???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ரஜினியுடன் நடிக்கும் கீர்த்தி சுரேஷ்! 0 குடியுரிமை சட்ட திருத்த மசோதா: வடகிழக்கு மாநிலங்களில் போராட்டம்! 0 உ.பி.: பாலியல் வழக்குகளை விசாரிக்க 218 விரைவு நீதிமன்றங்கள்! 0 குடியுரிமைக்கு 12 லட்சம் பேர் விண்ணப்பம்: நித்தியானந்தா 0 வெங்காய விலையை கட்டுப்படுத்த திராணி இல்லையா? மு.க.ஸ்டாலின் கேள்வி 0 கர்நாடகா: 12 தொகுதிகளை கைப்பற்றியது பாஜக! 0 விற்பனைக்கு வந்தது எகிப்து வெங்காயம்! 0 ஈழத் தமிழ் அகதிகளுக்கு குடியுரிமை வழங்கப்படாது: மத்திய அரசு 0 ஊராட்சித் தலைவர் பதவி ரூ.50 லட்சத்துக்கு ஏலம்! 0 உள்ளாட்சி தேர்தலுக்கு வேட்புமனு தொடங்கியது! 0 காஷ்மீரில் கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும்: அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் தாக்கல் 0 குடியுரிமை மசோதா மக்களவையில் இன்று தாக்கல் 0 கர்நாடகா இடைத்தேர்தல்: வாக்கு எண்ணிக்கை தொடங்கியது 0 திராவிடம் அழிந்துவருகிறது;ஆன்மீகம் தழைக்கிறது: குருமூர்த்தி 0 மக்களுக்கு பாஜக அரசு துரோகம் செய்துவிட்டது: ப. சிதம்பரம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

அவசரமாகத் தயாராகும் அனேகன்-பின்னணி என்ன?

Posted : செவ்வாய்க்கிழமை,   ஜனவரி   06 , 2015  01:06:21 IST

 
    கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் அனேகன் படத்தை பிப்ரவரி மாதத்தில் வெளியிடத் திட்டமிட்டு வேலை செய்து கொண்டிருந்தார்களாம். இப்போது அந்தப்படத்தை பொங்கல்நாளில் கொண்டுவந்துவிடலாம் என்றெண்ணி வேலைகளை வெகுவேகமாக முடுக்கிவிட்டிருக்கிறார்களாம். திடீரென பொங்கலைத் தேர்ந்தெடுக்க என்ன காரணம்? என்றால், நிச்சயமாக ஐ பொங்கலன்று வராது என்று அவர்கள் நம்புவதுதான் என்று சொல்கிறார்கள். ஏற்கெனவே அஜித்தின் என்னைஅறிந்தால் படம் தள்ளிப்போய்விட்டது. அதனால் ஐ மற்றும் ஆம்பள அகிய இரண்டுபடங்கள் பொங்கல்நாளில் வெளியாகும் என்று இப்போது அறிவிக்கப்பட்டிருக்கிறது. இவற்றில் ஐ படத்துக்கு யு சான்றிதழ் பெறுவதற்காக தில்லிக்குச் சென்றிருக்கிறார்களாம். இன்னும் சான்றிதழ் கிடைக்கவில்லை என்பது மட்டுமின்றி அந்தப்படத்துக்கான இறுதிநேரத்தில் கொடுக்கவேண்டிய தொகை பெரிது என்பதாலும் அந்தப்படம் வெளியாவது தாமதமாகலாம் என்று நம்பப்படுகிறது. அப்படி ஒருவேளை தாமதமானால் ஐந்துநாட்கள் அரங்கு நிறைந்த நிச்சய வசூலை இழந்துவிடவேண்டாம் என்று அனேகன் தயாரிப்பாளர்கள் கணக்குப் போட்டிருக்கின்றனர். இதனால் எப்பாடுபட்டாவது படத்தைத் தயார் செய்யுமாறு கே.வி.ஆனந்திடம் சொல்லப்பட்டிருக்கிறதாம். அவரும் இரவுபகலாக வேலை செய்து கொண்டிருக்கிறாராம். தனுஷ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் காக்கிச்சட்டை படமும் பொங்கலன்று வெளியாகும் என்று சிலநாட்கள் விளம்பரம் செய்யப்பட்டது. அந்தப்படத்தை வெளியிட முயலாமல் தான் நடித்த படம் வெளிவருவதை தனுஷ் எப்படி எடுத்துக்கொள்வார்? என்றால், அவர்தான் இந்த ஏற்பாட்டை முன்னின்று செய்தவர் என்று சொல்கிறார்கள். இதனால் ஒருவேளை ஐ வரவில்லையென்றால் தனிக்காட்டுராஜாதான் என்று நினைத்துக்கொண்டிருந்த ஆம்பள க்குப் போட்டி தயார் என்பது உறுதி என்கிறார்கள்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...