???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 23 லட்சத்தை தாண்டியது 0 EIA வரைவு அறிக்கை; நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவு 0 தமிழகம்: 5,834 பேருக்கு கொரோனா பாதிப்பு: 118 பேர் உயிரிழப்பு 0 சமூக நீதியைக் காக்கும் தீர்ப்பு: பெண்கள் சொத்துரிமை தீர்ப்பு குறித்து முதலமைச்சர் 0 “30 ஆண்டுகளுக்கு முன்பே பெண்களுக்கு சொத்தில் சமஉரிமை சட்டம் உருவாக்கிய கலைஞர்” 0 சபரிமலை ஐயப்பன் கோவிலில் நவம்பர் 16 முதல் பக்தர்களுக்கு அனுமதி 0 பூர்வீக சொத்தில் பெண்களுக்கும் பங்கு உண்டு; உரிமையை மறுக்க முடியாது! 0 'டிசம்பர் வரை பள்ளி, கல்லூரிகள் திறக்க வாய்ப்பில்லை' 0 மேட்டூா் அணை நீா்மட்டம் 90 அடியை எட்டியது 0 தனி மனித உரிமையை தடுக்கும் இ-பாஸ் திட்டம் தேவையா? மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் 0 காங்கிரஸ் எம்.பி.வசந்தகுமாருக்கு கொரோனா 0 கொரோனா தொற்றால் லட்சுமி மூவி மேக்கர்ஸ் வி.சாமிநாதன் மரணம் 0 இது இந்தியாவா? ’இந்தி’-யாவா?: மு.க.ஸ்டாலின் காட்டம் 0 தமிழகம்: 5,914 பேருக்கு கொரோனா; 114 பேர் உயிரிழப்பு 0 மீண்டும் காங்கிரசில் சச்சின் பைலட்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

அமேசான் பிரைமில் பொன்மகள் வந்தாள் உள்ளிட்ட ஏழு படங்கள்!

Posted : வெள்ளிக்கிழமை,   மே   15 , 2020  10:39:03 IST


Andhimazhai Image
 ஜோதிகா நடிக்கும் "பொன்மகள் வந்தாள்" படம் வரும் மே 29-ஆம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியாக இருக்கிறது. இதை 2டி எண்டெர்டெயின்மெண்ட் சார்பில்  நடிகை ஜோதிகாவும் நடிகர் சூர்யாவும் இணைந்து தயாரித்துள்ளனர்.
 
இப்படத்தில்  நாயகியாக ஜோதிகா நடிக்க, கே.பாக்கியராஜ், ஆர்.பார்த்திபன், பிரதாப் போத்தன், பாண்டியராஜன், தியாகராஜன் என ஐந்து இயக்குநர்கள் நடித்துள்ளனர். 
இப்படத்தை எழுதி இயக்கி இருக்கிறார் ஜே.ஜே ஃபெரெட்ரிக். கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.  ராம்ஜி ஒளிப்பதிவு, ரூபன் எடிட்டிங், கலை இயக்கம் அமரன். 
 
அமேசான் ப்ரைம் வீடியோவில்  பொன்மகள் வந்தாள் படம்  உட்பட வெவ்வேறு மொழிகளில் ஏழு படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருக்கின்றன.  மக்களிடம் பெரும் எதிர்பார்ப்புள்ள ஏழு இந்தியத் திரைப்படங்களை அமேசான் ப்ரைம் வீடியோ நேரடியாக உலகளாவிய அளவில் ப்ரீமியர் செய்யவுள்ளது. 
 
" அமிதாப் பச்சன் மற்றும் ஆயுஷ்மான் குரானா  நடித்துள்ள ஷுஜித் சிர்காரின் "குலாபோ சிதாபோ", வித்யாபாலன்  நடித்துள்ள  "சகுந்தலா தேவி" ,  மாதவன் ,அனுஷ்கா ஷெட்டி நடித்துள்ள நிசப்தம், கீர்த்தி சுரேஷ்  நடித்துள்ள "பென்குயின்" ( தமிழ் மற்றும் தெலுங்கு ) உட்பட ஏழு இந்திய மொழித்திரைப்படங்கள்  மே மாதத்தில் இருந்து  ஆகஸ்ட் மாதத்திற்குள் வரிசையாக அமேசான் பிரைமில்  வெளியிடப்பட இருக்கின்றன. 
 
 
 "அமேசானில் நாங்கள் எங்கள் வாடிக்கையாளர்களின் குரலுக்கு செவிமெடுக்கிறோம். அதன் அடிப்படையில் எங்களது பணிகளை மேற்கொள்கிறோம்" என்று அமேசான் ப்ரைம் வீடியோ இந்தியாவின் கண்டன்ட் பிரிவின் இயக்குநரும் தலைவருமான விஜய் சுப்பிரமணியம் குறிப்பிட்டுள்ளார். 
 
 
மேலும் "கடந்த இரண்டு ஆண்டுகளாக, பல்வேறு மொழிகளில் திரையரங்கில் வெளியாகும் புதிய திரைப்படங்களை, வெளியான ஒரு சில வாரங்களிலேயே பார்க்க, வாடிக்கையாளர்களுக்குப் பிடித்த, அவர்கள் விரும்பும் தளமாக ப்ரைம் இந்தியா மாறியுள்ளது. இப்போது நாங்கள் இதை ஒருபடி மேலே கொண்டு செல்கிறோம். இந்தியாவின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த ஏழு திரைப்படங்கள் பிரைம் வீடியோவில் பிரத்யேகமாக வெளியாகிறது. சினிமா அனுபவத்தை வாடிக்கையாளர்களின் வீட்டு வாயிலுக்கே கொண்டு சேர்க்கிறோம்" என்றும் கூறியுள்ளார். 
 

 click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...