மீரில் மக்கள் ஜனநாயக கட்சியுடன் கூட்டணி என்ற பேச்சுக்கு இடமில்லை: குலாம் நபி ஆஸாத் 0 காஷ்மீரில் ஆட்சியைவிட தேசிய பாதுகாப்பு முக்கியம்: கூட்டணி விலகல் குறித்து பாஜக விளக்கம்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

மாணவி அனிதா தற்கொலை : தமிழக அரசியல் தலைவர்கள் இரங்கல்.

Posted : வெள்ளிக்கிழமை,   செப்டம்பர்   01 , 2017  08:33:25 IST

நீட் தேர்வை எதிர்த்து சட்டப் போராட்டம் நடத்திய மாணவி அனிதாவின் தற்கொலைக்கு பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள் இரங்கலும் வேதனையும் தெரிவித்துள்ளனர்.

 

திமுக செயல்தலைவர் ஸ்டாலின் :

அனிதா இறப்பு அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது என தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். அனிதாவின் தற்கொலைக்கு தமிழக அரசுதான் பொறுப்பேற்க வேண்டும் எனக் கூறியுள்ள அவர் நாட்டின் எதிர்காலமாக இருக்கும் மாணவர்கள் இதுபோன்ற முடிவை எடுக்கக்கூடாது என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி:

மாணவி அனிதா தற்கொலைக்கு மத்திய, மாநில அரசுகளே பொறுப்பேற்க வேண்டும். அவர்களின் பொறுப்பற்ற தன்னமையே மாணவியின் தற்கொலைக்கு காரணமாக அமைந்துள்ளது. தற்கொலை எந்த ஒரு நிகழ்வுக்கும் தீர்வாக அமையாது. எனவே, மாணவர்கள் தற்கொலை எண்ணத்தை அறவே விட்டொழிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 

பீட்டர் அல்போன்ஸ்:

மாணவி அனிதா உயிர்தியாகம் செய்திப்பதாகவும், அவரது தற்கொலைக்கு பொறுப்பேற்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் காங்கிரஸ் கட்சியின மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

 

டிடிவி.தினகரன் :

நீட் தேர்வை எதிர்த்து போராடிய செல்ல மகள் அனிதாவின் தற்கொலை வேதனையும் அதிர்ச்சியும் அளிப்பதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். நீட் தேர்வை எதிர்த்து உச்சநீதிமன்றம் வரை  சென்றுள்ளாரே என்று அனிதாவின் துணிச்சலை எண்ணி மகிழ்ந்திருந்தேன். அவர் இத்தகைய முடிவை எடுப்பார் என்பதை நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என தன் டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டு உள்ளார்.

 

நடிகர் ரஜினிகாந்த்:

மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தால் என் மனம் மிகுந்த வேதனை அடைந்துள்ளது. அனிதாவிற்கு நிகழ்ந்தது துரதிருஷ்டவசமானது என்றும் இந்த முடிவு அனிதாவின் உச்சகட்ட மனவேதனையை காட்டுகிறது என்றும் ரஜினி கூறியுள்ளார்.

 

நடிகர் கமல்ஹாசன் :

நல்ல மருத்துவரை இழந்து விட்டோம் என்று மாணவி அனிதாவின் தற்கொலை குறித்து கமலஹாசன் பதிலளித்துள்ளார். நீட்டிலிருந்து விலக்கு வருகிறது என்று குடுகுடுப்பை ஆட்டியவர்கள் எங்கோ காணாமல் போயினர் என்று காட்டமாகக் கூறியுள்ள கமல்ஹாசன், மாணவி அனிதாவின் மரணத்திற்கு வெகுண்டெழுந்து போராட வாருங்கள் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...