அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தமிழ்த்தாய் வாழ்த்து: கலைஞர் திருத்தியது செல்லும் - நீதிமன்றம்! 0 பஞ்சாப் தேர்தல்: முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பாஜக! 0 இந்தியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டி: தென்னாப்பிரிக்காவுக்கு 288 ரன்கள் வெற்றி இலக்கு! 0 ஹைதராபாத்: ராமானுஜரின் பிரமாண்ட சிலையை திறந்து வைக்கும் பிரதமர்! 0 தமிழகத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு! 0 அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் ஆன்லைனில் செமஸ்டர் தேர்வுகள் - அமைச்சர் பொன்முடி 0 வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரனுக்கு கொரோனா தொற்று! 0 தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான -2வது ஒருநாள் ஆட்டம்: டாஸ் வென்ற இந்திய அணி! 0 வேலையிலிருந்து தப்பிக்க இப்படி எல்லம் செய்ய முடியுமா? 0 டெல்லி இந்தியா கேட் பகுதியில் நேதாஜிக்கு சிலை - பிரதமர் மோடி 0 சாய்னா நேவால் குறித்து அவதூறு பேச்சு; நடிகர் சித்தார்த்துக்கு சம்மன் 0 நடிகர் துல்கர் சல்மானுக்கு கொரோனா தொற்று! 0 தமிழ்நாட்டில் 7 இடங்களில் அடுத்த மாதம் அகழாய்வு பணி தொடக்கம்: மு.க.ஸ்டாலின் 0 3வது அலையில் உயிரிழப்பு எண்ணிக்கைகள் குறைவு: மத்திய அரசு 0 யூடியூபை ஏன் தடை செய்யக் கூடாது? நீதிமன்றம் கேள்வி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

'பஞ்சாப் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி': அமரிந்தர் சிங் அறிவிப்பு

Posted : செவ்வாய்க்கிழமை,   டிசம்பர்   07 , 2021  07:43:33 IST

பாஜகவுடன் இணைந்து பஞ்சாப் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள போவதாக, முன்னாள் முதலமைச்சரும், காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறி புதுக்கட்சியை தொடங்கியவருமான் அமரிந்தர் சிங் கூறியுள்ளார்.
 
இதுதொடர்பாக செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், பாஜக உடன் இணைந்து, பஞ்சாப் சட்டமன்ற தேர்தலை சந்திக்க உள்ளோம். தொகுதி பங்கீடு குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை நடத்தப்படும். பாஜகவை தவிர்த்து எஸ்.ஏ.டி. கட்சியுடன் கூட்டணி அமைக்கிறோம். விரைவில் கூட்டணி வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
 
பஞ்சாப் தேர்தலில், எங்களது கூட்டணிக்கு தான் வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளது. நாங்கள் தொடங்கியுள்ள பஞ்சாப் லோக் காங்கிரஸ் கட்சிக்கு மாவட்ட அளவில் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. அரசியலில் ஆர்வம் உள்ள இளைஞர்கள், மாணவர்கள் மிக எளிதாக எங்கள் கட்சியில் சேர்ந்து கொள்ள முடியும்.
 
மத்திய அரசு, தான் கொண்டு வந்த 3 புதிய வேளாண் சட்டங்களையும் ரத்து செய்து விட்டது. விவசாயிகள் எதிர்பார்க்கும் மற்ற கோரிக்கைகளையும் பிரதமர் மோடி நிச்சயமாக நிறைவேற்றுவார்.
 
பயிர்களுக்கான குறைந்த பட்ச ஆதார விலை கோரிக்கை குறித்து, மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர தோமர் நாடாளுமன்றத்தில் பேசியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக விரைவில் கமிட்டி அமைக்கப்படவுள்ளது. எனவே மத்திய அரசுக்கு விவசாயிகள் ஒத்துழைப்பு தரவேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...