???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தயாரிப்பாளருக்கு இம்சை அரசனாக மாறிய நகைச்சுவை நடிகர்! 0 சசிகலா குடும்பம்தான் சோதனைக்கு காரணம்: தீபா குற்றச்சாட்டு 0 போயஸ் இல்லத்தில் ரெய்டு நடத்தியது மனவேதனை அளிக்கிறது: மைத்ரேயன் 0 போயஸ் இல்லத்திலிருந்து லேப்டாப், பென் டிரைவ், கடிதங்கள் பறிமுதல்: விவேக் தகவல் 0 ஜெயலலிதாவின் ஆன்மாவுக்கு செய்யும் துரோகம்: டிடிவி தினகரன் 0 போயஸ் இல்லத்தில் வருமானவரி சோதனை 0 சொகுசுக்கார் இறக்குமதி வழக்கு : நடராஜனுக்கு தண்டனையை உறுதி செய்தது நீதிமன்றம்! 0 திமுக தலைவர் கருணாநிதியைச் சந்தித்த அ.தி.மு.க ஆதரவு எம்.எல்.ஏக்கள்! 0 அறம் படத்தின் கதை என்னுடையதில்லை : கோபி நயினார் 0 தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு 0 நாச்சியார் படத்தில் ஜோதிகாவின் வசனம்: மாதர் சங்கம் எதிர்வினை 0 பேரறிவாளன் உள்ளிட்ட அனைவரையும் விடுவிக்கலாம்: தீர்ப்பு அளித்த நீதிபதி கே.டி.தாமஸ் 0 கருணாநிதியுடன் அதிமுக கூட்டணி கட்சி எல்ஏக்கள் சந்திப்பு 0 நாகை மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது 0 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு ஒத்திவைப்பு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

அந்திமழை 5 நூல்கள் வெளியீட்டு விழா:

Posted : புதன்கிழமை,   அக்டோபர்   25 , 2017  02:16:58 IST


Andhimazhai Image
ந்திமழை இணையப்பக்கத்தில்  ஆத்மார்த்தி எழுதிய புலன் மயக்கம் தொடரின் கட்டுரைகள் தொகுக்கப்பட்டு புத்தகமாக்கப்பட்டுள்ளன. தமிழ் சினிமா இசையை, இசையினூடாக நம் மனங்களை வசியப்படுத்தி வைத்திருக்கும் பாடல் வரிகளை, ஞாபகங்களின் ஆழ் மனதில் நிரந்தர வசிப்படத்தை அமைத்துக்கொண்டிருக்கும் பாடகர்களின் குரல்கள், குரலிசையின் தாள லயங்கள், ஒவ்வொரு கால கட்டத்தையும் மன்னர்களைப்போல கட்டி ஆண்ட இசை அமைப்பாளர்கள், பாடல் வரிகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் காலத்தால் அழியாத பாடலாசிரியர்கள், அவர்தம் வறுமை, கவிப்புலமை, சாஸ்வதம், ஒரு பாடல் நம்மிடையே கொண்டுவரும் நடிக நடிகைகளின் பிம்பங்கள், அந்த பிம்பங்களின் வழியே மனத்திரையில் வழியும் கடந்த காலங்களின் நினைவுகள், என இன்னும் இன்னும் எவ்வளோ சொல்ல இருக்கிறது ஒரு பாடலைப்பற்றி சொல்லும் போது. சினிமா ஒரு இணை மதமாகிவிட்ட தமிழ் வாழ்வில் ஒரு பாடலை நினைவு கூர்தல் என்பது நம் கடந்த கால வாழ்க்கையின் கீற்றொளியை நினைவு கூர்தல் போலத்தான். கடந்து போன வாழ்க்கை ஒரு பெருமூச்சைப் போல ஏதோ ஒரு பாடலில் ஒளிந்து கொண்டிருக்கிறது என்பது மிகையானது அல்ல. அந்தப் பாடலில்தான் வாழ்ந்து வருகிறார்கள் செங்கோட்டை கங்காதரன் கிட்டப்பாவும், வசந்த கோகிலமும், டி.ஆர்.மஹாலிங்கமும்,  கண்டசாலாவும், ஜி.ராமநாதனும், எஸ்.எம். சுப்பையா நாயுடுவும், திருச்சி லோகநாதனும், ஆர்.கோவர்தனனும், சி.ஆர்.சுப்பாராமனும், விஸ்வநாத ராமமூர்த்தி மஹாதேவனும், ஜமுனா ராணி, ஜிக்கி, சுசீலா, ஜானகி மற்றும் இன்னபிற குயில்குரல்களும், இளையராஜா மற்றும் அல்லாஹ் ரக்கா ரஹ்மானும் என முடிவில்லாத இந்த வரிசையை குறுக்கு வெட்டாக ஆராயும் புத்தகம் புலன் மயக்கம். பொழுதிறங்கி அந்தி சாயும் சனிக்கிழமை வேளையில் புலன் மயங்க வாருங்கள்.
 
 
மேலும் கடந்த ஐந்து ஆண்டுகளில் அந்திமழை இதழில் வெளியான இயக்குநர்கள், நடிப்பாளுமைகள், தொழிநுட்ப வல்லுநர்கள் மற்றும் அறிவிற் சிறந்த ஆன்றோர்களின் நேர்காணல்கள், எழுத்தாக்கங்கள் மற்றும் சிறந்த சினிமா பற்றிய பார்வைகள் என எல்லாமும் மூன்று புத்தகங்களாகத் தொகுக்கப்பட்டுள்ளன. நீ பாதி நான் பாதி, கொஞ்சம் சினிமா; நிறைய வாழ்க்கை, மனசுக்கு நெருக்கமான 40 திரைப்படங்கள் மற்றும் ஆத்மார்த்தியின் புலன் மயக்கம் இரண்டு புத்தகங்கள் என ஐந்து புத்தகங்களின் வெளியீட்டு விழா மூத்த பத்திரிக்கையாளர் மாலன் அவர்களின் முன்னிலையில், அந்திமழை நிறுவன ஆசிரியர் இளங்கோவன் அவர்களின் முன்னிலையில் இயக்குநர் சாய் வசந்த் அவர்கள் புத்தகங்களை வெளியிட்டு சிறப்புரையாற்ற உள்ளார்கள். மேலும் புத்தகங்கள் குறித்து உரையாட இசையமைப்பாளர் ரமேஷ் விநாயகம், கவிஞர் தேன்மொழி தாஸ், இயக்குநர் ரவிகுமார், தென்றல் சிவகுமார் ஆகியோருடன் நீங்களும். உங்கள் வருகை புத்தக வெளியீட்டு நிகழ்வை இன்னும் சிறப்பானதாக்கும். வாருங்கள் சந்திப்போம்.!
 
 
அழைப்பில் மகிழும்,
அந்திமழை இளங்கோவன் மற்றும் ஆசிரியர் குழு. 

 click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...