???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 உச்சநீதிமன்றத்துக்கு இரவில் வழக்கறிஞர்கள் அனுப்பிய கடிதம்! 0 இந்தியா-சீனா எல்லைப் பிரச்சனையில் சமரசம் செய்ய தயார்: அமெரிக்க அதிபர் 0 தமிழகத்தில் புதிதாக 675 மருத்துவர்கள் 3 மாத ஒப்பந்த அடிப்படையில் நியமனம் 0 அயனாவரம் சிறுமி வன்கொடுமை: கைதி சிறையில் தற்கொலை 0 சென்னையில் கொரோனா தொற்று ஏற்பட்டோரின் எண்ணிக்கை 12 ஆயிரத்தை கடந்தது! 0 தமிழகத்தில் ரூ.15 ஆயிரம் கோடி முதலீடு: 17 நிறுவனங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம் 0 2020-21-ம் ஆண்டுக்கான புதிய பட்ஜெட்டை தாக்கல் செய்ய வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல் 0 சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தலைமை செவிலியர் உயிரிழப்பு 0 கொரோனா இன்று: தமிழகம் 853; சென்னை 558! 0 ஜெ. வீட்டை தமிழக முதல்வர் இல்லமாக பயன்படுத்தலாம்!- நீதிமன்றம் 0 தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 17 ஆயிரத்து 728 ஆனது! 0 அரசுக்கு தெரிவிக்காமல் ரயில்களை அனுப்பக்கூடாது: பினராயி விஜயன் 0 ஊரடங்கு தோல்வியடைந்துவிட்டது என்பதை ஒப்புக்கொள்ளுங்கள்: ராகுல் காந்தி 0 புலம்பெயர் தொழிலாளர்கள் நிலை குறித்து உச்சநீதிமன்றம் வேதனை 0 11 நாட்கள் மது விற்பனை வருமானம் ரூ. 1062 கோடி!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

அனில் அம்பானியின் சொத்து மதிப்பு பூஜ்யம்! அதிர வைத்த வழக்கறிஞர்கள்!

Posted : சனிக்கிழமை,   பிப்ரவரி   08 , 2020  06:57:43 IST


Andhimazhai Image
ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் அனில் அம்பானிக்கு நேரம் சரியில்லை!  அவருக்கு எதிரான சீன வங்கிகளின் 680 மில்லியன் டாலர் கடன் நிலுவை வழக்கு ப்ரிட்டன் நீதிமன்றத்தில் நடைபெறுகிறது.  தான் வாங்கிய 680 மில்லியன் கடனை செலுத்த முடியாத நிலையில் இருக்கிறார் அனில் அம்பானி. இவரது வழக்கறிஞர்கள் அங்குள்ள நீதிமன்றத்தில் இதற்கு தந்த விளக்கம் அனைவரையும் திகைப்பில் ஆழ்த்தியுள்ளது.
 
அனில் அம்பானி மிகப்பெறும் தொழில் அதிபராக இருந்தவர்தான், ஆனால் இப்போது அவர் அந்த நிலையில் இல்லை என்றிருக்கிறார்கள் அவர்கள். லண்டன் நீதிமன்றத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) இந்த வழக்கு விசாரணை நடைபெற்றது.
 
சீனாவின் இண்டஸ்ட்ரியல் அண்ட் கமர்ஷியல் பேங்க் ஆஃப் சைனா, சைனா டெவலப்மெண்ட் பேங்க், எக்ஸிம் பேங்க் ஆஃப் சைனா ஆகியவை அனில் அம்பானிக்கு எதிரான தீர்ப்பை கோரியுள்ளன. அனில் அம்பானி, கடந்த 2012-இல் பெற்ற 925 மில்லியன் கடனை திரும்ப செலுத்துவதற்கான தனிப்பட்ட உத்தரவாதத்தை மீறியிருப்பதாக வங்கிகள் குற்றம்சாட்டியுள்ளன. உத்தரவாதத்திற்கு அனில் அம்பானி மறுப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து கடன் ஒப்பந்தத்தின்படி மூன்று வங்கிகளும் அவருக்கு எதிராக வழக்கு தொடுத்துள்ளன.
 
இந்த வழக்கு விசாரணையில் லண்டன் நீதிமன்றத்தில் விளக்கம் அளித்த அம்பானியின் சட்டக்குழு, கடன் பொறுப்புகளை எடுத்துகொண்ட பிறகு அவரது நிகர மதிப்பு பூஜியம்தான் என தெரிவித்துள்ளனர்.
 
ஸ்பெக்ட்ரம் வழங்குவது தொடர்பான இந்திய அரசாங்கத்தின் கொள்கை மாற்றத்தால், இந்திய தொலைத் தொடர்புத் துறை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அம்பானியின் முதலீடுகளின் மதிப்பு 2012 முதல் சரிந்துள்ளதாகவும் கூறினர். 
 
2012-இல் 7 பில்லியன் டாலராக இருந்த அம்பானியின் முதலீடுகள் இப்போது 89 மில்லியனாக குறைந்துள்ளன. அவரது நிகர மதிப்பு பூஜியமாக இருக்கிறது. அவர் செல்வாக்குமிக்க தொழிலதிபராக இருந்தார், ஆனால் இப்போது இல்லை என அம்பானியின் வழக்கறிஞர் கூறியிருக்கிறார்.
 
ஆனால், இந்த விளக்கத்துக்கு மறுப்பு கூறிய வங்கிகளின் தரப்பு, 11 சொகுசு கார்கள், ஒரு ஜெட், படகு, மும்பையில் உள்ள கடற்கரை பங்களாவை குறிப்பிட்டு அம்பானியின் ஆடம்பர வாழ்கை முறையை சுட்டிக்காட்டியது.
 
இதுகுறித்து நீதிபதி கேள்வியெழுப்புகையில், அப்படியென்றால் அனில் அம்பானி திவாலாகிவிட்டாரா? அவரது திவால் நிலை தொடர்பாக இந்தியாவில் மனு தாக்கல் செய்திருக்கிறாரா? என அம்பானி தரப்பு வழக்கறிஞர்களிடம் வினவினார்.
 
அதேசமயம், ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவராக இருக்கும் முகேஷ் அம்பானி மற்றும் அனில் அம்பானியின் மற்ற குடும்ப உறுப்பினர்களும் அவருக்கு நிதியுதவி வழங்க தவறிவிட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
 
இந்த வழக்கில் அம்பானி தரப்பு வாதங்களை முழுமையாக கேட்டறிந்த பின்னர், அவருக்கு பொருத்தமான நீதிமன்ற வைப்புத் தொகையை நீதிபதி விதிப்பார் என தெரிகிறது.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...