???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 மருத்துவர்களுக்கு பாதுகாப்பு கோரி மனு: உச்சநீதிமன்றம் இன்று விசாரணை 0 பள்ளி மாணவர்களுக்கு பாடபுத்தகங்கள் வழங்குவதில் தாமதம் 0 பீகாரில் மூளைக்காய்ச்சலால் 100 குழந்தைகள் உயிரிழப்பு! 0 பா.ஜ.கவின் தேசிய செயல் தலைவராக ஜே.பி.நட்டா தேர்வு 0 ஐடி ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்றுவது காலம்காலமாக நடந்து வருகிறது: எஸ்.பி.வேலுமணி 0 தென்தமிழகத்தில் மழை; வடதமிழகத்தில் அனல் காற்று: வானிலை ஆய்வு மையம் 0 மாதவிடாய் பிரச்னையால் சித்த மருத்துவரிடம் சிகிச்சைக்குச் சென்ற மாணவி மரணம் 0 முகிலன் குறித்து இந்திய அரசு விளக்கமளிக்க ஐ.நா மனித உரிமை கவுன்சில் உத்தரவு 0 குடிநீர் தட்டுப்பாட்டுக்கு காரணமான அமைச்சர் வேலுமணி பதவி விலக வேண்டும்: ஸ்டாலின் 0 15 ஆண்டுகளுக்கு பிறகு ஜோடி சேர்ந்த மாதவன் - சிம்ரன் 0 பாகிஸ்தான் மீது இந்திய அணி நடத்திய மற்றொரு தாக்குதல்: கிரிக்கெட் வெற்றி குறித்து அமித்ஷா! 0 நாடு முழுவதும் மருத்துவர்கள் வேலைநிறுத்தம் 0 17-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடக்கம்! 0 வெப்ப அலை காரணமாக ஒரே நாளில் 29 உயிரிழப்பு 0 நீட், ஹைட்ரோ கார்பன் திட்டங்களை கைவிட வலியுறுத்துவோம்: டி. ஆர். பாலு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

அனிருத் சம்பளம் ஒண்ணேமுக்கால்கோடி?

Posted : ஞாயிற்றுக்கிழமை,   ஆகஸ்ட்   31 , 2014  23:44:43 IST

2011 ஆம் ஆண்டு தனுஷின் 3 படத்தில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆனார் அனிருத். மூன்றே ஆண்டுகளில் தமிழ்த்திரையுலகில் முக்கியமான இசையமைப்பாளர் என்கிற இடத்தைப் பிடித்துவிட்டார். முதல்படத்தின் பாடல்கள் வெற்றி என்றதும் அவரைத் தேடி நிறையப்பேர் வரத்தொடங்கினர். அதனால் தன்னுடைய சம்பளத்தையும் தயங்கித் தயங்கி உயர்த்திச் சொன்னார் அனிருத். அவர் தயங்கித் தயங்கிச் சொன்னாலும் அவர் கேட்ட சம்பளத்தைத் தயங்காமல் கொடுத்தனர் தயாரிப்பாளர்கள். இதுவரை அவருடைய சம்பளம் ஒரு கோடி என்று சொல்லப்பட்டது. இந்தச் சம்பளத்தில் ஏற்கெனவே சில படங்களை ஒப்புக்கொண்டிருக்கிறார். வேலையில்லாபட்டதாரி படம் வெளியான பின்பு அவர் தன்னுடைய சம்பளத்தை இரண்டுகோடி என்று சொல்லத் தொடங்கிவிட்டாராம்.

 

இதனால் வேலையில்லாபட்டதாரி படத்துக்கு முன்பே தன்னுடைய படத்துக்கு இசையமைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்த உதயநிதி, அதிர்ச்சியடைந்துவிட்டாராம். அவருக்கு இவர் கேட்கும் சம்பளம் பற்றிக் கவலையில்லை, ஆனால் பல நாட்கள் இதுபற்றிப் பேசியபோதெல்லாம் எதுவும் சொல்லாமல் இருந்துவிட்டு இப்போது இருமடங்காகச் சம்பளம் கேட்கிறாரே என்கிற வருத்தம்தான் காரணம் என்கிறார்கள். உதயநிதி வருத்தப்படுகிறார் என்று தெரிந்ததும், நான் மற்றவர்களிடம்தான் இரண்டுகேட்கிறேன் உங்களுக்கு ஒண்ணேமுக்கால் என்று சொன்னாராம். இப்போது அவரை விட்டுவிட்டு வேறு யாரிடமும் போகமுடியாது என்பதால் அவர் கேட்ட சம்பளத்தைத் தர உதயநிதி ஒப்புக்கொண்டாராம். இதனால் என்றென்றும்புன்னகை அகமது இயக்கத்தில் உதயநிதி நடிக்கும் படத்துக்கான  பணிகளைத் தொடங்கிவிட்டாராம் அனிருத்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...