???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இந்தியாவுடன் இனி பேச்சுவார்த்தை இல்லை: இம்ரான் கான் 0 ப.சிதம்பரத்தை சிபிஐ கையாளும் விதம் மிகவும் வருத்தமளிக்கிறது: மம்தா பானர்ஜி 0 அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடும் சரிவு! 0 ஸ்டெர்லைட் ஆலையில் விஷவாயு தாக்கி 13 ஊழியர்கள் இறந்தது உண்மையா? ஆதாரம் அளிக்க நீதிமன்றம் உத்தரவு 0 ப.சிதம்பரத்திடம் இன்று இரவு முதல் சிபிஐ விசாரணை தொடங்குகிறது! 0 அன்னிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா விளக்கம் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு 0 நிலவின் முதல் படத்தை அனுப்பியது சந்திரயான் - 2 0 காஷ்மீர் பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்வது குறித்து டிரம்ப் மீண்டும் பேட்டி 0 காஷ்மீர் விவகாரத்தை திசை திருப்பவே ப. சிதம்பரம் கைது நடவடிக்கை: கார்த்தி சிதம்பரம் 0 ப.சிதம்பரத்தை வேட்டையாட துடிப்பது வெட்கக்கேடானது: பிரியங்கா காந்தி 0 நீதிக்கு தலைவணங்குவேன்; தலைமறைவாக மாட்டேன்: கைதாகும் முன் பேட்டியளித்த ப.சிதம்பரம் 0 ப.சிதம்பரத்துக்கு எதிராக அதிகார துஷ்பிரயோகம்: ராகுல் காந்தி, மு.க.ஸ்டாலின் கண்டனம் 0 காஷ்மீர் விவகாரம்: டெல்லியில் திமுக இன்று ஆர்ப்பாட்டம் 0 ப. சிதம்பரம் கைதை கண்டித்து தமிழகத்தில் இன்று ஆர்ப்பாட்டம் 0 10,000 ஊழியர்களை நீக்க பார்லே நிறுவனம் முடிவு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

அனிருத் மேல் விஜய் கோபம்!!

Posted : திங்கட்கிழமை,   ஆகஸ்ட்   18 , 2014  02:47:07 IST

 
கத்தி படத்துக்கான பாடல்கள் போட்டுத்தருவதில் மிகவும் சுணக்கம் காட்டுகிறாராம் அனிருத். ஏற்கெனவே கொடுத்த பாடல்களும் சிவகார்த்திகேயனின் டாணா படத்துக்காகப் போடப்பட்ட மெட்டுகள்தாம். எனவே இந்தப்படத்துக்காக என்று புதிதாக அவர் எந்த மெட்டையும் போடவேயில்லை. புதிதாகப் போட்டுக்கொடுத்த சில மெட்டுகள் விஜய்க்குப் பிடிக்கவில்லையாம். அதனால் அனிருத் வருத்தமடைந்தாராம். ஆனாலும் அதைக்காட்டிக்கொள்ளாமல் அடுத்த மெட்டுகளைப் போட்டுத் தருவதாகச் சொன்னவர், சொன்னபடி வேகமாக வேலை செய்யவில்லையாம். டாணா படத்துக்கான வேலைகளில் இப்போது கவனம் செலுத்துகிறாராம். அந்தப்படத்தை விரைவில் வெளியிட தனுஷ் திட்டமிடுகிறார் என்பதால் விஜய்யும் அந்தப்பட வேலைகளை முடித்துவிட்டே நிதானமாக நம் பட வேலைக்கு வாருங்கள் என்று சொல்லியிருக்கிறார். இப்போது திடிரென நான் டாணா வேலைகளை முடித்துவிட்டு யுஎஸ் போகவேண்டும் என்று சொல்லியிருக்கிறார் அனிருத். இந்தத் தகவல் தெரிந்ததும் கொந்தளித்துவிட்டாராம் விஜய். 
உங்களுடைய வேலைகளுக்கு எவ்விதத் தொந்தரவும் கொடுக்காமல் நீங்கள் சொன்னபடியெல்லாம் கேட்டுக்கொண்டிருக்கிறோம். அந்தப்பெருந்தன்மையைப் புரிந்துகொள்ளாமல் யுஎஸ் போகிறேன் என்று பொறுப்பில்லாமல் சொல்லலாமா? எங்கள் படத்திறக்£ன வேலைகளை முடித்துக்கொடுத்துவிட்டு எங்கு வேண்டுமானாலும் போங்கள் என்று சொல்லியிருக்கிறாராம். விஜய்யின் கோபத்தை எதிர்பார்க்காத அனிருத், திட்டமிட்டபடி அமெரிக்கா செல்வதற்கு முன்பாகவே விஜய்க்குப் பிடித்த மாதிரியான மெட்டுகளைப் போட்டுக்கொடுத்துவிட்டால் மற்றவேலைகளை அங்கிருந்தேகூட பார்த்துக்கொள்ளலாம் என்று நினைத்து வேகமாக வேலை செய்துகொண்டிருக்கிறார் என்று சொல்கிறார்கள்.
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...